Thursday, April 28, 2011

பேட்டியோ பேட்டி

பேட்டியோ பேட்டி

RAMKI


ரஜினி அளித்தா 'விறுவிறு' பேட்டி
கமல் அளித்தா 'வழவழா' பேட்டி

விஜயகாந்த் அளித்தா 'அடிதடி' பேட்டி
வடிவேலு அளித்தா 'சின்னபிள்ளே' பேட்டி

விஜய் அளித்தா 'ஜொல்லு' பேட்டி
பிரவு அளித்தா 'குண்டு' பேட்டி

நமிதா அளித்தா 'குலுக்கள்' பேட்டி
பிரபுதேவா அளித்தா 'டிஸ்கோ' பேட்டி

விவேக் அளித்தா 'நாதள்ளா' பேட்டி
வெண்ணீராடை மூர்த்தி அளித்தா 'புர்புர்' பேட்டி

இயக்குநர் சங்கர் அளித்தா 'எந்திர' பேட்டி
இயக்குநர் பாலச்சந்தர் அளித்தா 'நறுக்' பேட்டி

விசு அளித்தா 'குழப்பல்' பேட்டி
பாலுமேகேந்திரா அளித்தா 'தொப்பி' பேட்டி

வாலி அளித்தா 'காவி'யப் பேட்டி
வைரமுத்து அளித்தா 'ஒளிரும்' பேட்டி

எம்எஸ்வி அளித்தா 'மெல்லிசை' பேட்டி
ரஹ்மான் அளித்தா 'ஜெய்ஹோ' பேட்டி

சாலமன் பாப்பைய்யா அளித்தா 'பட்டி' பேட்டி
திண்டுக்கல் லியோனி அளித்தா 'கலகல' பேட்டி

கலைஞா அளித்தால் செம்மொழி பேட்டி
ராசா அளித்தால் ஸ்பெக்ட்ரம் பேட்டி

கடல் அளித்தால் சுனாமி பேட்டி
ஓவ்வை அளித்தால் அனைத்தும் அறியும் பேட்டி

டிரம்ஸ் மணி அளித்தா 'தடாலடி' பேட்டி
எமதர்மன் அளித்தா 'சாவுமணி' பேட்டி

ராம்கி அளித்தால் ரவுசுப் பேட்டி
பேட்டியோ பேட்டி....பேட்டியோ பேட்டி‘

நினைப்பதெல்லாம் இமெயிலில் வந்துவிட்டால்

அன்றைய பாடல்கள் அனைவரின் மனதையும் இன்று தொட்டுநின்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை தனுஷ் இப்போது பாடினால் எப்படியிருக்கும், இதோ இப்படி

நடிகர்- தனுஷ் (கொஞ்சம் தாடியுடன், கண்கலங்கியபடி)
பாடலாசிரியர் - ராம்கி
படபிடிப்பு நடக்கும் சுழ்நிலை - கம்யூட்டர் (முன்பு கையில் பாட்டிலை பிடித்தபடி)

நினைப்பதெல்லாம் இமெயிலில் வந்துவிட்டால், நெட்மீது கோபமில்லை
படித்த இமெயிலையே நினைத்திருந்தால், அமைதி எங்குமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை, இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த சாட்டிங் முடிவதில்லை, மனிதன் கணணியிலே
(நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இமெயில், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ அனுப்புவார், நாமும் அனுப்புவோம், பௌன்சிங்கும் ஸ்பாமும் தெரியாது
பார்வேர்டு வருவதும் போவதும் தெரியாது
சாட்டிங்கில் மாட்டிக்கொண்டால் துன்பம் ஏதுமில்லை
(சாட்டிங்கில்) ஒன்றிருக்க, பலர்வந்துவிட்டால் அமைதி நமக்குயில்லை
(நினைப்பதெல்லாம்)

யாருடன் சாட்டிங் தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
இமெயில் ஐடியெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் தெரிந்துகொண்டால் இமெயில் நட்பு தொடர்ந்துவிடும்
(நினைப்பதெல்லாம்)

ராம்கி