ஒழுக்கம் தவறேல்
நல்லொழுக்கத்தை [Discipline] தவறினால் வேண்டாத பழிகளையெல்லாம் அடைந்து துன்புறத்தான் வேண்டியிருக்கும்.
முதலில் ஒழுக்கமாக இருக்க பழகிகொள்ளவேண்டும், மற்றவர்களின் ஒழுக்கம் நம்மீது தினிக்கப்படலாம். அது நல்லதற்காகத்தான் என எடுத்துக்கொண்டு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். அனைவருக்கும் ஒழுக்கமாக வாழவேண்டும் என்று தான் எண்ணுவதுண்டு. அதையே ஒரு வழக்கமாக தொடருங்கள். ஒழுக்கமாக வாழ நாம் எதுவும் கையைவிட்டு செலவு செய்யவேண்டியது இல்லை அல்லவா? நாம் ஒழுக்கமாக வாழ்ந்தால், செல்வம் நம்மைத்தேடிவரும். நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்த்த்தை ஏற்படுத்துவது நாம் கடைபிடிக்கும் ஒழுக்கம். ஒழுக்கத்தை கடைபிடித்தால் நம் நிலையும், மதிப்பும் கூடும். ஏன் ஒரு தனி முதல் மரியாதையே சென்ற இடத்தில் எல்லாம் கிட்டும்.
எல்லோரும் பயன்யடைக்கூடியவகையில் எந்த காரியத்தையும் செய்யுங்கள்.. எதையும் சுயநலத்திற்காக பார்க்காமல் பொதுநல நோக்கில் பார்க்கவும். சின்ன சின்ன விஷயத்திற்காக ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தால். ஒழுக்கம் நிறைய பலன்களை தரும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, ஒழுக்கத்தை உங்கள் உயிரைவிடச் சிறந்த்தாகப் போற்றுஙகள்.
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
உடலை வருத்தியாவது ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். ஒழுக்கமுடையவன் உயர் குடியை சேர்ந்தவனாகிறான். ஒழுக்கமில்லாதவனிடத்தில் உயர்வு இருக்காது, நல்லொழுக்கத்துடன் வாழ்வதுதான் நல்வாழ்வுக்கு விதை போன்று அமையும். உலகிலுள்ள மக்களின் வாழ்க்கையோடு ஒட்டி இணைந்து வாழ்த் தெரிந்தவர், ஒழுகும் முறையைக் கற்காதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் அறிவில்லாதவராகவே கருதப்படுவர். அட்டா எத்தனை உண்மை?????
<strong>ராம்கி
உங்களால் முடியும்........................
நீங்கள் என்னால் முடியும் என்று நினைத்தால், எதுவும் முடியும். எல்லாம் சாத்தியமே......இதில் எந்த சந்தேகமும் இல்லை.
முயன்றது நடக்க வில்லை என்றால், அதில் ஏதோ ஒரு குறையுள்ளது என்று எண்ணி, அந்த குறையை நீக்க வேண்டும். எங்கோ, எதிலோ நாம் தடம் மாறியுள்ளோம் என்பதை உணரவேண்டும். ஆம் தடைகற்கல் இல்லாத வாழ்கை பயணம் ஏது? எதுவும் நாம் நினைத்த பட்சத்தில் சட்டென கிடைக்காது. வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதல்ல அனைவருக்கும். இருந்தாலும் தங்களுக்குத் தெரியும் முயன்றால் எதுவும் நடக்கும் என்பதும், நடக்காது என்று எதுவுமே இல்லை என்றும். (என்ன நிஜம் தானே?).
