Showing posts with label இளம்திருமணமான பெண்களே. Show all posts
Showing posts with label இளம்திருமணமான பெண்களே. Show all posts

Friday, December 11, 2009

இளம்திருமணமான பெண்களே, கேள் ஒருசேதி

இளம்திருமணமான பெண்களே, கேள் ஒருசேதி

போரூர் ஆர். சீதா

திருமணமான இளம் பெண்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக திருமணமான ஓரிரு மாதங்களில் என்ன ஏதாவது விசேஷம் உண்டா என்றும் என்ன உன் மருமக இன்னும் குளிச்சுகிட்டுத்தான் இருக்காளா? என்றும் நெருங்கிய உறவினர்களும் தோழிகளும் கேள்விகனைகளை அம்பாக எழுப்பி இளம் தம்பதியர்களுக்கு டென்ஷன் கொடுக்கின்றனர்.

திருமணமான அடுத்தமாதமே இதுபோன்று தொல்லைக்கு மணமான இளம் பெண் ஆளாகிறாள். இதனால் தம்பதிகளுக்கு நடுவே மனவேற்றுமை, கருத்துவேறுபாடுகள் உண்டாகிறது,
அவளுக்கு ஏதாவது குறைஇருக்கமோ என்று கணவனும், இவனுக்கு ஏதாவது குறைஇருக்கமோ என்று மனைவியும் செய்வது அறியாமல் தத்தளிக்கிறாரர்கள்.

ஒருசிலருக்கு திருமணமான அடுத்த மாதமே கருத்தரிக்கும் பாக்கியம் ஏற்படுகிறது. ஒரு சில பெண்கள் சில மாதங்கள் கழிதது கருவுருவார்கள், சிலருக்கு சில வருடங்கள் ஆகிறது.
சில திருமணமான பெண்கள் திருமணமான அடுத்த மாதத்திலேயே தான் கருவுறவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல சிலருக்குத்தான் நடக்கிறது,

பலர் இப்போ எதுக்கு குழைந்தை குட்டினு...கொஞ்ச நாள் ஜாலியாக இருக்கலாம் என்று தைரியமாக இருக்கிறார்கள். சில தம்பதிகளில் கணவன்மார்கள் தற்போது குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுண்டு மனைவிமார்களோ குழந்தை சீக்கிரம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவது்ண்டு. இக்காரணத்தில் சில இளம் தம்பதியர்களுக்குள் சின்னசின்ன மனக்கசப்பு எற்படுகிறது. சில தம்பதிகள் இக்காரணங்களால் பிரிந்து வாழ்வதுண்டு. இக்காரணத்தை வெளியே சொல்லமாட்டார்கள். அதனால் இவர்களை பெற்றவர்கள் என்ன காரணத்தில் இருவரும் பிரிந்துள்ளார்கள் என்று தலையை பிய்த்துகொள்வதையும் நாம் காண்கிறோம்.

சில பெண்களும் மாதவிடாய் வந்ததும் டென்ஷன் ஆகிவிடுவார்கள். இம்மாதமும் தான் கருவுறவி்ல்லையே என்று புழுங்குவார்கள். மாதவிடாய் வந்துவிட்டதால் கணவனிடம் சண்டை போடும் பெண்களும் உண்டு. சில தம்பதிகளுக்கும் பேச்சு வார்த்தை முற்றி அடிதடியில் போய் முடியவதுண்டு.


இளம் தம்பதிகள் ஒரிரு மாதங்கள் காத்திருப்பதுதான் சிறந்தது. அப்படி குறிப்பாக ஏதாவது குறை இருக்குமோ என நினைப்பவர்கள் தகுந்த மருத்துவரிடம் தம்பதிகள் சென்று ஆலோசனை செய்யவேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி சில மருந்துகள் உட்கொண்டால் கருத்தரிப்பு ஏற்படும்,


இளம் தம்பதிகளுக்கு தனிமை மகிவும் முக்கியம். இருவருமே மனதளிவில் சகஜமாக இருக்கவேண்டும். எந்த பிரச்சனையானானும் அதை பேசி சமாளித்துக்கொள்ளவேண்டும். சில பெண்கள் தாங்கள் விரைவில் கருவுறவில்லை என்றதும் தன் கணவன்மார்களை ஆண்மை அற்றவர்கள் என்று குறைகூறிவிடுவார்கள், இந்த பிரச்சனை அவர்களை விவாகரத்துவரை கொண்டுசென்றுவிடும். மாதாமாதம் அந்தநாட்கள் வந்துவிட்டால் பலரது வீடுகளில் பேச்சு வார்த்தை இருக்காது. தம்பதிகள் பேசிக்கொள்ளமாட்டார்கள், ஒரே டென்ஷன் தான் வீட்டில்.

தம்பதிகளுக்கு நடுவே பிரச்சனை ஏற்படுவது மட்டும் இன்றி மாமியார் மருமகள் பிரச்சனையும் கூடும். இந்த மாதமும் இவ உக்காந்துட்டாளா என்று மருமகளை ஏளனம் செய்யும் மாமியார்களும் உண்டு. சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துகுடுத்துடுவே என நான் நினைச்சேன் என்று அடிக்கடி மாமியார்கள் குத்திகாட்டுவதால் மருமகள்கள் பல மனஉலைச்சளுக்கு ஆளாகிறாள். மாமியார் மருமகள் சண்டை இக்காரணங்களால் நிறைய வீடுகளில் பூதாகாரமாக வெடித்துவருகிறது, சில பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள் அதிக மன உளைச்சல் காரணமாக.....

திருமணமான தம்பதிகள் அவ்வப்போது விடுமுறை நாட்களி்ல் மாற்று இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துவிட்டு வரலாம். அல்லது நீணட் நாள் ஹனிமூன் செல்லலாம். சில இல்லங்களில் இடம் நெருக்கடி காரணமாக ஜாலியாக இருக்க முடியாது. அல்லது ஒரே அறையில் பலர் தங்க வேண்டி இருக்கலாம். அல்லது அவசர அவசரமாக சந்தோஷமாக இருக்கவேண்டியுள்ளது. இரவு படுக்கும் இருவரும் பல் துலக்கி, குளித்து டென்ஷன் இன்றி இருக்கவேண்டும்,. படுக்கை அறையில் தான் அன்றைய பிரச்சனைகளை பேசுவதால் வேண்டாத டென்ஷனும் மனக்கசப்பும் தம்பதிகளுக்கு நடுவே ஏற்படுகிறது.

இளம் தம்பதிகளுக்கு தனிமை மகிவும் முக்கியம். இருவருமே மனதளிவில் சகஜமாக இருக்கவேண்டும். எந்த பிரச்சனையானானும் அதை பேசி சமாளித்துக்கொள்ளவேண்டும். சில பெண்கள் தாங்கள் விரைவில் கருவுறவில்லை என்றதும் தன் கணவன்மார்களை ஆண்மை அற்றவர்கள் என்று குறைகூறிவிடுவார்கள், இந்த பிரச்சனை அவர்களை விவாகரத்துவரை கொண்டுசென்றுவிடும். இதுபோன்ற வேளைகளில் தம்பதிகள் ஒருத்தருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து அன்பு செலுத்தவேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் ஏளமாக பேசுவார்கள் என்றோ, எதிர்வீட்டு மாமி இந்த மாதமும் உட்கார்ந்துவிட்டாயா என்று கேட்பார்களோ என்ற ஐயத்தில் சில பெண்கள் வீட்டிலேயே அடைந்துவிடுவார்கள், வெளியே எங்கு அழைத்தாலும் வரமாட்டார்கள். காரணம் பார்ப்பவர்கள் தங்களிடம் இதுபோன்று பலர் முன்னிலையில் கேள்விகேட்டு தாங்கள் அவமானப்படவேண்டியிருக்கும் என்று ஒரு வட்டதிற்குள்ளே சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுவார்கள்.

சிலர் குறிப்பிட்ட கோவிலுக்கோ அல்லது ஏதாவது பரிகாரமோ செய்துவிட்டால் தங்களுக்கு குழந்தை பாக்கியம் உடன் ஏற்படடுவிடும் என்று நம்புகிறார்கள். சிலர் இதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவுசெய்வார்கள்.

குறைந்தது மூன்று அல்லது ஆறுமாதங்கள் கழித்து மகப்பேரு மருத்துவரிடம் இளம் தம்பதிகள் சென்று அவரிடன் அறிவுரைப்படி நடந்தால் உங்கள் இல்லங்களில் மழலைபட்டாளம் தான். நல்ல சத்துள்ள உணவுவகைகளை தம்பதிகள் உட்கொள்ளவேண்டும். சிலர் முருங்கைக்காயை சமையல்களில் நிறைய சேர்த்துகொள்வார்கள்.

ஆகவே இளம் பெண்கள் மனதில் தைரியமாக இருந்து, கடவுள் நிச்சயம் நமக்கு மழலைசெல்வத்தை தருவார் என்று நம்பிக்கையோடு இருக்கவேண்டும். இனிமேல் இதைபடித்தவர்கள் தாங்கள் சந்திக்கும் தம்பதிகளிடம் அன்புதொல்லை கொடுக்காமல் இருந்தால் சரிதானே? என்ன நான் சொல்றதுதுதுதுதுதுதுது.......