கார்ட்டூன்கள் பற்றி திரு. அப்துல் கலாம் அவர்கள்
APPEARED IN AIOC2010 ABSTRACT BOOK
கார்ட்டூன்கள் பற்றி திரு. அப்துல் கலாம் அவர்கள்
தமிழாக்கம் ராம்கி
“மிக கடின முயற்சிக்குப்பின் 1979ல் எஸ்எல்வி3 ஏவுகணை தோல்விகண்ட சமயத்தில், நானும் எனது மற்ற விஞ்ஞானிகளும் மிகவும் சோகமாக இருந்தோம். எங்களது இலட்சியத்தை எட்டமுடியவில்லையே எனற கவலையில் அனைவரும் மூழ்கியிருந்தோம்.
அச்சமயம், ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் பல பத்திரிகைகளில் எஸ்எல்வி3 ஏவுகணை தோல்வி கண்டது சம்பந்தமாக வெளியான கார்ட்டூன் (ஜோக்)களை தொகுப்பாக்கி என்னிடம் கொடுத்தார். நான் என் சகவிஞ்ஞானிகளுடன் ஒவ்வொன்றாக பார்த்து, படித்து மிகவும் ரசித்தேன். எங்களின் சோகத்துக்கான காரணம் கிடைத்தது. கார்ட்டூன்களையும், ஜோக்குகளையும் படித்து படித்து ஒரு மாதத்திற்கு பிறகு, எங்களையும் மறந்து அனைவரும் விழுந்துவிழுந்து சிரித்தோம். கார்ட்டூன்கள் கவலையைத்தீர்க்கும் ஒரு வலிநிவாராணி போன்றது என அப்போது என் மனதில் பட்டது. எங்கள் மனசு லேசானது. எங்கள் எல்லோருக்கும் ஒரு உற்சாகமும், புதிய தெம்பும், மனதைரியமும் உண்டானது. வெற்றியும் தோல்வியும் நம் வாழ்வின் ஒரு அங்கம் என உணர்ந்தோம். தோல்விகளை வெற்றிக்கு படிக்கற்கள் என மீண்டும் கடுமையாக அனைவரும் உழைத்தோம். எங்களுக்கு மீண்டும் நல்ல மனதைரியம் கிடைத்தற்கு கார்ட்டூன்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்ததை கண்டுகொண்டு, நாங்கள் இரவுபகலாக உழைக்க, எங்களது லட்சியம் 1980ம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறியது. அன்றிலிருந்து, எப்போதும் செய்தித்தாள்களை நான் கையில் எடுத்தால், முதலில் பார்ப்பது கார்ட்டூன்களைத்தான். கார்ட்டூனை பார்த்து, படித்து முழுவதும் ரசித்த பின்பே, நான் மற்ற முக்கிய செய்திகளைப்படிப்பேன். அதனால், எனது பத்திரிகை நண்பர்களை சந்திக்கும்போது, எப்போதும் கார்ட்டூன்களை முதல் பக்கத்திலேயே பிரசுரிக்க சொல்லிவருகிறேன்.
அடடே, என்னே கார்ட்டூன்களின் மகிழ்மை?? இனிமேல் நீங்கள் மறக்காம பாருங்க, ரசியுங்க....
தமிழாக்கம் / ராம்கி
RAMKI
No comments:
Post a Comment