Monday, November 1, 2010

தீபாவளி தீபாவளி தீபாவளி

தீபாவளி தீபாவளி தீபாவளி
-கே . ஆர். விஜயராகவன், ஹைதராபாத்


தீபங்களின் வரிசை,
வந்து விட்டது தீபாவளி
முதல் நாள் நள்ளிரவு முதல்
யார் வெடிப்பது முதல்
என்ற ஆர்வமே முதல்.
தூங்கும் கதிரவனை
வெடி ஒலி யால் எழுப்பி
அவனுக்கு மத்தாப்பு வெளிச்சம் காட்டி
அவனை கடலில் முங்கி குளித்துவிட்டு வர,
வரவேற்போம்.
காய்ச்சிய எண்ணை அடுக்களையில் தயார்
அடம்பிடிக்கும் எனக்கு தேய்த்துவிடும் தாயார்



விரைவில் வந்து விட்டேன் குளித்து
புத்தாடையில் தான் நான் ஜொலித்து
எல்லோருடனும் மிக குதூகலித்து
மீண்டும் ஓடினேன் பட்டாசு வெடிக்க

வெடி ஓசை கேட்க வேண்டும் ஆனாலும்
மிக கேட்ககூடாது, அதிர்வு ஆகும்
ஒற்றை காதினை ஒரு கையால் மூடிக்கொண்டு
கண்களைக்குறுக்கி வெடி தீ பற்றிக்கொண்டு
விட்டதா என சந்தேகம் கொண்டு
காண்பதற்கு பக்கத்தில் சென்று
படார் என்று வெடிக்கும் அப்போது
அடிபடாமல் நான்தான் ""கொன்று
விட்டேன் நரகாசுரனை ""என்று
மகிழ்ச்சிக்கு இணை ஏது

ஏக்கத்துடன் பார்க்கும் ஏழை குழந்தை கையில்
கொடுத்தேன் பட்டாசுகள் ஒரு சிறு பையில்
அது கொண்டாடும் பெரு உவகையில்
கண்டாடும் பெரிதும் என் மனமெனும் மயில்

புத்தாடையில் நான் ஸ்டைல் ரஜினி ஆனேன்
தங்கை தான் ஆனாளே அசின் போல
தந்தையோ வியட்நாம் வீடு சிவாஜி போல
அன்புத் தா யோ ஜொலித்தாள் பத்மினியாக

வித விதமான தின்பண்டங்கள்
பிறருக்கும் அன்புடன் அளித்தோம்
நாங்களும் சுவைத்து உண்டோம்
புது தின்பண்டங்களை உருவாக்கி
பெற்றாள் அம்மாவும் பெரும் புகழ்ச்சி

தொலைபேசியில், ஈ மெயிலில்
வண்ண அஞ்சல் அட்டையில்
நேரே கை குலுக்கலில், நெஞ்சமார
பரிமாறிக்கொண்டோம் வாழ்த்துக்களை


தினமும் தீபாவளி இருக்க எங்களுக்கு பேராசை
கடன் எப்போ முடியும் என்று தந்தைக்கு சிறு ஆசை
கடனோ உடனோ , ஆனந்தத்துக்கு ஏது தடை
வாருங்கள் மகிழ்ச்சியோடு போடுவோம் ஒரு நடை

துன்பம் அகன்று எங்கும் மகிழ்ச்சியுடன்
செல்வம் பொங்க, கொண்டாடுவோம் சேர்ந்து வாருங்கள்
வரிசை தீபமேற்றி , ஒளி வெள்ளம் கொண்டுதான்
வரவேற்போம் தீபாவளியை, வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment