Saturday, March 26, 2011

குழந்தைகளுக்கான 8 திறமைகள்

குழந்தைகளுக்கான 8 திறமைகள்
-RAMKI, Coimbatore. M 9790684708


உங்கள் குழந்தைகளுக்குள் பல திறமைகள் (Skills) மறைந்துகிடக்கலாம் அவற்றுள் கீழ்கண்ட 8 வகை திறமைகள் மிக அவசியம். இந்த எட்டுவகை திறமைகளும் உங்கள் குழந்தைக்கு இருந்துவிட்டால் அவர்களது வெற்றிக்கு கேட்கவா வேண்டும்,


குழந்தைகளுக்கான 8 திறமைகள்
படத்தில் இருப்பது கிருஷ்ணாவும், யாழினியும், (போட்டோ ராம்கி)


1. தனித்து திறம்படும் திறமை / Self-Managing Skills:

எதையும் தனித்து, யோசித்து, தன்னம்பிக்கையுடன் செயல்படும் திறமை.


2. மனதை ஒருமை படுத்தும் திறமை Mind Control Skills:

மனதை ஒருமைப்படுத்தி, எடுத்த லட்சியத்தை அடைவதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திறமை

3. சாமர்த்தியாக படிக்கும் திறமை Smart Study Skills:

பாடங்களை எப்படி படிப்பது, குறிப்பாக விரைவாக படிப்பது எப்படி, படித்ததை மறவாமல் இருப்பது எப்படி, தேர்வில் அதிக மார்க் எடுப்பது போன்ற திறமைகள்.


4. கூர்மையான மூளைத்திறமை Sharp Mental Skills:

எடுத்த வேலையில் முழுகவனம் செலுத்துவது, சட்டென கிரகிப்பது, புரிநது கொள்வது, காரணங்களை கண்டு அலசி ஆராயும் திறமை, மூளையை முழுவதுமாக பயன்படுத்தும் திறமை.


5. ஏற்ற வேலையை தேர்வு செய்யும் திறமை Career Choosing Skills:

தனக்கு என்னென்ன திறமை உள்ளன, ஆர்வம் எதில் அதிகம், எதைப்படிக்கமுடியும், என நன்கு ஆராய்ந்து பார்த்து அதில் திறமை காட்டுவது. சிறந்த வாழ்க்கை வாழ தனக்கு எந்தத்துறை ஒத்துவரும் என்று அறியும் திறமை,


6. மற்றவர்களிடம் பழகும் திறமை Personality Development Skills:

மற்றவர்களை கவர்வது எப்படி? மற்றவர்களிடம் எப்படி தனது தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்வது. மற்றவர்களோடு எப்படி பழகுவது. மற்றுவர்களோடு எப்போதும் நட்புறவுடன் வாழும் திறமை

7. வித்யாசமாக யோசிக்கும் திறமை Creative Skills:

புதியவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம், புதிய யுக்திகளை கையாளும் திறமை, பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு காணும் திறமை. போட்டிமிகுந்த வாழ்வில் சாதானை படைக்க இத்திறமை மிக அவசியம்,

8. நலம் காக்கும் திறமை Health Skills: நல்ல சுவர் இருந்தால் தானே சித்தரம் வரையமுடியம். குழந்தைகளுக்கு பலதிறமைகள் ஒளிந்து கிடந்தாலும், உடல் நலம்நன்றாக இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். உடல் நலம், மற்றும் மனநலம் காக்கும் திறமையும் முக்கியம்

உங்கள் குழந்தைகளை எப்போதும் உற்சாகப்படுத்தி, ஊக்கிவித்து வந்தால் LITTLE SUPER STAR குழந்தைகளாக மாறிவிடுவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ராம்கி

1 comment:

  1. அன்பு நண்பர் வடாலாரே ,
    வணக்கம் பல. கேரளம் சென்று இன்றுதான் திரும்பி வந்தேன்.வந்தவுடன் வடாலாரின், இன்றைய " வாடாமழலையர்"களுக்குள்
    ஒளிந்து கிடக்கும் வகைவகையான ஆக்கபூர்வ திறமைகளைக்
    கோடிட்டுக் காட்டிய மின்னஞ்சல் கண்டேன்.பெருமிதம் கொண்டேன்.
    இன்றைய இளம் குழந்தைகள் உண்மையிலேயே மிகமிகத் திறமை
    சாலிகள்தான் . ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை இது. அந்தத் திறமைகளை
    இனங்கண்டு, வெளிக்கொணர்ந்து , பட்டை தீட்டிய வைரங்களாகத் தரவேண்டியது
    நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையும் பொறுப்புமாகும்.
    வாளாயிராது, வடாலார் போல் ஒவ்வொருவரும் செயல் பட்டால்,
    நம் குழந்தைச் செல்வங்கள் அனைவருமே நம் நாட்டினை எல்லாத்
    துறைகளிலும் முதலிடம் பெறச் செய்வர் .இது உறுதி.
    தொடரட்டும் உம் பணி. என்றும் எம் ஆதரவு உமக்குண்டு.நன்றி.
    வணக்கம்.
    அன்புடன்.
    N .சுந்தரம்.Mumbai

    ReplyDelete