Thursday, April 8, 2010

சேமிக்க 10 வழிகள

சேமிக்க 10 வழிகள


Actress Revathi & Ramki at a function held at Mumbai (file photo)

ஒன்று. கொஞ்சமாக செலவு செய்யுங்கள்...காலை பேப்பர் பால் வாங்குவதிலிருந்து துவங்கி எவற்றிலும், கொஞ்சமாக செலவு செய்யமுடியுமோ அந்த அளவுக்கு குறைவாக செலவு செய்யுங்கள். உதாரணம் . வாரஇதழ்கள் கூட இப்போது 20ரூபாய் போய்விட்டது, அதனால் புத்தகங்களை லென்டிங் லைப்ரரி மூலம் வாங்கி படித்தால் பணமும் மிச்சமாகும். நிறைய புத்தகங்களைப் படிக்கமுடியும.

இரண்டு. பட்ஜெட் எனக்கு பிடிக்காத வார்த்தை என்று டயலாக் அடிக்காதீர்கள்.. நமக்கு வரவு எவ்வளவு, செல்வு எவ்வளவு, எந்த மாதம் எதை கட்டவேண்டும், என்பதெல்லாம் அமைதியாக குடும்பத்தாரோடு அமர்ந்து ‘குடும்ப பட்ஜெட்’ தயாரித்துக்கொள்ளவும். அப்போ தெரியும், எவை வேண்டாத செலவு, எதில் எவ்வளவு பணம் சேமிக்கலாம் என்பது, வங்கி கணக்கை ஆரம்பித்து அதில் சேமிக்கலாம். அல்லது மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை (ஆர்டியாக) கட்டலாம். அல்லது மொத்தமாக பிக்ஸட் டெபாசிட் செய்யலாம்.

மூன்று. மொத்தமாக பல பொருட்களை வாங்கினால் நிறைய பணம் மிச்சம் செய்யலாம். மொத்தமாக சமைத்தால் கேஸ் முதல் எண்ணெய் வரை நிறைய மிச்சப்படுத்தலாமே. அதற்காக மொத்தமாக வாங்கிப்போட்டுவிட்டு சீக்கிரம் கெட்டுவிட்டது என்று குப்பையில் கொட்டக்கூடாது,. ஆகவே மொத்தமாக எதை வாங்கி முழுவதுமாக உபயோகிக்கமுடியுமோ அதைத்தான் வாங்கவேண்டும்.

நான்கு. எதை வாங்குவதாக இருந்தாலும், எஙகு விலை மலிவாக உள்ளது என்று பல கடைகளில் ஏறி, இறங்கி பார்த்து வாங்கவேண்டும். சில பொருட்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். அல்லது 50 சதவிதம் தள்ளுபடி என்று வரும் போது, அச்சமயத்தில் வாங்கி பணத்தை சேமிக்கலாம். அச்சமயம் பொருளின் தரத்தை பரிசோதித்து கவனமாக வாங்கவேண்டும்.

ஐந்து. பயன்படுத்திய பொருட்களை வாங்கியும் பணம் சேமிக்கலாம். குறிப்பாக கார், டூ வீலர், வீடு, நல்ல பர்னிச்சர்கள் போன்றவை பயன்படுத்தியிருந்தாலும் பல பொருட்கள் மிக நன்றாக இருக்கும். ஒரு சிலர் ஊரைவிட்டு அடுத்த ஊருக்கோ அல்லது அடுத்த நாட்டுக்கோ போகும் போது அதிக விலை கொடுத்து வாங்கிய பல பொருட்களை குறைந்த விலையில் அவசரத்திற்கு விற்க முயல்வார்கள். தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்வார்கள். இப்படி நேரிடையாக விற்பர்களிடம் வாங்கினால் பணம் நிச்சம் குறைவாக செலவாகும்.

ஆறு. முடிந்த வரை கடன் வாங்குவதை தவிரிக்கவும். அதுபோன்று பல கிரிடிட் கார்டுகளை வைத்து, அங்கும் இங்கும் புரட்டிப்போட்டு செலவு செய்து பலர் திண்டாடுகிறார்கள். சிலர் ஏகப்பட்ட வட்டியை வங்கியில் கட்டுவார்கள்.

