PORUR RAMKI (a) KUMAR,
K.R.RAMAKRISHNAN (RAMKI/Kumar)-Executive Coordinator - AIOS. CHANDAMAMA, DOLTON PUBLICATIONS குரூப்பில் 16 வருட அனுபவம். Written 300+ articles, interviews, shortstories, titbits, jokes etc. Organized National Conferences, Events, Functions, Press meets & active in PR activities. Mem: Kerala Cartoon Academy, Indian Penpals League. M: 9790684708. : wadalaramki@yahoo.co.in. Residing at Porur; working at Coimbatore The Eye Foundation
Tuesday, June 24, 2014
Thursday, March 13, 2014
Thursday, November 28, 2013
சாருகேசி பாராட்டிய கார்ட்டூனிஸ்ட்
Add caption |
மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர் திரு சாருகேசி அவர்கள்.
நான் வரைந்த கார்ட்டூன் ஓவியங்களை மூத்த எழுத்தளர் சாருகேசி அவர்களிடம் காட்டினேன். அவர் வெகுவாக ரசித்து, 'இனி போட்டோகிராபரிடம் மட்டும் கல்யாண ஆல்பம் வாங்கிக் கொண்டால் போதாது. கார்ட்டூனிஸ்ட் ராம்கியிடமும் கல்யாண ஆல்பம் தயாரித்துத் தரச்சொல்ல வேண்டும். அப்போதுதான் அதைப் புரட்டிப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சி சிரிப்பலையாகப் பொங்கி வரும்' என்று பாராட்டி தன் கைபட எழுதிக்கொடுத்த பாராட்டு மடல் எனக்கு பெரிய விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை தந்தது
Tuesday, October 15, 2013
Monday, August 12, 2013
கங்காரு பைக்
My article in Varamalar dt 11 8 2013
கங்காரு பைக்
அமெரிக்காவில், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல, "கங்காரு பைக்' எனும் புது மாடல் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுமினியத்தால் செய்யப்பட்டு, பாலித்தீன் கவரால் மூடப்பட்டு, காற்று, மழை, வெயில், பனி என, அனைத்தையும் தாங்கும் விதத்தில் உள்ளது. மேலே உள்ள மூடியை, பத்தே வினாடிகளில் திறந்து விடலாம். குழந்தையை உள்ளே வைத்து மூடியும், திறந்தபடியும், எங்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லலாம்.
இதில் உள்ள, அனைத்து பாகங்களையும் நம் தேவைக்கு ஏற்றாற் போல, வேகமாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு குழந்தை மட்டுமின்றி, இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து, வெளியே அழைத்துச் செல்ல முடியும். இருக்கையில், பெல்ட் வசதி உள்ளது. மூடி போட்டு ஓட்டினாலும், குழந்தைகளுக்கு மூச்சு திணறாது. இந்த வாகனத்தை, பின்புறம் அல்லது மேற்புறம் மற்றும் பக்கவாட்டு என, எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளலாம்.
ஐட்ராலிக் பிரேக் முன்பகுதியில் இருப்பதால், எந்த ஆபத்தான நேரத்திலும், இந்த, "கங்காரு பைக்'கை நிறுத்த முடியும். குழந்தைகள் மட்டுமின்றி, அவர்களுக்கு வேண்டிய உணவு, துணி போன்ற இதர பொருட்களை வைக்கவும், போதிய இடவசதி உள்ளது. எல்.இ.டி., விளக்குகள் உள்ளன.
பெண்கள் வெளியே செல்லும் போது, இந்த சைக்கிளை ஓட்டுவதால், உடற்பயிற்சி செய்வது போலாகி விடுகிறது. குழந்தையை தூக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வண்டி, தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

வெள்ளை மீசை பறவை!
My article in VARAMALAR dt 11.8.2013
வெள்ளை மீசை பறவை!
படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.
ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். தலைப்பகுதிக்கு, கீழ் இருபுறமும் வெள்ளை மீசை இருக்கும் ஒரே பறவை இனம் இதுதான். இதன் கால்களும், பாதமும் மருதாணி வைத்ததை போன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
பாறைகளுக்கு நடுவிலும், மரப்பொந்துகளிலும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். இம்முட்டைகளை இப்பறவை கள், நான்கு வாரங்கள் அடைகாக்கும். இந்த அரிய வகை பறவை உலகளவில், மிக குறைந்த எண்ணிக்கையில், உள்ளதால், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)