TEAM WORK
MR. NAGARAJ, RAMKI & SANJAY at AIOC2010 KOLKATA
டீம் ஒர்க்
ஒரு குறிக்கோளையோ அல்லது இலக்கையோ அடைய கூட்டு முயற்சி (டீம் ஒர்க்) மிக அவசியம். டீம் ஒர்க் என்பது தற்போது பெரிய நிறுவனங்களில் மட்டும் கடைபிடிப்பதில்லை,
சுதநதிரம் கூட ஒரு கூட்டுமுயற்சியால் கிடைத்த்துதான். வேட்டுயாடப்போகும் போது, ஒரு கூட்டமாகவே செல்வார்கள். பல காய்கறிகளைப்போட்டு, கூட்டு செய்தால்கூட எவ்வளவு சுவையாக உள்ளது. ஆக டீம் ஒர்க் என்பது, இன்று நாம் வேலைசெய்யும் இடங்களில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது.
டீம் அல்லது குழு வேலைத்திறனை இவ்வாறு எடுத்துக்கெர்ள்வோம்.
T – Together
E – Everyone
A - Achieves
M – More
ஒரு அலுவலகத்தில் கூட்டாக வேலைசெய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பறவைநோக்கில் பார்ப்போமா? வாருங்கள் என்னுடன்......
கற்க
ஆண் பெண் பாகுபாடு இன்றி, கூட்டாக வேலைசெய்யும் போது, நம்மால் எதையும் வேகமாக செய்யமுடியும். பலருடைய அனுபவமும், அறிவாற்றலும் கூட்டுசேரும் போது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது மிக எளிதாகிறது, அதுமட்டுமின்றி செய்யும் வேலையில் தவறுகள் நடக்காமல் இருக்க உதவுகிறது.
என் பங்கு
டீம் ஒர்க்கில் பல வேலைகளை பங்கிட்டுக்கொண்டு அதில் திறம்பட கவனம் செலுத்தமுடிகிறது, அப்படி இல்லாவிட்டால் பலவேலைகளை ஒருவரே தலையில் போட்டுக்கொண்டு திண்டாடுவதை பார்க்கிறோம், அந்த நிலை டீம் ஒர்க்கில் இருக்காது. அவர்அவர்களுக்கு ஒதுக்கப்பட்டவேலையை கவனமாக, சிறப்பாக செய்தாலே போதுமானது,.
நட்புப் பாலம்
ஒரு குழுவாக சேர்ந்து மாதக்கணக்கில் வேலைசெய்வது, ஒன்றாக உண்பது, வெளியே ஒன்றாக செல்வது, சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றால் நட்புறவு பலப்படும். பலர் வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். தற்போது ஜாதி, மத பாகுபாடின்றி பல காதல்திருமணங்கள் இந்த டீம் ஓர்க் வேலைசெய்யும் இடங்களில் சர்வசாதரணமாக நடக்கிறத என்பதை நம்மால் மறுக்க முடியுமோ?
சபாஷ்......சரியான போட்டி
ஒருவருக்கொருவர் போடிபோட்டுக்கொண்டு வேலைசெய்யும் வாய்ப்பு ஒரு குழுவாக வேலைசெய்யும்போது கிடைக்கும். அதனால் நம் தனித்திறனை வெளிகாட்டி, விரைவில் உயர்நிலை/உயர்பதவிக்கு செல்லமுடியும். மேலும் நம் கீழ்உள்ளவர்களுக்கு கற்றுத்தரவும், கைகொடுத்து ஊக்கமும் அளிக்கமுடியும். சம்பளமும் விரைவில் உயரும். வாழ்வில் வளம் பெருகும.
புதிய பாதை
தனிமையாக இருக்கிறோம் என்ற உணர்வும், சோர்வும் டீம் ஒர்க்கில் இருக்காது, ஒருவர் விட்டால், மற்றவர் நமக்கு நல்ல யோசனைகளை சொல்வார்கள். மற்றவர்களின் நல்ல அறிவுரைகளும், ஆலோசனைகளும் நாம் புதிய வழிமுறைகளை கடைபிடிக்கவும், புதிய முயற்சிகளில் ஈடுபடவும் வழிவகுக்கும்.
மனநிறைவு
ஒரு குழுவாக வேலைசெய்வதால், நம் வேலையில் மனநிறைவு கிடைக்கிறது. நம் குழுவின் ஒட்டுமொத்த கூட்டுத்திறமையை காட்டமுடியும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதாக அடையமுடியம், மேலும் வேலையில் சந்தோஷமாக ஈடுபடமுடியும். நமக்கு ஓதுக்கப்பட்ட வேலையில், சுறுசுறுப்பாக ஈடுபட ஒரு ஊக்கமாக அமையும்
ஜெட் வேகம்
நிர்ணயிக்கப்பட்ட வேலையை, சரியாக அனைவரும் புரிந்து, பகிர்ந்து கொள்வதால் வேலையை ஜெட்வேகத்தில் செய்யமுடியும். நமக்கு ஒதுக்கப்பட்ட காலகெடுவுக்கு முன்பே எந்த வேலையையும் முடிக்கமுடியும்.
பல செயல்கள் (குறிப்பாக புராஜேக்ட்ஸ்) அல்லது பல சேவைகள் (சர்வீஸ்) வேகமாகவும் தவறு அல்லது காலதாமதம் ஏற்படாமல் முடிப்பதற்கு டீம் ஒர்க் மிக அவசியம் என தெரிந்துகொண்டோம் அல்லவா? ஒருசிலருக்கு இப்படி கூட்டாக வேலைசெய்வதில் முதலில் அச்சமும், சில சிரமங்களும் இருக்கும். ஆனால், மற்றவர்களோடு பழகப்பழக சகஜநிலைக்கு வந்து, டீம் ஒர்க்கை என்ஜாய் பண்ணுவார்கள்.TEAM WORK & SUCCESS GO HAND IN HAND! என்று நான் சொல்லவும் வேண்டுமோ?
- ரா ம் கி
by separate emails:
ReplyDeletekalakittinga anna....
Nambi Rajan, Mumbai
*
Good topic U have sent to day and I am happy to share this with my friends and colleagues.
Big Brother. Sridhar, Chennai
*
Superoooo Super..na,,kindly forward it to Kumudam or Ananthavikadan!!
Veera, Covai
*
Good explanation for team work.
S.A. Ramchandar, Mumbai
*
Really interesting info. and thx
Ravi, Chennai
This comment has been removed by the author.
ReplyDelete