ஏழு. சேமிப்பு. முடிந்த வரை பணத்தை தினமும் கொஞசம் சேமியுங்கள்...வாரக்கடைசியில் பாருங்கள் அல்லது மாசக்கடைசியில் பார்த்தால் கணிசமான பணம் சேர்ந்திருக்கும். நாளையிலிருந்து சேமிப்போம் என்று தள்ளிப்போட்டால் எதுவும் சேமிக்கமுடியாது, இன்றைய தினத்திலிருந்து, ஏன் இப்பொழுதிலிருந்து சேமிப்பேன் என்று வைராக்கியம் வைத்து சேமிக்க வேண்டும். சம்பளத்திலிருதோ அல்லது வங்கி கணக்கிலிருந்தோ நேரடியாக சேமிப்பது போல் ஏற்பாடு செய்தால் நிறைய சேமிக்கலாம். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா?

எட்டு. பெரிய பெரிய கடைகளில் ஏறி. பிராண்ட்ட் ஐடத்தில் பணத்தை அதிகம் செலவு செய்வதை விட்டுவிடுங்கள். தேவைக்கு ஏற்றபார் போல் வர்ங்குங்கள். சில பொருட்களை, மால் மற்றும் சுப்பர் மார்க்கெட் போன்றவற்றில் வாங்குவதை விட உழவர் சந்தை போன்ற இடங்களிலோ, நியாய விலை கடைகளிலோ வாங்கி பணத்தை சேமிக்கலாம். நேரடி கடைகளில் வாங்கும் போது விலை கம்மியாக இருக்கும்.


ஒன்பது. முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். குடும்பத்தோடு ஓட்டலுக்கு சென்றால் கேட்கவேண்டுமா செலவுக்கு?. காபி, டீ என்றாலும் வீட்டில் செய்து சாப்பிடவும். பாஸ்ட் புட், பீசா, பர்கர் போன்றவற்றிற்கு தற்போது மவுசு அதிகம். (அண்மையில் பீசா வர்ங்கியபோது அதன் விலை ரூ300க்கு வந்த்து, மூன்று பேர்கள் சாப்பிட்டும் வயிறு நிறையவில்லை என்பது அடுத்த விஷயம்). சத்துள்ள உண்வு பொருட்களையே சாப்பிடவும். முடிந்த வரை பச்சைகாய்கறிகளை சேர்த்துக்கொள்ளவும். பந்தாவுக்காக சாப்பிடில் அதிக பணம் செலவு செய்யவேண்டாமே.


பத்து. அதிக விலை என்று தெரிதால் எப்படிப்பட்ட பொருளாக இருந்தாலும் வாங்கவேண்டாம். பந்தாவுக்காக எந்த பொருளையும் வாங்கவேண்டாம். எதையும் சிக்கனமாக பயன்படுத்தவும். ஷேம்பு முதல், பெட்ரோல், தண்ணீர் வரை சிற்று சிக்கனமாக உபயோகிக்க பழகிக்கொள்ளுங்கள். மின்சாரத்தை கொஞசமாக செலவு செய்யுங்கள், வேண்டாத லைட், மின்விசிறி, கம்யூட்டர், டிவி, ஏசி போன்றவற்றை அணைத்துவிடுங்கள். சின்ன சின்ன விஷயத்தில் கவனமாக இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு எல்லாவற்றிலும் சேமித்தால் நிறைய பணம் நம்மை அறியாமலே சேமிக்க முடியும். ஆகவே, இன்றிலிருந்து உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும. வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும் சேமிப்பீர், மகிழ்ச்சியாடு வாழ்வீர். சிக்கன சிகாமணிகளே.............

RAMKI

திறமையாக வேலை செய்வது எப்படி??



திறமையாக வேலை செய்வது எப்படி??
How to Work Efficiently?
உங்களது டேபிளை சுத்தமாக வைத்திருக்கவும். அவ்வப்போது பேப்பர்களை பைல் செய்துவிடவும். அல்லாவிடில், வேண்டும்போது தேவையான பேப்பரை தேடுவதில் நிறைய நேரத்தை வீணடிக்கவேண்டியிருக்கும். வேண்டிய, வேண்டாத பைல்களையோ பேப்பர்களையோ, டேபிளின் மீது குப்பைபோல் அங்கும் இங்கும் போடக்கூடாது. ஒழுங்காக அடுக்கிவைக்கவும்.
டு டூ லிஸ்ட் / என்னென்ன வேலைகளை செய்யவேண்டும் என்று ஒரு பட்டியல் கோட்டு கண் எதிரில் வைத்தக்கொள்ளவும். முடிந்தால் எதை முதலில் செய்யவேண்டும், எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை ‘ஹை லைட்’ செய்துகொள்ளவும். ‘டெட் லைன்’ இருந்தால், இதையும் குறித்து, குறிப்பிட்ட நாளில் முடிக்கவும்.

