Showing posts with label நினைப்பதெல்லாம் இமெயிலில் வந்துவிட்டால். Show all posts
Showing posts with label நினைப்பதெல்லாம் இமெயிலில் வந்துவிட்டால். Show all posts

Thursday, April 28, 2011

நினைப்பதெல்லாம் இமெயிலில் வந்துவிட்டால்

அன்றைய பாடல்கள் அனைவரின் மனதையும் இன்று தொட்டுநின்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை தனுஷ் இப்போது பாடினால் எப்படியிருக்கும், இதோ இப்படி

நடிகர்- தனுஷ் (கொஞ்சம் தாடியுடன், கண்கலங்கியபடி)
பாடலாசிரியர் - ராம்கி
படபிடிப்பு நடக்கும் சுழ்நிலை - கம்யூட்டர் (முன்பு கையில் பாட்டிலை பிடித்தபடி)

நினைப்பதெல்லாம் இமெயிலில் வந்துவிட்டால், நெட்மீது கோபமில்லை
படித்த இமெயிலையே நினைத்திருந்தால், அமைதி எங்குமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை, இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த சாட்டிங் முடிவதில்லை, மனிதன் கணணியிலே
(நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இமெயில், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ அனுப்புவார், நாமும் அனுப்புவோம், பௌன்சிங்கும் ஸ்பாமும் தெரியாது
பார்வேர்டு வருவதும் போவதும் தெரியாது
சாட்டிங்கில் மாட்டிக்கொண்டால் துன்பம் ஏதுமில்லை
(சாட்டிங்கில்) ஒன்றிருக்க, பலர்வந்துவிட்டால் அமைதி நமக்குயில்லை
(நினைப்பதெல்லாம்)

யாருடன் சாட்டிங் தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
இமெயில் ஐடியெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் தெரிந்துகொண்டால் இமெயில் நட்பு தொடர்ந்துவிடும்
(நினைப்பதெல்லாம்)

ராம்கி