Saturday, June 30, 2012

HAPPY BIRTHDAY TO SRI. VISU
விசு ஐயாவின் பிறந்தநாள் நாளைக்கு. அன்று அவர் 'பாட்டும் நானே.....' என்ற பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன்.இதோ உங்களுக்காக
கற்பனை ராம்கி, கோவை (9790684708) என் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்
மக்கள் அரங்கமும் நானே அரட்டை அரங்கமும் நானே
மற்ற அரங்கத்தையெல்லாம் ஆடவைப்பேனே
(மக்கள்)
பேச்சும் நடிப்பும் நாடகத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(மக்கள்)
ஞாயிற்று கிழமை டிவியில் அரசன்நானே
இசை அரங்கத்தில் நடுநாயகன் நானே

பலநாடகமும் படமும் இயக்கியது நானே (2)
என்நிகழ்ச்சி நின்றால் அடங்கும் டிவிஉலகே

நான் அமர்ந்தால் அசையும் அரங்கமெல்லாமே (2)
அறிவாய் மனிதா நான் மாணவர்களுக்கு உதவுவது பெரிதா?

ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
மக்கள் அரங்கமும் நானே அரட்டை அரங்கமும் நானே
மற்ற அரங்கத்தையெல்லாம் ஆடவைப்பேனே../> -ராம்கி, கோவை

Friday, June 1, 2012

கார்த்திக் யாமினி திருமணம் KARTHICK WEDS YAMINI

KARTHICK WEDS YAMINI
யாமினி நீயும், கார்த்திக் நானும் கைபிடிச்சா திருவோணம்......

30ம் தேதி மாலை 3 மணிக்கு ஒரு வேனில் நானும் சீதாவும் போரூரிலிருந்து கிளம்பி ஆதம்பாக்கத்தில் உள்ள மீனா அக்காவீட்டிற்குச் சென்றோம். ராஜி குடும்பத்தார், உமா மற்றும் சுதா, சௌர்ணா மற்றும் ஹரியின் குடும்பத்தாருடன் அங்கிருந்து வித்யாவின் வீட்டிற்கு சென்று அவளையும் அழைத்துக்கொண்டு ஓட்டல் மாரிஸில் கார்த்திக் யாமினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 4.30மணிக்கு போய் சேர்ந்தோம். வித்யாவின் 2வது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் நாங்கள் இருவரும் ஓடும் காரில் வாழ்த்து தெரிவித்தோம். ஒரு மினி பிக்னிக் போவது போல் இருந்தது. Van Courtesy: Mutuhuanna - Special Thanks to you!

மும்பை 'QUEEN' யாமினி

ஓட்டல் மாரிஸில் முத்து அண்ணா, லலிதா மன்னி மற்றும் கார்த்திக்கை சந்தித்த பிறகு மாலை சிற்றுண்டிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். பாதாம் அல்வா, போண்டா மற்றும் 2 வகை சேவையும், சுடச்சுட காபியும் உண்டு மகிழ்தோம். பிறகு கார்த்திக் மற்றும் முத்து அண்ணா அவர்கள் நான் வரைந்து எடுத்துச்சென்ற கார்ட்டூன்களை பார்த்தனர். அவர்களுக்கு பிடித்துவிடவே, அவைகளை ஒட்ட ஒரு போர்டு ஏற்பாடு செய்துதந்தனர். பிறகு அதை திருமண நிகழ்ச்சி வரிசைப்படி நான் மகேஷின் உதவியோடு சுமார் 17 கார்ட்டூன்களை ஒட்டினேன்.

தங்க மகனுக்கு, தங்கச் சங்கலி அலங்காரம்
பிறகு வரவேற்பு நேரம் நெருங்க நெருங்க, முதலில் ஸ்ரீராம் அவர்கள் மாப்பிள்ளை கார்த்திக்கு தங்க மாலை அணிவித்து நிகழ்ச்சிகளை துவங்கிவைத்தார். மயில்கழுத்து கலரில் கார்த்திக்கின் உடை பார்ப்பவரை கவர்ந்தது. மணப்பெண் யாமினியும் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைஏறினார்.