மற்ற சக ஊழியர்களிடம் சொல்ல வேண்டிய வேலையாக இருந்தால், காலைவந்ததும், என்னென்ன இன்று செய்யவேண்டும். எந்த நாளுக்குள் செய்துமுடிக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடவும். முடிந்தவரை ஒரு பேப்பரில் எழுதி கொள்ளச்சொல்லுங்கள.. இல்லையெனில் 10ல் நான்கை மறப்பர். மற்றவர்களின் ஆலோசனைகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு கொடுங்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்த சகஊழியர்களை, மனதார பலரின் முன்பு பாராட்டவும்,. ஊக்கிவைக்கவும் தயங்கக்கூடாது. கோபம் அதிகமானால் டென்ஷன் ஆகாமல், கத்தாமல், அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடவும்.
இப்படி செய்தால்/இருந்தால் வேலை இன்னும் எளிதாக சீக்கிரம் செய்யமுடியும் என நீங்கள் நினைத்தால், உங்கள் மேல் அதிகாரிகளிடம் உங்கள் கருத்தை தைரியமாகச் எடுத்தச்சொல்லி, இப்படி செய்தால் இன்னென்ன பய(ல)ன்கள் ஏற்படும் என்பதையும் சொல்லுங்கள்.
எடுத்த ஒரு வேலையை முழுவதுமாக முடித்துவிட்டு, அடுத்தவேலைக்கு செல்லவும். எதையும் அரைகுறையாக செய்யக்கூடாது. எந்த வேலையை எடுத்தாலும் சிறப்பாக செய்யுங்கள். அதில் உங்களது தனி ‘டச்’ தெரியவேண்டும். அந்த அளவுக்கு யோசித்து, யோசித்து எந்த காரியத்தையும் செய்யவும்.


உங்களது கம்யூட்டர் அல்லது எலெக்ட்ரானிக் ஆர்கனைசரில் முக்கியமானவற்றை பதிவு (SAVE) செய்துவிடவும்.
எடுத்த வேலையை சரியாக செய்துள்ளோமா என்று கவனமாக பார்க்கவும். அவசரத்தில் நம்மை அறியாமல் பிழை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக படித்து, சரிபார்த்து, பிறகு கொடுக்கவும். எதிலும் இலக்கணப்பிழை இல்லாமல் நாம் சொல்லவேண்டிய விஷயத்தை சுருக்கமாக எழுதவும். வளவளவென்று எழுதினால் யாரும் படிக்கமாட்டார்கள்.
உங்கள் நேரம் உங்கள் கையில், ஆகவே எந்த நேரத்தில் எந்த வேலையை செய்யவேண்டும் என்பதையும் திட்டமிட்டால் நேரம் வீணாகாது. வெளியே செல்வதாக இருந்தால் சக ஊழியர்களிடம் செல்லும் இடம் மற்றும் எப்போது திரும்ப வருவீர்கள் என்பதை சொல்லிவிட்டு செல்லவும். எதற்கு எடுத்தாலும் சக ஊழியர்களை தகவல் கேட்டு தொல்லைகொடுக்க்கூடாது. ‘எக்ஸ்டென்ஷனில்’ போன் செய்து அந்த நம்பர் என்ன, இந்த நெம்பர் என்ன என்று கேட்பதற்கு பதில், கம்யூட்டரில் POP-UP-ஐ இன்ஸ்டால் செய்யச்சொல்லவும். இதனால் இருவரும் வேண்டிய தகவலை எளிதில் போனின் உதவியின்றி பெறமுடியும். நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

