Saturday, May 22, 2010

எஜமானரை பார்த்த

எஜமானரை பார்த்த நாய்போல்

சென்னையில் 15ம் நடைபெற்ற இந்திய பேனா நண்பர்கள் பேரவையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள நான், சீதா மற்றும் ஸ்ரீராமும் சென்று இருந்தோம். முனைவைர், கவிஞர் தமிழச்சி பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார், அப்போது மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. திடீரென பேரவைத் தலைவர் திரு எம். கருண் மேடையில் எழுந்து நின்று யாரையோ உற்று நோக்கிக்கொண்டு இருந்தார். என் கவனம் தமிழச்சியின் பேச்சில் இருந்தது. சீதா, திரு. கருண் பார்க்கும் திசைக்கு திரும்பியது. என் கையை அழுத்தி, ஏங்க நம்ப நடராஜன் சாருங்க என சொல்ல, அவராவது இங்கு வரப்போவதாவது என்று நினைத்துக்கொண்டு நான்திரும்ப, ஆம் அந்த கருப்புச்சிங்கம் வீரநடைபோட்டு கோட்டுசுட்டு மைனர் போல் அவர்நடந்து வர, என் இருக்கையைவிட்டு ஓடினேன்.

என்ன சார் அச்சரியமா இருக்கு நீங்க நாளைக்கு கோவைக்கு வருவதாகத்தானே சொன்னீர்கள் என்றவாரே அவர்மீது பாய்ந்து அவரரை சந்தோஷத்தில் கட்டிக்கொண்டேன்...உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் ராம்கி என்று ஜோக் அடிக்க, நேரே அவரை மேடைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது வீடியோ மற்றும் கேமராக்கள் எங்கள் பக்கம் திரும்பின. மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்ற எம்ஜிஆரின் பாட்டுபோல், எப்போது திரு நடராஜன் சென்றாலும் அவருக்கு மாலையும் மரியதையும் உண்டு. உடனே அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார் திரு. கருண். திருமதி தமிழச்சி அவசராக செல்லவேண்டியிருந்ததால், திரு நடராஜன் அவர்கள் விழா நாயகர் ஆனார்..அவர் மேடையின் பேச வந்தபோது திரு கருண் அவர்களே... என் உடன் பிறவா சகோதரர் ராம்கி அவர்களே,.. என்உடன்பிறந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களே (அவரது சகோதரரும் அவருடன் வந்திருந்தார்) .திருமதி சீதா ராம்கி அவர்களே என்று பேச்சை துவங்கினார்.

மேலும் நாங்கள் யாரும் எதிர்பாராத வகையில் இவர் கலந்து கொண்டு, என் மகன் ஸ்ரீராமுக்கு +2 தேர்வில் முதன்மையாக வந்தமைக்கு பாராட்டு சான்றிதழும். காசோலையும் டாக்டர் நடராஜன் அவர்களின் கைகளால் ஸ்ரீராமுக்கு கிடைத்தது. அப்போது என்னையும் சீதாவையும் மேடைக்கு அழைத்து பாராட்டினார்கள். தமிழச்சிகையால் வாங்க இருந்த பாராட்டு சான்றிதழ், ஒரு மகா தமிழனின் கையால் பெற்றது பெரும் பாக்கியமாக நாங்கள் மூவரும் நினைத்தோம். அவர் மேடையில் இருந்து கீழே இறங்கியதும், துள்ளிப்போய் அவரை வழிஅனுப்பிவைத்தேன். சார் நீங்கள் வருவீர்கள் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. தங்களை எதிர்பாராமல் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது சார் என்று மீண்டும் அவரை கட்டிக் தழுவிக்கொண்டேன்....

காரில் ஏறியபிறகும் அவரை விட்டு செல்ல மனம் இன்றி மீண்டும் அவரது கைகளை குளுக்கியப்படியே சில அடிகள் நான் எடுத்துவைக்க கார் மெல்ல அவர்காட்டும் டாட்டாவோடு விடைபெற்றது. சொந்த சகோதரரை இவ்வளவு சீக்கிரம் விட்டு பிரிகிறோமே என்ற வருத்தத்தில் என் கண்கள் குளமாகின..

RAMKI