Showing posts with label திறமையாக வேலை செய்வது எப்படி. Show all posts
Showing posts with label திறமையாக வேலை செய்வது எப்படி. Show all posts

Thursday, April 8, 2010

திறமையாக வேலை செய்வது எப்படி??



திறமையாக வேலை செய்வது எப்படி??
How to Work Efficiently?
உங்களது டேபிளை சுத்தமாக வைத்திருக்கவும். அவ்வப்போது பேப்பர்களை பைல் செய்துவிடவும். அல்லாவிடில், வேண்டும்போது தேவையான பேப்பரை தேடுவதில் நிறைய நேரத்தை வீணடிக்கவேண்டியிருக்கும். வேண்டிய, வேண்டாத பைல்களையோ பேப்பர்களையோ, டேபிளின் மீது குப்பைபோல் அங்கும் இங்கும் போடக்கூடாது. ஒழுங்காக அடுக்கிவைக்கவும்.
டு டூ லிஸ்ட் / என்னென்ன வேலைகளை செய்யவேண்டும் என்று ஒரு பட்டியல் கோட்டு கண் எதிரில் வைத்தக்கொள்ளவும். முடிந்தால் எதை முதலில் செய்யவேண்டும், எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை ‘ஹை லைட்’ செய்துகொள்ளவும். ‘டெட் லைன்’ இருந்தால், இதையும் குறித்து, குறிப்பிட்ட நாளில் முடிக்கவும்.

மற்ற சக ஊழியர்களிடம் சொல்ல வேண்டிய வேலையாக இருந்தால், காலைவந்ததும், என்னென்ன இன்று செய்யவேண்டும். எந்த நாளுக்குள் செய்துமுடிக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடவும். முடிந்தவரை ஒரு பேப்பரில் எழுதி கொள்ளச்சொல்லுங்கள.. இல்லையெனில் 10ல் நான்கை மறப்பர். மற்றவர்களின் ஆலோசனைகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு கொடுங்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்த சகஊழியர்களை, மனதார பலரின் முன்பு பாராட்டவும்,. ஊக்கிவைக்கவும் தயங்கக்கூடாது. கோபம் அதிகமானால் டென்ஷன் ஆகாமல், கத்தாமல், அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடவும்.
இப்படி செய்தால்/இருந்தால் வேலை இன்னும் எளிதாக சீக்கிரம் செய்யமுடியும் என நீங்கள் நினைத்தால், உங்கள் மேல் அதிகாரிகளிடம் உங்கள் கருத்தை தைரியமாகச் எடுத்தச்சொல்லி, இப்படி செய்தால் இன்னென்ன பய(ல)ன்கள் ஏற்படும் என்பதையும் சொல்லுங்கள்.
எடுத்த ஒரு வேலையை முழுவதுமாக முடித்துவிட்டு, அடுத்தவேலைக்கு செல்லவும். எதையும் அரைகுறையாக செய்யக்கூடாது. எந்த வேலையை எடுத்தாலும் சிறப்பாக செய்யுங்கள். அதில் உங்களது தனி ‘டச்’ தெரியவேண்டும். அந்த அளவுக்கு யோசித்து, யோசித்து எந்த காரியத்தையும் செய்யவும்.


உங்களது கம்யூட்டர் அல்லது எலெக்ட்ரானிக் ஆர்கனைசரில் முக்கியமானவற்றை பதிவு (SAVE) செய்துவிடவும்.
எடுத்த வேலையை சரியாக செய்துள்ளோமா என்று கவனமாக பார்க்கவும். அவசரத்தில் நம்மை அறியாமல் பிழை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக படித்து, சரிபார்த்து, பிறகு கொடுக்கவும். எதிலும் இலக்கணப்பிழை இல்லாமல் நாம் சொல்லவேண்டிய விஷயத்தை சுருக்கமாக எழுதவும். வளவளவென்று எழுதினால் யாரும் படிக்கமாட்டார்கள்.
உங்கள் நேரம் உங்கள் கையில், ஆகவே எந்த நேரத்தில் எந்த வேலையை செய்யவேண்டும் என்பதையும் திட்டமிட்டால் நேரம் வீணாகாது. வெளியே செல்வதாக இருந்தால் சக ஊழியர்களிடம் செல்லும் இடம் மற்றும் எப்போது திரும்ப வருவீர்கள் என்பதை சொல்லிவிட்டு செல்லவும். எதற்கு எடுத்தாலும் சக ஊழியர்களை தகவல் கேட்டு தொல்லைகொடுக்க்கூடாது. ‘எக்ஸ்டென்ஷனில்’ போன் செய்து அந்த நம்பர் என்ன, இந்த நெம்பர் என்ன என்று கேட்பதற்கு பதில், கம்யூட்டரில் POP-UP-ஐ இன்ஸ்டால் செய்யச்சொல்லவும். இதனால் இருவரும் வேண்டிய தகவலை எளிதில் போனின் உதவியின்றி பெறமுடியும். நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

திறமையாக வேலை செய்யவேண்டுமானால், நடுவே சிறுசிறு ‘பிரேக்’ தேவை. ஒரே இட்த்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலைசெய்தல் மற்றும் கம்பயூட்டரை காலை முதல் இரவு வரை பார்த்து வேலைசெய்தால், தலைவலி ஏற்படும். நடந்து மாடிக்கு செல்வது, காபி குடிக்கச் செல்வது, சாப்பிட செல்வது போன்றவை உங்களுக்கு கொஞ்சம் ரிலேக்ஸ் தரும். எப்போது நல்ல மூடில் இருக்கிறீர்களோ அப்போது கடினமான வேலையை செய்யத் துவங்கவும். அவ்வப்போது முகம் கழுவி பிரஷ்ஷாக இருக்கவும்.

வீட்டுக்கு செல்வதற்கு முன் டேபிளை சுத்தமாக வைத்துவிட்டுச் செல்லவும். ஒரு சில வேலைகள் மிகச்சிறியதாக இருக்கும். மறக்காது என்று நினைத்தாலும், திடீர் வேலைபலு காரணமாக மறக்க நேரிடும். ஆகவே, நாளைக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை இன்றே எழுதிவைத்துவிட்டு சென்றால், எதையும் மறக்காமல் செய்ய முடியும்.

பணம், மின்சாரம், தண்ணீர், பேப்பர், பேச்சு. என அனைத்திலும் சிக்கனம் தேவை.


ராம்கி