திறமையாக வேலை செய்யவேண்டுமானால், நடுவே சிறுசிறு ‘பிரேக்’ தேவை. ஒரே இட்த்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலைசெய்தல் மற்றும் கம்பயூட்டரை காலை முதல் இரவு வரை பார்த்து வேலைசெய்தால், தலைவலி ஏற்படும். நடந்து மாடிக்கு செல்வது, காபி குடிக்கச் செல்வது, சாப்பிட செல்வது போன்றவை உங்களுக்கு கொஞ்சம் ரிலேக்ஸ் தரும். எப்போது நல்ல மூடில் இருக்கிறீர்களோ அப்போது கடினமான வேலையை செய்யத் துவங்கவும். அவ்வப்போது முகம் கழுவி பிரஷ்ஷாக இருக்கவும்.

வீட்டுக்கு செல்வதற்கு முன் டேபிளை சுத்தமாக வைத்துவிட்டுச் செல்லவும். ஒரு சில வேலைகள் மிகச்சிறியதாக இருக்கும். மறக்காது என்று நினைத்தாலும், திடீர் வேலைபலு காரணமாக மறக்க நேரிடும். ஆகவே, நாளைக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை இன்றே எழுதிவைத்துவிட்டு சென்றால், எதையும் மறக்காமல் செய்ய முடியும்.

பணம், மின்சாரம், தண்ணீர், பேப்பர், பேச்சு. என அனைத்திலும் சிக்கனம் தேவை.


ராம்கி

Tuesday, April 6, 2010

என்றும் 16 போல், மகிழ்ச்சியாக இருப்பது எப்படி..எப்படி....??

(ஏ.ண்ணா, எப்படிண்ணா எப்பவும் இளமையா இருக்கிறது... சொஞசம் சொல்றேளா? என சீதா மாமி கேட்க, கிட்டு மாமா காபியை ஆத்திண்டு இப்படி எடுத்து விடறார்.......)

இ ப் ப டி..இ ப் ப டி - உங்களோட நிறம், எடை, இடை, வயது, உயரம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாதீங்கோ. மனதை எப்போதும் இளமையாக, பாஸிடிவ்வாக வச்சுக்கோங்கோ....




ஷிப்ஸ்
- குதுகுல நண்பர்களை தேர்வு செய்து அவாளோட பழக கத்துகோங்கோ. நெகட்டிவ்வாக சிலர் எப்போதும் புலம்புவா இல்லயோ?. அவாளையெல்லாம் அப்படியே “போதும்டா சாமினு” ஓரம் கட்டிடுங்கோ


கத்துகுங்கோ - கற்றது நம் கை மண் அளவு தானே... எதையாவது எப்போதும் கத்துகிட்டேயிருங்கோ.....கம்யூட்டர் கிளாஸ், அனிமேஷன், யோகா, பாட்டு, நடனம், இசை, தையல், ஓவியம், தோட்டக்கலை, சான்றிதழ் படிப்பு, மேற்படிப்பு என்று எதையாவது வாழ்நாள் முழுவதும் கத்துகிட்டேயிருங்கோ. மூளைக்கு வேலை கொடுத்துகிட்டேயிருங்கோ... அதை சும்மா விட்டுட்டா அவ்வளவு தான், எதையாவது வேண்டாத்தை எல்லாம் கற்பனை செஞ்சுண்டு நம்மை நிம்மதி இல்லாம ஆக்கிடுமோல்யோ.. சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும் என்ஜாய் பண்ணுங்கோ. எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக்காதீங்கோ... சமநிலையோட இருங்கோன்னேன்



செத்த (கொஞசம்) சிரிக்கப்படாதா - ம்..ம்...இன் இன்னும் கொஞ்சம் சத்தமா.....சிரிச்சுண்டே இருக்கப்படாதா?. (இதைத்தான் எதிர்பார்த்தேன்). உங்க கண்ணீர் வரும் வரை வாய்விட்டு சிரியுங்கோ.. காசா பணமா ஓய்.... ஜோக் அடிச்சு உங்களை சிரிக்க வைச்சுகிட்டேயிருக்கும் நண்பர்களோ, நண்பிகளோ (ஜொல்லு விடற பார்ட்டிகிட்டே மாட்டிகிடாதீஹ) நிறைய பேர் இருக்காள்யோ...அவாளோட நிறைய நேரத்தை ஜாலியா, நல்வழியில் செலவுசெய்யுங்கோ.....