ஒரு காரணத்தை காட்டியோ, ஒரு வருத்தம் (எக்ஸ்கியூஸ்) தெரிவித்தோ எளிதில் நமது இலட்சியத்திலிருந்து, நம்மால் முடியாது என ஒதுங்கிவிடக்கூடாது. நமது இலட்சியம்... நமது இலக்கு... நமது குறி... அதில்தான் நாம் முழு கவனமும் செலுத்தவேண்டும். இது உங்களது விருப்பம்...இது உங்களது வாழ்க்கை....ஆகவே துவங்குங்கள் இப்போதே....உங்கள் லட்சியத்தை எட்டக்கூடிய பல வகையான வாழ்ப்புகளும், சந்தர்ப்பங்களும் உங்கள் வருகைக்காக, பல வழிகளில் காத்துக்கிடக்கிறது.. உங்கள் பாதங்களை அந்த வழிகளுக்காக முன்னுக்கு எடுத்துவையுங்கள்.....ஏன் இனி தயக்கம? நீங்கள் நினைத்தது நடக்கும். அதற்கு பின் நினைத்ததை முடிப்பவன் நான்.. நான்.. நான்.. என்று உங்கள் கைகளை உயர்த்தி பாடவேண்டியது தான் பாக்கி அல்லவா? ஆகவே, எதுவும் உங்களால் முடியம் என நம்புங்கள்
......எஸ் YOU WILL.
RAMKI
*
வெற்றி மீது வெற்றியே
எதிலும் வெற்றிபேற வேண்டுமானால் முதலில் உங்களைத்தானே வெற்றி பெற்றவர்ராக நினைத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பாஸிடிவ் எண்ணங்களின் வழி செல்லுங்கள்.. முயலாமல் இருப்பது, ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அதையே நம்புவது, மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புவது, உங்கள் திறமையின் மீது நீங்களே சந்தேகப்படுவது..... இவை எல்லாம் வேண்டாமே.... உங்களை முதலில் உயர்வாக நினையுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தில் முழுமையாக ஈடுபட்டு,
எடுத்த காரியத்திற்கும் மரியாதை கொடுங்கள். ஆயிரம் எண்ணங்கள் உங்கள் மனதில் உதயம் ஆகிக்கொண்டு தான் இருக்கும் அல்லவா? அந்த எண்ணங்களில்
சரியானதை வடிகட்டி தேர்வுசெய்யுங்கள். விரும்பியதை நம்பி, அதுபற்றி முழுமையாக தெரிந்துகொண்டு அதில் ஈடுபடுங்கள். எப்போதும் வெற்றியை நினையுங்கள். வெற்றியடைவோம் என நினையுங்கள். நல்லதாகவே முடியும்
என நினையுங்கள், சந்தோஷமாகவே இருப்பதாக நினையுங்கள். ஊக்கம் தறக்கூடிய எண்ணங்களோடு செயல்படுங்கள். வெற்றி பெற்றவர்களோடும, சாதனை படைத்தவர்களோடும் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.. மனத்தெளிவுடன் செய்யத்துணிந்த செயலைச் சோம்பலின்றிக் காலம் கடத்தலைத் தவிர்த்து விரைவில் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் சும்மாவா சொல்லியிருக்கிறார்?
உங்கள் இலட்சியத்தில் முழு கவனம் செலுத்தி ஈடுபடுங்கள். உங்களின் வெற்றியையே மீணடும் மீண்டும் நினையுங்கள். அதில் சிறிதளவும் சந்தேகமில்லாமல, எடுத்த காரியத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டால் வாழ்வில் வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் என்று நான் சொல்லவும் வேண்டுமா? ஆல் தி பெஸ்ட்.
ராம்கி
*
எதற்கும் தயார்
நாம் நினைத்தெல்லாம் தானகவே நம்மைத் தேடிவரும் என்று காத்திருந்து காத்திருந்து நொந்து போகாதீர்கள். தானாக வருவது, வரும்போது வரட்டும்.
