தி ஐ பவுண்டேஷன் 10.7.2011 அன்று ஊட்டி கிளையை திறந்தது. சுலீவன் கோர்ட் எனும்
ஓட்டலில் கிளைத் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடந்தது. சென்னை சங்கர நேத்ராலயாவின்
நிறுவனர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள் தலமை தாங்கி சிறப்பித்தார்,
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணி எனக்கு அளிக்கப்பட்டது.
(left to right) Ramki, Dr. S.S. Badrinath, Founder Chairman - Sankara Nethralaya, Chennai & Dr.D.Ramamurthy, chairman, The Eye Foundation
டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள் தனது பேச்சைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாரா
வண்ணம், மீண்டும் மைக்கில் பேசினார். அப்போது நான் அடுத்த நிகழ்ச்சிக்கான
நினைவுப்பரிசுகளை தயாராக எடுத்துவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, என்னைக் கைகாட்டி, 'உங்களைப்பற்றி தான் டாக்டர் பத்ரிநாத் பேசுகிறார் ' என்றார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் பத்ரிநாத்
என்னையும் மேடையில் வரச்சொல்லி, எனது பணியையும், மும்பை டாக்டர் நடராஜன் அவர்களுடன் 6 வருடங்கள் இருந்தவற்றையும் நினைவுகூர்ந்து அனவைருக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். மேலும், அகில இந்திய கண் மருத்துவர்கள் மாநில மாநாட்டை தொடர்ந்து 12 வருடங்கள் சிறப்பாக நடத்தி வருவது பற்றியும், குறித்த நேரத்தில் நான் அப்ஸ்ட்ராக்ட் புத்தகத்தை சிறப்பாக தயாரித்து வெளியிட்டுவருவதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு மனமார பாராட்டி, அனைவரது கைதட்டலையும் பெறவைத்து கௌரவித்தார். இது ஒரு இன்ப அதிர்ச்சியாக, மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், டாக்டர் பத்ரிநாத் அவர்கள் என்னை பாராட்டியது குறிந்து
பலர் தாங்கள் அடைந்த சந்தோஷத்தை என்னுடன் அன்போடு பகிர்ந்துகொண்டு கைகுலுக்கினர்.
முன்பு மும்பைக்கு வந்திருந்தபோது டாக்டர் நடராஜன் அவர்களின் இல்லத்தில் எடுத்த புகைப்படம். அவர் கண்ணடி பட்டாலே போதும், அவரது தங்க கைகளே என்மீது விழுந்தபோது எப்படியிருந்திருக்கும்?
இவரின் பக்கத்தில் நிற்பதே பெருமையன்றோ?
படம் சஞ்சய், மும்பை