உன் கண்ணில் ஜலம் வந்தால்.. - துக்கம், சோகம், தர்மசங்கடம் போன்ற நிலைகள் வரத்தான் ஓய் செய்யும். தடுக்க முடியாதோல்யோ? அழும்போது அழுது, அதை துடைச்சுடுங்கோ...நடந்த கசப்பான சம்பவத்தையே எப்பவும் நினைச்சுண்டு, கப்பல் கவிழ்தாப்லே ஓரமா உட்காராதீங்கோ...(துன்பம் வரும் வேலையிலும் சிரிங்கோன்னு வள்ளுவர் வாள் சொல்லியிருக்காள்ளயோ....அப்புறம் என்னவோய்..)
அடுத்த பக்கமும் இளமை திரும்புகிறது

உங்கள் விருப்பம் - உங்களுக்கு விருப்பமானவற்றோடு இருங்கோ.. அது உங்கள் குடும்பம், நண்பர்கள், செல்லப்பிரயாணி, பாட்டு, தாவரங்கள், மீன்கள், உடை, உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... எப்போதும் FRESHஷாக இருங்கோ. பிடித்த உடைகளை போட்டுகோங்கோ. சென்டை ஸ்பிரே செஞ்சுண்டு கமகமனு இருங்கோ...இயற்கை அழகை ரசிக்க கத்துகோங்கோ. எல்லாத்தையும் மனதார ரசிக்கவேண்டியது அவசியம்ன்னா. (ஆஹா, என்னை என்னமா ரசிக்க ஆரம்பிச்சுட்டேள் பாத்தேளா)

நலம் தானா? (பி...பி....பீ,,, பி...பி....பீ........). –
உடல்நலம் நல்லா இருக்கா, இன்னும் பாதுகாப்பா வச்சுகோங்க
உடல்நலம் சரியில்லயா, சொஞ்சம் இம்புரூவ் பண்ணிக்கோங்கோ
இம்புரூவ் பண்ணமுடியாதா, மத்தவங்களோட உதவியை நாடுங்கோ

உலகம் பிறந்தது - உலகம் பிறந்தது நோக்கே நோக்குதான்டீமா.....கோவில், குளம், பூங்கா, சர்க்கஸ், மார்க்கெட், மால் னு போங்கோ...தினமும் 30 நிமிடமாவது நன்னா வேகமா நடந்துட்டுவாங்கோ.... முடிந்த விளையாட்டை விளையாடுங்கோ..... பக்கத்தில் உள்ள ஊருகளுக்கு குடும்பத்தோடு வார விடுமுறைநாட்களில் போய் தங்கிவிட்டு வாங்கோ....வம்பு வரும் இடத்திற்கோ, பிரச்சனை அல்லது அவமானம் ஏற்பட வாய்ப்புள்ள இடத்திற்கு தயவு செய்து போகாதீங்கோ

அன்பு நான் அடிமை - அன்புக்கு நான் அடிமைனு பாடுங்கோ...எல்லோரிடத்திலும் புன்முறுவலோட, செல்லம் செல்லம்னு கொஞ்சி அன்பு செலுத்துங்கோ.........உங்களோட அன்பை மத்தவாகிட்டே அடிக்கடி நன்னா வெளிப்படுத்துங்கோ......”

இப்படி இருந்தேள்னா, “அப்படியிருந்த நான்”, “இப்படி ஆயிட்டேன்னு” ரிவர்ஸ்லே பிட் ஓட்டலாமில்லயோ சீது??

அட இத்தனை சீக்கிரத்திலே நாம் பேசினதை படிச்சிட்டூ அவ்வாள் எல்லாம் எப்படி இளமையா ஆயிட்டா பாத்தேளா?....மொகத்திலே சந்தோஷத்தை பாருங்கோண்ணா?? என்றவாறு சீதாமாமி டிவி சீரியல் பார்க்க துவங்கினாள். எ........ எஸ்.......... கே........... ப்...............

ராம்கி

Monday, April 5, 2010

உங்கள் கருத்துக்கள் [Feed Back] சபை ஏறுமா?

எந்த ஒரு தினசரி அல்லது பத்திரிகையை எடுத்தாலும் அதில் வாசகர்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் எழுதச்சொல்வார்கள். நிறை, குறைகளை எழுதலாம். பிடித்தது-பிடிக்காதது பற்றி எழுதலாம். அல்லது நீங்கள் எந்த மாதிரியாக செய்திகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை மனம் திறந்து எழுதலாம். சில பத்திரிகைகள் சிறந்து விமர்சனத்திற்கு சன்மானம் கொடுக்கிறார்கள். ஏன்?

விமானத்தில் செல்கிறோம். அப்போதும் ஒரு சிறிய எளிமையான Feed Back form கேள்விகளுக்கு (அவர்களது சேவைபற்றி) பதில் அளிக்கச்சொல்வர்கள். பத்து டிக் மட்டும் அடிக்கும்படியாக இருக்கும். ஓட்டலில் தங்கிவிட்டு நம் பில்லை கட்டிமுடித்ததும் ஒரு சிறிய Feed Back form ஒன்றை கொடுத்து நமது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து சொல்லச் சொல்வார்கள். ரயில் நிலையங்களிளும்....ஏன் ஓடூம் ரயிலில் கூட (கார்டு) கடைசி பெட்டியில் ஆலோசனை புத்தகம் உள்ளது. ஒரு திரைப்படம் வெளியானது Feed Back எப்படி என்று கேட்பார்கள். Feed Backல் இரண்டு வகையான பதில் கிடைக்கும். ஒன்று பாஸிடிவ் Feed Back மற்றும் நெகடிவ் Feed Back, இரண்டுமே முக்கியமாகும்.
இவை எதற்கு? இதனால் என்ன பயன்ஈ? குறிப்பாக அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் இநத் Feed Back form வினியோகிக்கப்டும். நிறைகள்-குறைகள் எல்லாவற்றிலும், எல்லோரிடமும் உள்ளது, குறைகளை எல்லோரும் நிவர்த்தி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். நிறைய இடங்களில் ஆலோசனை அல்லது புகார் புத்தகம் வைக்கப்பட்டிருக்கும்.


உங்கள் கருத்துக்கள் [Feed Back] சபை ஏறுமா?

நமது கருத்த்துகளை எல்லாம் ஒன்று சேர்த்து (Constructive feed backs) பார்த்தால், பலம் எது, எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், எதை எதிர்பார்க்கிறார்கள், அடுத்த முறை எதை புதுமையாக அல்லது மாற்றம் செய்யலாம், எவ்வளவு பணம் அல்லது மற்றபொருட்களை அல்லது நேரத்தை சிக்கனம் செய்யலாம் என சிறந்த ஐடியாக்கள் கிடைக்கும்

உங்களது ஆலோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் என்றுமே வேல்யூ அதிகம். பலர் நல்ல ஆலோசனை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். “நல்ல ஐடியாவா இருக்கே...நீங்க முன்னாடியே சொல்லியிருந்தா அப்படி பண்ணியிருப்பேன்”....என்பார்கள். சிறந்த ஆலோசகளால் நிறைய பணம் மிச்சப்படுத்தப்படும். அல்லது சிறந்த சேவை அளிக்கமுடியம். ஆகவே, ஒரு இடத்திற்கு சென்றால், (மாநாடு, கருத்தரஙகு, பயிலரங்கம்) அல்லது ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அது பற்றி உங்களது கருத்துக்களை மனம் திறந்து சொல்லுங்கள் அல்லது எழுதிக்கொடுங்கள், அல்லது ஒரு இமெயில் அனுப்புங்கள். நமக்கென்ன என்ற இருக்காதீர்கள்? நாம் ஏதாவது ஆலோசனை சொன்னால் நம்மை அவர்கள் தப்பாக எடுத்துக்கொள்வாகளோ என்று அச்சப்படாதீர்கள். முதலாளிகிட்ட இதைப்போய் எப்படி சொல்வது, நம்மை தப்பாக எடுத்துக்கொள்வார், நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிவிடக்கூடாது. சிலர் பொதுவாக ‘ரொம்ப நன்றாக உள்ளது” அல்லது “அபாரம், . நன்றி” என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இதுபோன்ற ஒரு பொதுவான கருத்தால் எந்த லாபமோ அல்லது மாற்றமோ ஏற்படாது..

