Showing posts with label ராம்கி - லேனாதிரு. லேனா தமிழ்வாணன்.. Show all posts
Showing posts with label ராம்கி - லேனாதிரு. லேனா தமிழ்வாணன்.. Show all posts

Friday, December 11, 2009

ராம்கி - லேனாதிரு. லேனா தமிழ்வாணன்.

ராம்கி - லேனா
திரு. லேனா தமிழ்வாணன். ஒரு சிறந்த பேச்சாளர். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். இவரது வெளிநாடு பயண கட்டுரைகளும், ஒருபக்க கட்டுரைகளும் பெரும்புகழ் பெற்றவை. சென்னைவாசி.
மேடையில் பேசும்போது எப்போதும் “ஸ்டாப் வாட்ச்” வைத்துக்கொண்டு பேசும் ஒரே பேச்சாளர் இவர். நேரம் தவறாமல் குறிந்த நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு செல்வார். அண்மையில் கோவையில் பேசிய அவரது தொகுப்பு உங்களுக்காக:-

நேரம் தவறாமை
இவர் ஒரு முறை அமெரிக்கா சென்ற போது, ஒரு பத்திரிகை ஆசிரியரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். சென்ற இடம் புதியது வான் உயரமாக கட்டிடம். எந்த தளத்திற்கு செல்லவேண்டும் என்று கண்டு பிடிப்பதில் சற்று நேரம் கடந்துவிட்டது, உள்ளே சென்றதும் அந்த பத்திரிகையாளர் நேரம் தாழ்த்தி வந்தமைக்கு “யூ இண்டியன்ஸ்” என்று குறிப்பிட்டு கேளியாக பேசினார். தன்னைப்பற்றி சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, ஒட்டுமொத்த இந்தியர்களைபற்றி அல்லவா கேவலாக இவர் நினைத்துவிட்டாரே என்ற ஒரு வைராக்கியத்தில் அந்த நாள்முதல் எந்த இடத்திற்கு செல்லவேண்டியிருந்தாலும் முன்கூட்டியே விவரம் அறிந்து, குறிந்த நேரத்திற்கு சற்று முன்பாகவே இருக்க பழகிக்கொண்டாராம். (அட நாமும் பின்பற்றலாமே?)

பட்டிமன்றத்தில் ஏன் பங்கேற்பதில்லை?
எந்த பட்டிமன்றத்திற்கும் பெரும் வரவேற்பு தான். அங்கே மேடையிலே இரு கோஷ்டியினர் சண்டைபோட்டுக்கொள்வதால் தான் என்னவோ பெரும் வரறேப்பு கிடைத்துவருகிறது, எதிர்கட்சியில் இருப்பரின் குடும்பத்தாரை திடீரெனை தங்களுக்கு அக்கா, அண்ணி என்று உறவுமுறையிட்டு அவர் இப்படி சொன்னார், இவர் எப்படி செய்தார் என்று இல்லாத்தைச்சொல்லி பூசல் ஏற்படுத்துவதால் தான் என்னவோ மிகுந்த வரறேப்பு உள்ளதோ? இவரை பலமுறை பட்டிமன்றங்களில் பேசவும் தலைமை தாங்க அழைப்புவந்தும் மறுத்துவிட்டாராம் (ஆஆ..இப்படியும் ஆட்டை போடறாங்களாய்யா?). யாருடனும் சண்டைபோடுவதை தவிற்கவும்

நானும் ஒரு பாவி
இவர் ஒரு முறை சென்னை விமானநிலயத்திற்கு நண்பரை அழைக்கசெல்லவேண்டி காரில் சென்று கொண்டிருக்கும்போது, ஒருவர் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் விழுந்துகிடந்துள்ளார். பல வாகனங்கள் அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தாலும், ஒருவரும் உதவ வரவில்லை. தனக்கு நேரமாகிவிட்டதால் விழுந்தகிடந்தவருக்கு உதவாத பாவிகளில் தானும் ஒரு பாவி என்று மனம் நெகிழ்ந்தார் லேனோ தமிழ்வாணன். (எங்கே மனிதாபிமானம்?) முடிந்தவரை உங்களின் உதவிக்கரத்தை நீட்ட எப்போதும் தயங்காதீர்கள்.

(தன் பேச்சுக்கு நடுவே...நான் பேச ஆரம்பித்து இத்தனை மணித்துளி, இத்தனை செகண்டுகள் ஆகிவிட்டது என்று அடிக்கடி சொல்வதை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.)

குடும்பத்தாரோடு நிறைய நேரங்கள் செவழியுங்கள். மனதை சந்தோஷ நிலையில் எப்போதும் வைத்திருக்கவேண்டும். எலாஸ்டிக் ரப்பர் பேண்டு போல எளிதில் எந்த சந்தர்ப்பத்திலும் சகஜ நிலைக்கு திரும்பிவிடவேண்டும். நடந்ததையே நினைத்துக்கொண்டு துயரமாக இருக்க வேண்டாம். எதற்கும் டென்ஷன் அடையக்கூடாது, அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். எதிரிகளில் வார்த்தைகளை கவனத்தில்கொண்டு சாதனை செய்யு முயலுங்கள்

மேடையில் லேனா அவர்கள் 1 மணி 30 நிமிடங்கள் பேசி அமர்ந்த்தும் சிறிகு நீர் அருந்திவிட்டு, தன் சட்டைமேல் பேக்கட்டிலிருந்து ஒரு பேகட்டை திறந்து தன் கையில் எதையோ கொட்டிக்கொண்டார். பான்பராக்கோ அல்லது பாக்கையோ மெல்லப்போகிறார் என்ற நினைத்த எனக்கு ஆச்சர்யம். பலுஎடுப்பவர்கள் போல் கைகளில் பவுடரை இருகைகளிலும் தடவி, தன் முகத்தில் மெல்ல மெல்ல பார்வையாளர்களுக்கு தெரியாதவண்ணம், லேனா டச்சப் செய்துகொண்ட போதுதான் எனக்கு பெருமூச்சு வந்த்து. (பின் பலபேர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முணைந்தபோது அவர் என் டச்சப் செய்துகொண்டார் என்ற விவரம் எனக்கு விளங்கியது.........லேனா மேனா தான்,,,(அப்பா இப்பவே கண்ணைகட்டதே)
"PORUR" RAMKI