கீழ் கண்ட எனது கார்ட்டூன் சித்திரங்களை படம் பிடித்து எனக்கு அனுப்பியவர் Chinaவை சேர்ந்த Lingfei SUN (Thanks a million Lingfei SUN)

சுமார் 4 நாட்கள், தினமும் இரவு 10 முதல் 12 மணி நேரம் வரை அமர்ந்து வரைந்த கார்ட்டூன்கள் இவை. இவற்றுடன் மேலும் 4 படங்கள் இருந்தன. இடம் பற்றார்குறையால் அவற்றை பார்வைக்கு வைக்கமுடியவில்லை.
நாதஸ்வரம் குரூப் கார்ட்டூன் பக்கத்தை, அங்கு வந்திருந்த நாதஸ்வர வித்வானிடம் கொடுத்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்து பத்திரமாக எடுத்துச்சென்றார். சார் நல்லா இருக்கு சார் என்று கைகொடுத்தார். எங்களுக்கும் மரியாதைகொடுத்து ஒரு சீன் வரைஞ்சு இருக்கீங்க என்று சொல்லி மகிழ்ந்தார்.






மெல்ல மெல்ல அந்தப்பக்கம் வருவோரும் செல்வோரும் அறையின் முன் வாசலில் வைக்கப்பட்ட எனது கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்தனர், ரசித்தனர். நான் தான் வரைந்தது என்று தெரிந்ததும் பலர் 'ரொம்ப நன்னா வரைஞ்சு இருக்கேள்' என்று தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 'யார் அந்த ராம்கி, அவரை நாங்க பாக்கனுமே' என்று முத்து அண்ணா மற்றும் லலிதா மன்னியிடம் பலர் கேட்க, அவர்களிடம் என்னை அழைத்துச்சென்று 'இவா தான் அவா' என்று அறிமுகப்படுத்தினர். பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் உதவியாளர் என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் கார்ட்டூன்களை பார்த்து மிகவும் பாராட்டினார். வெளிநாட்டுப் பெண்மணிகளும் (Including Lingfei SUN) எனது கார்ட்டூன்களை பார்த்து ரசித்தனர். பிறகு தொடர்ந்து நடக்க இருக்க நிகழ்வுகளை கார்ட்டூன் வரிசைப்படி கேட்டு அறிந்தனர். என்னையும் கார்ட்டூன் பக்கத்தில் நிற்க வைத்துப்புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 'வாட் இஸ் நலுங்கு?' என்று கேட்டு நான் சொன்ன விளக்கத்தை கேட்டு சிரித்தனர். 'வெரி னைஸ் பிக்சர்ஸ்'.. 'ஒன்டர்புல் கார்ட்டூன்ஸ்' என்று கைகொடுத்து சென்றனர்.
முத்து (வெங்கட்), யாமினி, கார்த்திக், பகவதி, பாலு (நெல்லை)
கார்த்திக் என்னைவிட கொஞ்சம் உயரா இருக்கானோ?? -ரவி!!....

கார்த்திக், யாமினி அழகாக அலங்காரம் செய்து மேடை ஏற, ஒன்றின்பின் ஒருவராக அவர்களுக்கு கைகுலுங்கி வாழ்த்துதெரிவித்தவண்ணம் இருக்க, திடீரென சலசலப்பு ஏற்பட அனைவரும் வாசல் பக்கம் திரும்ப, ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண்மணி சற்று செக்ஸியாக இருக்க அனைவரும் அவரை பார்த்தனர். தன் கணவன்மார்கள் அப்பெண்மணியை பார்த்து ஜொல்விடுகிறார்களா என்று பல பெண்மணிகள் தங்கள் கணவரது பார்வையை நோட்டமிட்டனர். (என் மனைவியும் இதில் அடக்கம்). அப்பெண்மணிகள் கார்த்திக்கை ஒருவர்பின் ஒருவராக கட்டியணைத்து வாழ்த்து தெரிவக்க, பலருக்கு மேல்மூச்சு வாங்கியது. மச்சம் உள்ள ஆளு கார்த்திக் என்று பெருமூச்சுவிட்ட இளைஞர்களும் உண்டு. பிறகு அவர்கள் போட்டிகோட்டுக்கொண்டு போட்டோ எடுத்து தள்ளினர்.

