Thursday, July 14, 2011

ராம்கியை பாராட்டிய டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத்

ராம்கியை பாராட்டிய டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத்

தி ஐ பவுண்டேஷன் 10.7.2011 அன்று ஊட்டி கிளையை திறந்தது. சுலீவன் கோர்ட் எனும்
ஓட்டலில் கிளைத் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடந்தது. சென்னை சங்கர நேத்ராலயாவின்
நிறுவனர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள் தலமை தாங்கி சிறப்பித்தார்,
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணி எனக்கு அளிக்கப்பட்டது.



(left to right) Ramki, Dr. S.S. Badrinath, Founder Chairman - Sankara Nethralaya, Chennai & Dr.D.Ramamurthy, chairman, The Eye Foundation


டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள் தனது பேச்சைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாரா
வண்ணம், மீண்டும் மைக்கில் பேசினார். அப்போது நான் அடுத்த நிகழ்ச்சிக்கான
நினைவுப்பரிசுகளை தயாராக எடுத்துவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, என்னைக் கைகாட்டி, 'உங்களைப்பற்றி தான் டாக்டர் பத்ரிநாத் பேசுகிறார் ' என்றார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் பத்ரிநாத்
என்னையும் மேடையில் வரச்சொல்லி, எனது பணியையும், மும்பை டாக்டர் நடராஜன் அவர்களுடன் 6 வருடங்கள் இருந்தவற்றையும் நினைவுகூர்ந்து அனவைருக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். மேலும், அகில இந்திய கண் மருத்துவர்கள் மாநில மாநாட்டை தொடர்ந்து 12 வருடங்கள் சிறப்பாக நடத்தி வருவது பற்றியும், குறித்த நேரத்தில் நான் அப்ஸ்ட்ராக்ட் புத்தகத்தை சிறப்பாக தயாரித்து வெளியிட்டுவருவதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு மனமார பாராட்டி, அனைவரது கைதட்டலையும் பெறவைத்து கௌரவித்தார். இது ஒரு இன்ப அதிர்ச்சியாக, மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், டாக்டர் பத்ரிநாத் அவர்கள் என்னை பாராட்டியது குறிந்து
பலர் தாங்கள் அடைந்த சந்தோஷத்தை என்னுடன் அன்போடு பகிர்ந்துகொண்டு கைகுலுக்கினர்.


முன்பு மும்பைக்கு வந்திருந்தபோது டாக்டர் நடராஜன் அவர்களின் இல்லத்தில் எடுத்த புகைப்படம். அவர் கண்ணடி பட்டாலே போதும், அவரது தங்க கைகளே என்மீது விழுந்தபோது எப்படியிருந்திருக்கும்?


இவரின் பக்கத்தில் நிற்பதே பெருமையன்றோ?

படம் சஞ்சய், மும்பை


Tuesday, July 12, 2011

இன்போசிஸ் தலைவர்களுடன் ராம்கி



(Left to right) Mr.D. Swaminathan, CEO & MD of Infosys BP0, Ramki and Mr.S.D. Shibulal, Infosys COO & Member of the Board.


தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் ஊட்டி கிளை திறப்பு விழா 10.7.2011 ஞாயிறு அன்று மாலை ஊட்டி சுலீவன் கோர்ட் ஓட்டலில் மிகச்சிறப்பாக நடந்தது. அத்திறப்பு விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணி, மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தவும் அம்மருத்துவமனயின் தலைவர் டாக்டர் ராமமூர்த்தியும், டாக்டர் திருமதி சித்ரா ராமமூர்த்தியும் எனக்கு வாய்ப்பளித்தார்கள். (இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது நமக்கு பிடித்த விஷயமாயிற்றே....).
டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் (Founder, Sankara Nethralaya, Chennai) முதன்மை விருந்தனராக கலந்து கொள்ள, Infosys COO & Member of the Board, Mr.Shibulal சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கெஸ்ட் ஆப் ஆனராக டாக்டர் எம், ஆர். சீனிவாசன் (முன்னாள் தலைவர், அடாமிக் எனர்ஜி கமிஷன்) மற்றும் டாக்டர் பி. சி. தாமஸ் (குட் ஷெப்பர்டு இன்டர்நேஷனல் பள்ளி)அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

Saturday, July 2, 2011

ஓடி ஓடி உழைக்கனும




இன்றைய ராசாவாக உங்களை நினைத்து இதை படிக்கவும். உங்களைப் பல யாணைகள் சுற்றிவருவது போலவும், பல்லாயிரம் மக்கள் உங்களைச்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் கற்பனை செய்துகொண்டால் ராசாதி ராசா நீங்க தான் என்று சொல்லவும் வேண்டுமோ?





ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கொடுக்கனும்
2G பணத்திலே மிதக்கனும் கருணாஅன்பை நாளும் வளர்கனும்
ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கொடுக்கனும்
3G பணத்திலே நடக்கனும் கருணாஅன்பை நாளும் வளர்கனும்
ஓடி ஓடி உழைக்கனும்

பணத்துக்கா மனுஷன் தில்லிஅமைச்சரவையில் ஆடுறான் பாரு
சுருட்டி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா களிசோரு
நான் அன்போட சொல்லுரத கேட்டு நீ சுருட்ட அத்தனை திறமையும் காட்டு
சோனியா அம்மாவ பாரு டர்பன்ஐயாவ கேளு ஆளக்கோடின்னு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
ஆடி பாடி நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்
ஓடி ஓடி உழைக்கனும்

சோம்பேரியாக இருந்து விட்டாக்க லட்சம் கிடைக்காது தம்பி
சுறுசுறுபில்லாம சுருட்டாமயிருந்தா பலகோடி கிடைக்காது தம்பி
சோம்பேரியாக இருந்து விட்டாக்க லட்சம் கிடைக்காது தம்பி
சுறுசுறுபில்லாம சுருட்டாமயிருந்தா பலகோடி கிடைகாது தம்பி
அரசுப்பணத்தை அடுத்தவன் அடிச்சா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஒண்ணுகூடயில்லேன்னு அத்தனயும் சொல்லி போடு

ஓடி ஓடி உழைக்கனும்

பதவியில் உள்ளவன் அடிச்சது எல்லாம் மோசடி ஆகாது தம்பி
அரசுபணத்தில் கைபோட்டவன்எல்லாம் கம்பி எண்ணனும் தம்பி
பதவியில் உள்ளவன் அடிச்சது எல்லாம் மோசடி ஆகாது தம்பி
அரசுபணத்தில் கைபோட்டவன்எல்லாம் கம்பி எண்ணனும் தம்பி

பல Gக்கள் வந்தாகனும்
அதிலேயும் கோடிகோடியா நாம அடிச்சாகனும்
நாம போடரவேஷமும் ஆடுர ஆட்டமும் நமக்கு கோடிகோடியாதந்தாகனும்
மத்தநாடுக்கு படிப்பினை தந்தாகனும்

ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கோடுக்கனும்
3G பணத்திலே நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்
ஓடி ஓடி உழைக்கனும்

RAMKI

அவனைக் கொண்ணுட்டாங்களா??

அவனைக் கொண்ணுட்டாங்களா??

“என்னங்க ரயில் லேட்டா வந்ததாலே, இப்போ தான் வீட்டுக்குள்ளே நுழையறேன்… என்ன ஆச்சு அவனைக் கொண்ணுட்டாங்களா? கொலையை என்னால பார்க்கமுடியலே..எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு”, என்ற மொபைல் போனில் பதட்டத்தோடு பேசினால் சீதா.

சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை கீழே வைத்துவிட்டு, “அந்த பாலத்துக்கு கீழே அவன் ஓடும்போது, பத்துபேரு கத்தி, கம்போடு அவனை பின்தொடர்ந்து ஓடராங்க…பிளேன் பண்ணியபடி நாளைக்கு கட்டாயம் கொண்ணுடுவாங்க… அவன் தப்பிக்க முடியாதுன்னு ஆயிடுச்சு போலிருக்கே சீதா… பாஸ்கர் என்ன நினைச்சிறுக்காரோ, அதுபோல்தான் நடக்கும்” என்ற மறுமுனையில் குமார் பதில் அளித்தான்.


“என்னங்க சொல்றீங்க, பத்துபேறு கத்தி கம்போடயா? அவன் தப்பிக்க வாய்ப்பேயில்லே போலிருக்கே, அப்பாவுக்கு பிபீ மாத்திரையை ஒன்பது மணிக்கே கொடுத்திடுங்க…அவருக்கு அந்த கொலையைப்பத்தி நீங்க மீண்டும் விவரமா விவாதிக்க வேண்டாம்…அவர் ஏற்கனவே டென்ஷா இருக்காரு. பேசாம உங்க அம்மா, அப்பாவையும் அந்த நேரத்தில் அடுத்த ரூமுக்கு அனுப்பிடுங்க.. அது தான் எனக்கு நல்லதுன்னு தோனுது” என்றாள் சீதா


“அப்பாவைவிட, அம்மாதான் ரொம்ப கவலைப்படறாங்க…. இன்னைக்கு அம்மா கண்ணிலே தண்ணியே வந்திடுச்சு சீதா, நாளைக்கு எப்படியிருந்தாலும் அவன் கதை முடிஞ்சுடும். நீ கவலைப்படாம தூங்குமா” என்று குமார் சொன்னான்.

“யாருமே காப்பாத்த வரமாட்டாங்க போலிருக்ககே? அந்த கொலையை என் கண்ணால நான் பாக்கனுங்க…“ என்று சீதா சொல்ல, “சரி சரி நீதான் பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டேயில்லை, நாளைக்கு ராத்திரி சீக்கிரமே வீட்டு வேலையை முடிச்சுட்டு, “செல்லமே“ பார்க்க உட்கார்ந்திடு…..“ என்றபடியே டிவியின் வால்யூமை கூட்டினான் குமார். அவனுக்கும் நாளை என்ன நடக்குமோ என நினைக்க ஆரம்பித்தபோது பிபீ ஏறியது.


அப்போ பாதிபேருக்கு பிபீ ஏறவது தினமும் சீரியலைப் பார்ப்பதால்தானோ?

கற்பனை ராம்கி

kovai

m 9790684708