வாய்ப்புகளைம் சந்தர்ப்பங்களையும் எதிர்நோக்கியிருப்பதை விட்டுவிட்டு அதற்கான முயற்சியோடு உழையுங்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது ஏவிஎம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல நமக்கும் தான். வாய்ப்புகளையே எதிர்நோக்கியிருக்க வேண்டாம். நம்மைத்தேடி தானாகவே எல்லா வாய்ப்புகளும் வரும் என பகல் கனவுடன் இருந்தால், உங்கள் கண்பார்வையில் உள்ள அருமையான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் கூட உங்களுக்குத் தெரியாது. எந்த வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதறாக முழு ஊக்கத்துடன் உழையுங்கள். பாடுபடுங்கள். வாய்ப்புகளை நீங்கள் தேடி செல்லுங்கள். அப்படி உழைத்தால், வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தயாராக இருங்கள். பிறகு தேடிவந்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நன்றாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள். உங்கள் உழைக்கும் கரங்களை நம்புங்கள். உழைக்காமலும், சிரமப்படாமலும் வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் யாருக்கு கிடைத்துவிடும்?
உறுதிமிக்க ஊக்கத்தை உடையவனிடத்தில், பொருளானது தானே வழி கேட்டுக்கொண்டு வந்து சேரும் என்கிறார் வள்ளுவர். இக்கட்டுரையை படிக்க கிடைத்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி இருந்த்து?? அது சரி, இப்போ எதற்கும் தயாராக இருங்கள்.
நம் இடைவிடாத ஊக்கத்தினளவுதான், நம் வாழ்வில் உயர்ச்சி..............
ராம்கி
*
மன்னிப்பு = எனக்கு பிடித்த ஒரே வார்த்தை
பிறரின் பலவீனங்களை மட்டுமே பார்ப்பது ஒரு தொற்றுவியாதி போன்றது. ஆகவே இன்றிலிருந்து உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள் பிறர் குற்றம் செய்தாலோ அல்லது எதாவது சொல்லிவிட்டாலோ, தங்களின் தவற்றை உணர்நது உங்களிடம் மன்னிப்பு கேட்கவந்தால் அவர்களை மன்னிக்க பழகிக்கொள்ளுங்கள். உங்களின் மன்னிக்கும் குணம் உங்களை வலுவாக்குகிறது. மேலும், வாழ்வில் மேல் நோக்கி உயர உதவுகிறது. வார்த்தை தவறுதல், மற்றவர்கள் செய்த தவறுகளோ, சொன்ன வார்த்தைகளோ, அல்லது வாக்கு கொடுத்து முடியாத கார்ரியங்களோ போன்றவற்றை யாராலும் திருப்ப்பெறமுடியாது, சொன்ன வார்த்தை சொன்னதுதான். செய்த செயல் செய்த்து தான் அல்லவா? அதுபோன்ற செயல்களை செய்தவர்களையும், தவறவாக அறியாமல் பேசியர்வகளையும் மன்னித்து, அடுத்த காரியத்தில் கவனம் செயலுத்தவேண்டியது தான் ஒரே வழி. அப்படி மன்னிப்பதால் உங்கள் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மன்னித்தல் என்பது மற்றவர்கள் செய்த காரியத்திற்கோ, பேசியதற்கோ துணைபோவது என்று அர்த்தம் அல்ல.. மன்னித்தல் என்பது அந்த செயலைவிட உங்கள் உயர்த்தி காட்டும் வல்லமை உடையது. மேலும் நமக்கு தன்னம்பிக்கை அளித்து, நம்மை அடுத்த காரியத்தில் மனதார ஈடுபடசெய்யும் தன்மை கொண்டது. மன்னிக்காமல் உங்கள் மனதிலே கேட்ட வார்த்தைகளையோ, நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையோ திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டு, என் சோககீதத்தில் மூழ்கவேண்டும்.. மன்னிப்புக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி தான். மன்னிக்கத் தெரிந்தவன் மாமனிதன் ஆகிறான். இப்போ, உங்களுக்கு பிடித்த தமிழ் வார்த்தைகளில் மன்னிப்பு என்ற ஒன்றும் உள்ளது தானே?
ஆஹா மன்னிச்சுட்டாங்கையா....மன்னிச்சுட்டாங்கையா..............
ராம்கி
No comments:
Post a Comment