வித்யா, மீனா அக்கா, பகவதி, சீதா, பாலு, உமா

முத்து அண்ணாவின் முதல் சம்பந்தி எங்களுடன் எப்போதும் ஜாலியாக பழகுவார். நீங்க முத்து அண்ணாவின் சம்பந்தின்னு எங்களுக்கு தெரியும் ஆனா அதுக்காக சேர் மேலே சேர் போட்டு உட்கார்ந்திருப்பது டூ மச் என நான் ஜோக் அடிக்க அப்போது தான், தான் இருண்டு சேர்களுக்கு மேல் உட்கார்ந்திருப்பது தெரிந்து அவர் சிரிக்க, முத்து அண்ணா முதல் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். சம்பந்தியின் மனைவியும் என்னுடன் சேர்ந்து கணவரை கிண்டல் செய்தார். இவரும் எனது கார்ட்டூன்களை வெகுவாக ரசித்தார். ரவி குடும்பத்தினர், ஸ்ரீராம், திருமதி ஸ்ரீராம், லாவண்யா மற்றும் குழந்தைகளை பார்த்து மகிழ்ந்தேன்.
பகவதி, ராஜி, உமா
கணேஷ், ராஜியை கலாட்டா செய்து கிண்டல் செய்ய சுற்றியிருந்த உமா, சீதா என அனவைரும் ஜாலியாக ஜோக் அடித்து கணேஷை கலாய்த்தோம். பாஸ்கர் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்து பேசினோம். மாப்பிள்ளை ராஜகுமார், நாராயணி, தீப்ஷிகா,தர்னேஷ் ராஜ் போன்றவர்களை கண்டு மகிழ்ந்தோம். நாராயணி திருமணத்தில் முன்னின்று, தன் பெற்றோர்களுக்கு அனைத்து உதவிகள் செய்தவண்ணம், தன் குழந்தைகள் மீது வைத்தகண் வாங்காமல் கவனித்துக்கொண்டு, படு பிஸியாக இருந்தை காணமுடிந்தது (என்னே அடக்கம்). ராஜ்குமார் உறவினர்களை நீண்ட வருடங்களுக்குப்பிறகு சந்தித்து பேசினேன். வரவேற்பின் நிறைவாக, யாமினி மற்றும் கார்த்திக்குடன் இளசுகளும், பெரியவர்களும் இசைக்கு ஏற்ப சிறிது நேரம் நடனமாடி மகிழ்ந்தனர். கார்த்திக், யாமினி மற்றும் அவளது சகோதரியும் மிக அழகாக இசைக்கு ஏற்ப ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானேவரும் அல்லவா?
இரவு விருந்தும் மிகவும் நன்றாக இருந்தது. முத்து அண்ணா நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஸ்ரீராம் அவர்கள் மூலம் ஒரு வேன் ஏற்பாடு செய்து கொடுத்தார். (நன்றி முத்து அண்ணா) மீனா அக்கா குடும்பத்தாரை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு, சுமார் 10.30க்கு போரூர் போய் நானும் சீதாவும் சேர்ந்தோம்.
காலை முகூர்த்ததிற்கு நானும் சீதாவும் காலை 6.30க்கு கிளம்பினோம். போரூர் வரை இருசக்கர வாகனத்தில். பின் கிண்டி வரை ஷேர் ஆட்டோவில், பின் நந்தனம் வரை பஸ் பின் அங்கிருந்த ஆட்டோவில் ஓட்டல் மாரிஸ் வந்து சேர்ந்தோம். பின் காலை சிற்றுண்டி பொங்கல், இட்லி வடை சாப்பிட்டோம்….விரதங்கள் முடிந்து காசியாத்திரை சிறப்பாக நடந்தது. 'காசிக்கு போக வேண்டாம். என் மகள் யாமினியை உனக்கு திருமணம் செய்துவைக்கிறேன்' என்று திரு வி. ராமச்சந்திரன், கார்த்திக்கிடம் சொல்லி, இரண்டு தேங்காய்க்களை கொடுத்து, காசியாத்திரைக்கு தயாரான கார்த்திக்கை போகவிடாமல் திசைதிருப்பினார். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'.......

இரண்டுமே, எனக்கே எனக்கா மாமா?
இது எத்தனை நாள் கனவு தெரியுமா யாமினி?...

