Wednesday, December 12, 2012

பெங்களூரில் குமாரும் சீதாவும்

நாங்கள் தங்கிய லெமன் ட்ரீ ஓட்டல் வாயிலில் சீதா

நானும் சீதாவும் 8ம் தேதி இரவு கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்றோம். நல்ல குளிர். காலை 7 மணிக்கு அல்சுர் ஏரி அருகே உள்ள லெமன் ட்ரீ என்ற ஓட்டலை அடைந்தோம். அருமையான ஓட்டல்.அறை எண் 906, ஒன்பதாவது மாடி. அங்கிருந்த பார்த்தபொழுது எதிரில் ஏரி அழகாக இருந்தது. காலை சிற்றுண்டி ஓட்டலில் தரப்பட்டது.

அன்று மாலை 4 மணிக்கு விச்சுவும், மீராவும் ஒட்டலுக்கு வந்து எங்களை சந்தித்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு எங்கள் நால்வருக்கும் பெருமகிழ்ச்சியை தந்தது. பிறகு ஆறுமணிக்கு வேலூர் சாரதம்மாமியின் பேரனும், ஜெயந்தியின் மகனுமான கண்ணன் ராதா திருமண வரவேற்புக்கு ராஜாஜிநகர் சென்றோம். சாரதம் மாமி, ஜெயந்தி, சாந்தி, பேபி குடும்பத்தினர் எங்கள் வரவேற்றனர். புரசை ராதை மன்னியின்தங்கையும் அவரது கணவரையும் பார்த்து பேசினேன், அன்னத்தின் உறவினரையும் எதிர்பாராமல் சந்தித்தோம் அகமதாபாத் வேணு, மங்களம், பிலாய் அக்கா மற்றும் அவர்களதுகுடும்பத்தினவரும் (ராமன் மகள் மற்றும் அவளது குழந்தை உட்பட) வந்திருந்தனர்.

அடுத்த நாள் (10.12.2012) முகூர்த்தத்திற்கும் சென்று வந்தோம். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு வேட்டி புடவை கொடுத்து கௌரவித்தனர். கண்ணணை அனைவரும் எதிர்பார்த்தனர் போலும்.

மதியம் எம்ஜி சாலையில் சுற்றிவிட்டு வந்தோம். இரவு 9 மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பி சிட்டி ஸ்டேஷக்கு வந்தோம். இருவரும் மீண்டும் வெவ்வேறு பாதைக்கு பயணம் செய்ய நேரம் குறிக்கப்பட்டது. எனக்கு 10.15க்கு கோவைக்கு ரயில். சீதாவுக்கு 10.40 சென்னைக்கு பிரயாணம் செய்தோம். இரண்டு நாள் பெங்களூர் விஜயம் ஜாலியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.


லெமன் ட்ரீ ஓட்டலின் உள்ளே சீதா


ஓட்டலின் உளே எங்களை கவர்ந்த கார்ட்டூன் முகங்கள்


ரூம் எண் 906ல் சீதா



ஓட்டலின் அலங்காரம் அழகாக இருந்தது. விச்சுவும், மீராவும் ஓட்டலுக்கு வந்து எங்களை பார்த்து ஒரு மணி நேரம் எங்களுடன் ஜாலியாக பேசினர், மிகவும் சந்தோஷமாக இருந்தது.



வேலூர் ஜெயந்தியின் மகன் கண்ணன் ரமா புதுமண தம்பதிகள் / 10.12,2012



வேலூர் சாரதம்மாமி, ஜெயந்தி, சாந்தி, பேபி எங்களை வரவேற்றனர்

சாந்தியின் இரு மகள்களும், பேபியின் ஒரு மகளும் அவ்வப்போது எங்களுடன் பேசினர்



ராதைமன்னியின் தங்கையையும் அவரது ஆத்துக்காரரையும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது கிடைத்து.
பெங்களூரூ காவேரி கைவினைபொருட்கள் கடையில் எங்களை கவர்ந்த கிருஷ்ணன் •

No comments:

Post a Comment