Friday, March 12, 2010

சிரிப்பு வருது சிரிப்பு வருது,


சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போல் இந்த சிரிப்பும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நீங்க சிரிச்சா. பக்கத்திலே உள்ள அனைவரும் சிரிப்பாங்க. சிரிப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றவர்களோடு நெருக்கமாக உதவுகிறது, கவலையிலிருந்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது.. சிரிக்க பணச்செலவு இல்லை. எளிதும் கூட.


சிரிப்பதால் பலன்கள்
முதலில் மனதிற்கு மகிழ்ச்சி கிட்டுகிறது. நமக்கு தெம்பூட்டுகிறது; ஹார்மோன்களுக்கு ஊக்கம் அளிக்கிறது; உடல்வலியை மறக்கவைக்கிறது. சதைபகுதிகள் லேகுவாகிறது, இருதயம் சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாப்பு; இரத்த அழுத்தம் குறைதல். வாழ்வில் பற்று மற்றும் சந்தோஷம்; பயமின்மை; மனகவலை குறைவது; நல்ல மூடு வரும்; மனம் இறுக்க நிலையிலிருந்து சகஜநிலைக்கு மாற்றும்; நம் நட்பும் உறவும் பலப்படும்; மற்றவர்களை நம்பக்கம் திசைதிருப்பும்; கூட்டாக (டீம் ஒர்க்) வேலை செய்ய உதவும்

சிரிக்க வாய்ப்பு இல்லையா?
நிறைய இருக்கே,
காமெடி படங்கள் பாருங்க
கார்ட்டூன் டிவி பாருங்க
காமெடி நாடகத்துக்கு போங்க
ஜோக்ஸ்களை ரசித்து படியுங்க
ஜாலி பேர்வபழிகளுடன் நட்புகொள்ளுங்க
ஜோக்ஸ் அடிச்சுகிட்டு இருங்க
ஜோக் புத்தகங்களை வாங்கிகுங்க
நண்பர்களோட விளையாடுங்க
செல்லபிராணிகளோடு விளாயாடுங்க
லாப்டர் யோகா கிளாசுக்கு போங்க (இது என்னதாயி புதுசா இருக்கு)
குட்டீஸ்களோடு விளையாடுங்க, கொஞ்சுங்க
காமெடி கீமெடி, ரவுஸ்னு பண்ணுங்க. பண்ணுங்க பண்ணிகிட்டேயிருங்க

முதலில் தினமும் புன்முறுவலுடன் உங்கள் தினத்தை துவங்குங்கள்..எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல நட்பும், உறவும் மலரும். வாழ்வில் மனிதநேயம் வீசும். எல்லாவற்றிற்கும் மேலாக வாய்விட்டு சிரிச்சா, நோய் விட்டு போகும்னு பெரியவா சொல்லியிருக்கா ஓய்....”LAUGHTER IS A BIG GIFT THAT KEEPS ON GOING…….” என்னே உங்க ஆனந்த சிரிப்பு.....................

RAMKI

No comments:

Post a Comment