Thursday, June 10, 2010

வெற்றி பெற்ற தமிழன் சிவானந்தன் - RAMKI

Published in DINAMALAR Daily (ALL EDITIONS: DT 8.8.2010)

வெற்றி பெற்ற தமிழன் சிவானந்தன் :கா.ரா.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய,"இ-மெயில்' கடிதம்:


தற்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசாக பொறுப்பு ஏற்றிருக்கும்
தா.சிவானந்தன், கோவையைச் சேர்ந்தவர். கோவையில், ஆங்கில பேராசிரியராக சில காலம்
பணிபுரிந்தவர்.இவர் மும்பையில், அசிஸ்டன்ட் கமிஷனராக இருந்த போது, "தாதா'க்களை கூண்டோடு அழித்தவர். தற்போது, மும்பை மக்கள், "தாதா'க்களின் தொல்லையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்றால், அதற்கு இவர் தான் முக்கிய காரணம்.இவர், போலீஸ் கமிஷனராக இருந்த போது, அங்குள்ள போலீஸ்காரர்களின் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டினார். இரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்தி, இதற்கான பணத்தை திரட்டினார்.


போலீஸ்காரர்களுக்காக, பிரத்யேக மருத்துவமனை திறந்தார். அவர்கள் உடல்நலம் பேண, "ஜிம்' கட்டினார். போலீஸ்காரர்களின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு, இலவச ஆங்கிலப்பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ஏற்பாடு செது, அவர்களின் குடும்பத்தில் ஒருவர் ஆனார். இவருக்கு மற்றொரு பெயர், "மிஸ்டர் கிளீன்!' அவ்வளவு நேர்மையானவர்.

இவரை போன்று எல்லா ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், போலீஸ் குடும்பங்களுக்கு
பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, ஒரு முன் உதாரணமாக விளங்கலாமே? ஏதோ பதவியில் இருந்தோம் என்று இல்லாமல், எப்போதும் பெயர் சொல்லும் அளவுக்கு, சமூக சேவையில் ஈடுபடலாமே.

ஒவ்வொரு முறையும் பதவி உயர்வு பெற்றவுடன், கோவையில் இருக்கும் தன் வயதான
அன்னையிடம் வந்து ஆசிபெற்றுக் கொள்பவர். அம்மா உடல்நலமின்றி கோவை மருத்துவமனையிலிருந்த போது, ஓரிரு நாட்கள் அவரோடு மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டவர்.இப்போது தெரிகிறதா? ஒரு தமிழர் எப்படி மற்றொரு மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் என்று. இனி எல்லா ஐ.பி.எஸ்.,களும் மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும் என்பது தான் சிவானந்தனின் விருப்பம்.

Sunday, June 6, 2010

ஸ்ரீராமுக்கு பாராட்டு இந்திய பேனா நண்பர் பேரவை



ஸ்ரீராமுக்கு பாராட்டு

இந்திய பேனா நண்பர் பேரவையின் 15வது நட்புச் சங்கமம் சென்னையில் 15ம் தேதி மே மாதம் மிகச்சிறப்பாக நடந்தது.
பேரவையின் தலைவர் திரு கருண் தலைமை ஏற்று உறுப்பினர்கள் அறிமுக விழாவில் ராம்கியினை மேடை ஏற்றி, அவரே அறிமுகப்படுத்தினார். அப்போது அவரும் ராம்கியும் மும்பையில் இணைந்து நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார். ராம்கியின் நிர்வாகத்திறமை, பொது ஜன தொடர்பு, மற்றும் கார்ட்டூன் வரைவதில் வல்லவர் என்று புகழாரம் சுட்டினார்,

அன்று மாலை நடந்த சிறப்பு மலர் வெளியீட்டுவிழாவில் உறுப்பினர் குடும்பங்களில் +2 தேர்வில் அதிக மார்க் வாங்கிய போரூரை சேர்ந்த ஆர். ஸ்ரீராமுக்கு பாராட்டு பத்திரமும், பரிசும், மும்பை கண் மருத்துவர் டாக்டர் நடராஜன் அவாகள் கைகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது ஸ்ரீராமின் பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்து பாராட்டினார்கள்.




எதிர்பாராமல் விழாவிற்கு வந்த டாக்டர் நடராஜன் அவர்களுக்கு சால்வையும் மாலையும் அணிவித்து திரு கருண் கௌரவித்தார். டாக்டர் நடராஜன் அவர்கள் முன்கூட்டி வருவது
யாருக்கும் தெரிவிக்காமல் ஒரு சர்பிரைஸ் கொடுத்தார். இதனால் மும்பை உறுப்பினர்களும் மற்ற நிர்வாகிகளும் மிக மகிழ்ந்தனர். திரு கருண் அவர்கள் டாக்டர் விடைபெறும் பொது அவரை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார்.

டாக்டர் அவர்கள் மேடையில் பேசும்போது, நானும் கருப்பு, என் நண்பர் கருணும் கருப்பு என்று பேச ஆரம்பித்ததும் பெரிய சிரிப்பொலி. நடராஜன் அவர்களுடன் அவரது சகோதரர் திரு ஷெண்பகராம்ன் அவர்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தார்கள்