தூக்கிட்டாங்கையா....மாமாக்கள் அலேக்கா தூக்கிட்டாங்கையா
முன்னேறு மேலே மேலே
மாலை மாற்ற வா.. பார்த்து பேச வா...
சிறிது நேரத்தில் திருமணச் சம்பிரதாயங்கள் தொடங்கின. யாமினி கார்த்திக் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கவனே நல்ல உயரத்தில் கார்த்திக்… மணப்பெண் யாமினியின் மாமாக்கள் அவளை தூக்க, அதற்கும் மேலாக கார்த்திக்கை கணேஷ், பாச்சா எனும் இரண்டு மாமாக்கள் மேலும் அலேக்காக தூக்க, யாமினியும் விடாமல் உயர்ந்து மாலையை மாற்றியது ரொம்ப தமாஷாக இருந்தது. பின் இவர்களை ஊஞ்சலில் உட்காரவைத்து மெல்ல ஊஞ்சல் ஆட, ஒவ்வொரு பெண்மணியாக, தம்பதிகளின் கால் துடைத்து, பாலு பழம் கொடுத்துனர்.
இனி விடமாட்டேன் யாமி
யாமி இப்பவேவா...
இப்போ கையைபிடி கையைபிடிடா, அப்புறமா கட்டிபுடி கட்டிபுடிடா.....
ஆதம்பாக்கம் சித்தியுடன் நம் உறவினர்கள்
பின் ஒவ்வொரு பெண்மணிகளாக வண்ண அன்ன உருண்டைகளை இவர்களின் தலையைச்சுற்றி நால்புறம் கிரிக்கெட்டில் பந்து வீசும் ஸ்டைலில் வீசினர். 'கார்த்திக் வாயை முடிக்கோ இல்லேனா ஒரு உருண்டை உன் வாயில் விழும்' என்று நான் தமாஷ் செய்ய, காயத்ரி போட்ட உருண்டை அவரது மச்சினர் மீது சரியாக விழ, 'நேரம் பாத்தது அடிச்சிட்டாங்கையா' என நான் சொல்ல அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். ஆரத்தி எடுக்க தம்பதிகள் மெல்ல மெல்ல அடிஎடுத்து திருமண ஹாலுக்குள் நுழைந்தனர். வாராயோ தோழி வாராயோ....
யார் அங்கே? நான் பவுல் போட ரெடி = ஆதம்பாக்கம் சித்தி
எல்லாம் தயார் டீலா...
முகூர்த்தத நேரம் நெருங்கியாச்சு..சீக்கிரம்
கரெக்டா இருக்கா?
அப்போது கோவில்பட்டி சித்தி, சித்தப்பா, நெல்லை மாமா, மாமியையும் தென்காசிமாமாவையும் பார்த்து பேசினோம். ஆதம்பாக்கம் சித்தப்பா, கோவில்பட்டி சித்தப்பா, நெல்லை மாமா, தென்காசி மாமா போன்றோர் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பிரிவோம் சந்திப்போம்....கோவில்பட்டி சித்தியுடன் ராம்கி