பலர் நமது Feed Back / கருத்துக்களை அலசி ஆராய்நது. அடுத்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக, நடத்துவார்கள்.. புது மாற்றம் செய்ய நமது கருத்துக்கள் அவர்களுக்கு உதவும். பல கருத்துக்கள் மிகப்பயன் உள்ளதாக இருக்கும். மேலும சிறந்த சேவை மற்றவர்களுக்கு கிடைக்கும். Constructive feedback do not hurt but help to make improvement to do better என்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்று இதன் மதிப்பை தெரிந்த நிறைய நிறுவனங்கள் முதலில் தங்கள் ஊழியர்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு, சிறந்த ஆலோசனைகளுக்கு மாதாமாதம் பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.

விஸிட்டார்ஸ் புக் என்ற நோட்டு புத்தகத்தை மக்கள் பார்வையில் படும்படியாக வைத்து கருத்துகேட்கலாம் அல்லது Feed Back formஐ மிக எளிமையாக தயாரித்து, விநியோகித்து கருத்துக்களை பிரித்து, தொகுத்து, கருத்துகளின் முடிவை நல்ல நோக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Feedback is a GIFT! அதற்காக ஓரிரு நிமிடங்கள் செலவு செய்ய நீங்கள் இனி தயங்கமாட்டீர்கள் அல்லவா?

ராம்கி

Saturday, April 3, 2010

BIRTHDAY WISHES TO RAMKI

Dear Mr.Ramakrishna,
Thanks a lot for your mail and I am glad that you too share my sentiments for our dear Chandamama.
You have always our best wishes and blessings and I shall certainly pray for your happiness and good health when we visit the Ashram tomorrow at Pondicherry.We are visiting the Ashram to join the Ashramites and the devotees of Sri Aurobindo to celebrate the 100th year of his arrival in Pondy.
God bless and Happy birthday in advance.
Warm regards,
Viswam
[Editor & Publisher of CHANDAMAMA group of Magazines]

*

Dr. S.Natarajan & Ramki

My Dear Ramki,

Wish you a many many happy returns of the day. May God bless you with health, wealth and prosperity in your life. HAPPY BIRTHDAY TO YOU
With regards,
Dr. S. Natarajan
Cahriamn Aditya Jyot Eye Hospital, Mumbai.

இப்பொழுதே….RIGHT NOW by RAMKI

இப்பொழுதே….RIGHT NOW



சற்று நேரம் எந்த சிந்தனையும் இன்றி, அனைத்தையும் மறந்து அமைதியாக இருங்கள். என்ன தெரிகிறது? எத்தனை அழகான உலகம்...எங்கும் இயற்கையின் அழகு...எதையும் முடிக்கலாம் என்ற எண்ணம். புதியவற்றை சாதிக்க நினைக்கும் கனவுகள். ஒரு ஒளிமயமான எதிர்காலம். எல்லாம் இன்பமயம்.


இருப்பினும் உங்களுக்கு எதிரே பூதகாரமாக தற்போது தெரிவது ஏகப்பட்ட சவால். போட்டி..பொறாமை, .துக்கம், வெறுப்பு, அடிதடி., அழுக்கு வறுமை...இத்தகயவை இருந்து கொண்டிருந்தாலும், எங்கும் நமக்காக அன்பு கொட்டிக்கிடக்கிறது.. சந்தோஷமும், இன்பமும் நாம் அனுபவிக்க நமக்காக உள்ளன.. சாதிக்க நிறைய, நல்ல வாய்ப்புகள் காத்துக்கிடக்கிறது

நாளை இது ஒருபுரியாத புதிர். நாளைக்கு நாம் எப்படி இருப்போம், என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. எதிர்காலம் நிலையானது அல்ல. எதுவும் நடக்கும். நடக்காமல் போகலாம். ஆனால், இன்றைய நாள் என்பது உங்கள் கையில். எதையும் இன்று உங்களால் சாதிக்கமுடியும.. இது உங்கள் வாழ்க்கை ஆகவே உங்களால் மகிழ்ச்சியாக வாழமுடியும், வாழ்க்கையில் நடந்த நல்ல சம்பவங்களையும், நல்ல சுற்றத்தாரையும் நினைத்துப்பாருங்கள். எத்தனையோ நல்லவைகள் நடந்துள்ளது, பல சோதனைகளை கடந்து, நல்ல நிலைக்கு வந்துள்ளோம் என்பது புரியும்.

