Saturday, July 2, 2011

அவனைக் கொண்ணுட்டாங்களா??

அவனைக் கொண்ணுட்டாங்களா??

“என்னங்க ரயில் லேட்டா வந்ததாலே, இப்போ தான் வீட்டுக்குள்ளே நுழையறேன்… என்ன ஆச்சு அவனைக் கொண்ணுட்டாங்களா? கொலையை என்னால பார்க்கமுடியலே..எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு”, என்ற மொபைல் போனில் பதட்டத்தோடு பேசினால் சீதா.

சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை கீழே வைத்துவிட்டு, “அந்த பாலத்துக்கு கீழே அவன் ஓடும்போது, பத்துபேரு கத்தி, கம்போடு அவனை பின்தொடர்ந்து ஓடராங்க…பிளேன் பண்ணியபடி நாளைக்கு கட்டாயம் கொண்ணுடுவாங்க… அவன் தப்பிக்க முடியாதுன்னு ஆயிடுச்சு போலிருக்கே சீதா… பாஸ்கர் என்ன நினைச்சிறுக்காரோ, அதுபோல்தான் நடக்கும்” என்ற மறுமுனையில் குமார் பதில் அளித்தான்.


“என்னங்க சொல்றீங்க, பத்துபேறு கத்தி கம்போடயா? அவன் தப்பிக்க வாய்ப்பேயில்லே போலிருக்கே, அப்பாவுக்கு பிபீ மாத்திரையை ஒன்பது மணிக்கே கொடுத்திடுங்க…அவருக்கு அந்த கொலையைப்பத்தி நீங்க மீண்டும் விவரமா விவாதிக்க வேண்டாம்…அவர் ஏற்கனவே டென்ஷா இருக்காரு. பேசாம உங்க அம்மா, அப்பாவையும் அந்த நேரத்தில் அடுத்த ரூமுக்கு அனுப்பிடுங்க.. அது தான் எனக்கு நல்லதுன்னு தோனுது” என்றாள் சீதா


“அப்பாவைவிட, அம்மாதான் ரொம்ப கவலைப்படறாங்க…. இன்னைக்கு அம்மா கண்ணிலே தண்ணியே வந்திடுச்சு சீதா, நாளைக்கு எப்படியிருந்தாலும் அவன் கதை முடிஞ்சுடும். நீ கவலைப்படாம தூங்குமா” என்று குமார் சொன்னான்.

“யாருமே காப்பாத்த வரமாட்டாங்க போலிருக்ககே? அந்த கொலையை என் கண்ணால நான் பாக்கனுங்க…“ என்று சீதா சொல்ல, “சரி சரி நீதான் பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டேயில்லை, நாளைக்கு ராத்திரி சீக்கிரமே வீட்டு வேலையை முடிச்சுட்டு, “செல்லமே“ பார்க்க உட்கார்ந்திடு…..“ என்றபடியே டிவியின் வால்யூமை கூட்டினான் குமார். அவனுக்கும் நாளை என்ன நடக்குமோ என நினைக்க ஆரம்பித்தபோது பிபீ ஏறியது.


அப்போ பாதிபேருக்கு பிபீ ஏறவது தினமும் சீரியலைப் பார்ப்பதால்தானோ?

கற்பனை ராம்கி

kovai

m 9790684708

1 comment:

  1. கொன்னுட்டீங்க...பாஸ்...!

    ReplyDelete