நானும் கோவில்பட்டி சித்தியும் எப்போதும் சின்ன மாமியார்=மாப்பிள்ளை என்று பழகாமல் தாமாஷ் செய்து கொண்டு இருப்போம். இன்றும்அப்படியே எங்களது தமாஷ் துவங்கியது. பள்ளிக் குழந்தைகள்தான் அப்பப்போ சண்டை போட்டுகிட்டு கொஞ்சநேரம் பேசாம இருப்பா, கொஞ்சநேரத்திலே பேச ஆரம்பிச்சுடுவா. அதுபோல் தான் நம்ம சண்டையும்… போன்லயாவது பேசுங்கோ என்று சித்த சொன்னார்கள். (என்னாலே உங்க நிம்மதி கெடக்கூடாது அல்லவா என்று நான் (ராம்கி) சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை). என்றும் பிரிவோம் சந்திப்போம் ஸ்டைலில் நாங்கள் பேசும் சமயம் பார்த்து எங்களை போட்டோ எடுக்கச்சொன்னேன்.
நான் ரெடி..ரெடி...ரெடி
மூன்று முடிச்சு
தாலி கட்டப்போறேன்....கட்டபோறேன்.. கட்டிட்டேன்..
என் தங்க சங்கலி உனக்கே உனக்கு
திருமாங்கல்யத்திற்கு மரியாதை...
முகூர்த்தம் சரியான நேரத்தில் துவங்கியது. மும்பை திரு. ராமச்சந்திரன் மடியில் மணமகள் யாமினி உட்கார, மேளம் கொட்ட, கார்த்திக் யாமினிக்கு தாலி கட்டி 31.5.2012 அன்று வியாழக்கிழமை, வளர்பிறை ஏகாதசி திதி, ஹஸ்த நட்சத்திரம், சித்தயோகத்தில் 9.35க்கு கடக லக்னத்தில் முறைப்படி தன் துணைவியாக ஏற்றுக்கொண்டார். அட்சதைகளும், மலர்களும் அவர்கள் மீது நாங்கள் தூவ, தேவர்கள் மேலிருந்து ஆசிர்வதித்தனர். யாமினிக்கு ஒருதங்க சங்கலியும் போட்டு, மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு, யாமினியின் நெற்றியில் குங்குமம் இட்டு கார்த்திக் யாமினியின் கைபிடித்தார்.
பொட்டுவைத்த முகமோ...
தந்துவிட்டேன் என்னை...
பொரி சின்ன விஷயமில்லே யாமி
அதிக புகையில்லா ஹோமம். எப்படி நம்ம ஐடியா..
இந்த அம்மிக்கல் மாதிரி நாம என்றும் உறுதியா இருக்கனும்
மற்ற திருமண சடங்குகள் மீண்டும் துவங்க, அக்னியை இருவரும் வலம்வந்த பிறகு, ஸ்ரீராம் யாமினியின் கையில் பொரி போட, கார்த்திக் யாமினியின் கையுடன் இணைந்து அக்னியில் இட்டனர். பின் மெட்டியிடுவது, அருந்ததி பார்ப்பது போன்றவை நடைபெற்று, பெரியவர்களை ஒன்றாக நிற்கவைத்துப் புதுமணத் தம்பதிகள் நமஸ்கரித்தனர். இருசம்பந்திகளும் ஆரத்தி எடுக்க திருமணம் நல்லவிதமாக நிறைவுக்கு வந்தது.
திருமண நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தது பாராட்டத்தக்கது. இந்நிகழ்ச்கிகளை அமெரிக்காவிலிருந்து கணினியில் நேரடியாக கண்டு ரசித்த ஸ்ரீவித்யா ரவி என்னுடன் போனில் பேசினார். 'அத்திம்பேர் எல்லோரும் உங்க கார்ட்டூன் பற்றிதான் என்கிட்ட சொல்றாங்க…கேமராவில் உங்க கார்ட்டூனையும் கொஞ்சம் போக்கஸ் செய்யச் சொல்லுங்க பிளீஸ்' என்றார். நேரடியாக திருமண நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் இருக்கும் ரவிகுடும்பத்தார் பார்த்து மகிழ்ந்தனர். (இந்த ஆன்லைன் ஐடியாவும் நான் முத்துஅண்ணாவிடம் முன்பே சொல்லியிருந்தேன்)
என் இணை சீதா ராம்கி, மாமி, ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் மாமா (நெல்லை)
இரண்டு உமாக்களுக்கு நடுவே சிக்கிய புள்ளிமான் (?) சீதா
தங்கை உமாவுக்கு நினைவுப்பரிசு தரும் அண்ணா முத்து
இப்போ தங்கை சீதாவுக்கு
சீதா,ராஜ்குமார் (முத்து அண்ணாவின் மாப்பிள்ளை)
சம்மந்திகள் பதில் மரியாதை, வந்தவர்களுக்கு மரியாதை செய்தல் போன்றவை சிறப்பாக நடந்தேரியது. நானும் சீதாவும், ராஜ்குமாரிடம் எப்போதும் சிரித்து பேசுவோம். அப்படியே அவரை கலாட்டா செய்ய சீதை ராஜகுமாருக்கு மகிழ்ச்சியில் கைகொடுக்க டக் என கிளிக் செய்தேன்.

முத்து அண்ணா, லலிதா மன்னி மற்றும் திரு வி. ராமச்சந்திரன், மீனா தம்பதிகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றனர். கார்த்திக் யாமினி திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் அனைவரும் ஒவ்வொருவராக தாம்பூலப்பையுடன் விடைபெற்றோம்.
கடைசியா சென்ற எனக்கு?? இத்திருமணத்தில் பல புதுமைகளை புகுத்திய கார்த்திக்கை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. இவரது பண்பை இன்றைய இளைஞர்கள் சிலராவது கடைபிடிக்க வேண்டும் என்பது என் அவா. யு ஆர் கிரேட் கார்த்திக்..கீப் இட் அப்.
வாழ்த்துக்கள் யாமினி, கார்த்திக்… நன்றி எஸ்வி மற்றும் விஆர் தம்பதிகளுக்கு.
We all missed Ravi & Family. Also Muthuanna's parents & Lalitha Manni's parents and other close relatives including Yamini's Mani Mama (USA) very much at the wedding.

நேர்முக வர்ணணை மற்றும் புகைப்படங்கள் RAMKI