இப்பொழுதே.
நாளை என்பது ஒரு மாயை போன்றது. பகல் கனவு பலிக்குமா. ஆகவே ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக, ஒரு ‘ஸ்பெஷல்’ நாளாக நினைத்து வாழுங்கள். கிடைத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள். இன்று இந்த அளவுக்காவது உள்ளோமே என நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நாளை பொழுதினை இறைவனுக்கு அளிந்து, இப்பொழுது நடக்கும் வாழ்வில் நம்மதி நாடுங்கள். நாளை (யும்) நமதே, இதில் ஐயம் இல்லை. உங்கள் மனது சொல்லும் நல்வழியில் நேர்மையாக பயணம் செய்யுங்கள்.
‘நாம் எதற்கு இந்த உலகத்தில் ஜனித்தோம்?. இப்படி கஷ்டப்படவா?..இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி?’ என்றெல்லாம் புலம்பி குறைப்பட்டுக்கொள்ளாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. பல காரணங்களுக்கு, நம்மால் தலை கீழாக நின்றாலும் விடை காண முடியாது. ‘பல சோதனைகளை சந்தித்தால் தாய்யா, அது சாதனைகளாய் மாறும்’ என்று ரஜினிகாந்த் மேடையில் கையை உயர்த்தி பேசிய போது “அப்பா என்னா மாதிரி டயலாக்” என்று அவருக்கு கைதட்டியுளோம்.

வாழ்வில் சோகங்களும், சோதனைகளும், பேப்பர் இல்லாத தேர்வு போன்று நடந்து கொண்டேதான் இருக்கும். இரவும் பகலும், இன்பமும் துக்கமும். உறவும் பிரிவும் (இமெயிலும் எஸ்எம்எஸ்ம்) மாறிமாறி நிழல் போல் நம்மைத் தொடரும். நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும் என்பது ஒரு பாடல். ஆகவே, இப்பொழுதினை எண்ணி, ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாக, நல்ல காரணத்திற்கு பயன்படுத்துங்கள். நல்ல வார்தைகளாக, ஆறுதல் வார்த்தைகளாக எப்போதும பேசுங்கள். அகங்காரத்தை விட்டு விடுங்கள். நான் பெரியவன், நான் சீனியர் என்றெல்லாம் நீங்களே தலைப்பாகை கட்டிக்கொண்டு பந்தா காட்டாதீர்கள். நான் அழகாக இருக்கிறேன் என்று கர்வம் கொள்ளாதீர்கள். வாழ்க்கை ஒரு நீர்குமிழி போன்றது என்கிறார் ஆதி சங்கரர். பகவத்கீதையின் கீதாசாரத்தை படித்தாலே போதுமே, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தெரி(ளி)ந்துவிடுமே.=

“இன்று எது நடந்த்தோ அது நன்றாகவே நடந்தது”
“நாளை நல்லதாகவே நடக்கும்”

போன்றவை நமக்கு நெற்றியில் அடித்தால் போல் அல்லவா நச் என்று புத்திமதி சொல்லியுள்ளார் கிருஷ்ணன்.

இப்பொழுது என்பது நமக்கு கிடைத்த “மிகப்பெரிய பரிசு”
இப்பொழுது என்பது தான் “நமது எதிர்காலம்”
இப்பொழுது என்பது தான் நமக்கு கிடைத்த “வரப்பிரசாதம்”

ஆகவே, இப்பொழுதை எப்பொழுதும் நல்ல பொழுதாக மகிழ்ச்சியாக கழியுங்கள். ஈகோவை கிழற்றி எறியுங்கள். மனித நேயத்தோடு, எல்லோரிடத்திலும் சிரித்த முகத்துடன், முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வாழ பழகிக்கொண்டால், எல்லா நாளுமே இனிய நாள் தான் என்று நான் இப்பொழுது சொல்லவேண்டுமா என்ன?

இனி “எப்பொழுது எப்பொழுது?” என்று விக்ரம்-ஜோதிகா பாடியது போல் பாடாமல், “இப்பொழுது இப்பொழுது” என்றே எதையும் துணிந்து செய்யுங்கள்.

நன்றே செய். அதை இன்றே செய் செல்லம்.........

ராம்கி