Monday, January 4, 2010

ஸ்ரீ செருநெட்டூரி பகவதி அம்மன் பாமாலை

ஸ்ரீ செருநெட்டூரி பகவதி அம்மன் பாமாலை


எங்கள் குலதெய்வம் அம்மா எங்கள் குலதெய்வம்
செருநெட்டூரி பகவதிதான் எங்கள் குலதெய்வம்


தீபஒளியாய் ஜொலித்திடுவாள் எங்கள் குலதெய்வம்
தீயசக்திகளை அழித்திடுவாள் எங்கள் குலதெய்வம்

மலர்களின் மணத்தினிலே எங்கள் குலதெய்வம்
மலைசந்தனத்தின் வாசத்திலே எங்கள் குலதெய்வம்

கற்பூர ஜோதியிலே எங்கள் குலதெய்வம்
கருணைக் கடலே எங்கள் குலதெய்வம்

யானைமீது பவனி வருவாள் எங்கள் குலதெய்வம்
யாகம் அதை ஏற்று வருவாள் எங்கள் குலதெய்வம்

எமது குலம் வாழ கர்ப்பவளாம் எங்கள் குலதெய்வம்
வம்சம் தழைத்திடவே அருள்வாள் எங்கள் குலதெய்வம்

எங்கள் குலதெய்வம் அம்மா எங்கள் குலதெய்வம்
செருநெட்டூரி பகவதிதான் எங்கள் குலதெய்வம்


தங்க சலங்கை ஒலிக்க ஆடி வருவாள் எங்கள் குலதெய்வம்
நம் சங்கட்ங்கள் நீக்கிடவே , வருவாள் எங்கள் குலதெய்வம்

வாளேந்தி காத்திடுவாள் எங்கள் குலதெய்வம்
வாழ்நாளில் துணையிருப்பாள் எங்கள் குலதெய்வம்

நாகதோஷம் தீர்த்திடுவாள் எங்கள் குலதெய்வம்
நம் பாவங்களை போக்கிடுவாள் எங்கள் குலதெய்வம்

நோய், விஷங்கள் நீக்கிடுவாள் எங்கள் குலதெய்வம்
தாயாய் தான் பார்த்திடுவாள் எங்கள் குலதெய்வம்

ஆராட்டில் மகிழ்ந்திடுவாள் எங்கள் குலதெய்வம்
பாராட்டி மகிழவைப்பாள் எங்கள் குலதெய்வம்

கலசநீரில் குளிர்ந்திடுவாள் எங்கள் குலதெய்வம்
கவசமெனக் காத்திடுவாள் எங்கள் குலதெய்வம்

எங்கள் குலதெய்வம் அம்மா எங்கள் குலதெய்வம்
செருநெட்டூரி பகவதிதான் எங்கள் குலதெய்வம்


சரணடைந்தால் வாழ வைப்பாள் எங்கள் குலதெய்வம்
நல்ல வரம் பலவும் நல்கிடுவாள் எங்கள் குலதெய்வம்

பெரு நிதியும் தந்திடுவாள் எங்கள் குலதெய்வம்
அருள் விழிப் பார்வையாலே எங்கள் குலதெய்வம்

மஞ்சள குங்குமத்திலே மின்னும் எங்கள் குலதெய்வம்
தஞ்சமடைந்தோரை தாங்கிடுவாள் எங்கள் குலதெய்வம்

வர்க்க பேதமின்றி தான் அருள்வாள் எங்கள் குலதெய்வம்
சொர்க்கமிது என்றே ஆக்கிடுவாள் எங்கள் குலதெய்வம்

நீர்வளமும் நிலவளமும் ஓங்கிடவே எங்கள் குலதெய்வம்
பார்முழுதும் பாலிப்பாள் பார்வையாலே எங்கள் குலதெய்வம்

கலைகளும், கல்வியும் வளர்ந்திடவே எங்கள் குலதெய்வம்
கலைமகளாய், அலைமகளாய், மலைமகளாய் அருளும் குலதெய்வம்

எங்கள் குலதெய்வம் அம்மா எங்கள் குலதெய்வம்
செருநெட்டூரி பகவதிதான் எங்கள் குலதெய்வம்


K.R. BROTHERS

No comments:

Post a Comment