Thursday, April 8, 2010

சேமிக்க 10 வழிகள

சேமிக்க 10 வழிகள


Actress Revathi & Ramki at a function held at Mumbai (file photo)

ஒன்று. கொஞ்சமாக செலவு செய்யுங்கள்...காலை பேப்பர் பால் வாங்குவதிலிருந்து துவங்கி எவற்றிலும், கொஞ்சமாக செலவு செய்யமுடியுமோ அந்த அளவுக்கு குறைவாக செலவு செய்யுங்கள். உதாரணம் . வாரஇதழ்கள் கூட இப்போது 20ரூபாய் போய்விட்டது, அதனால் புத்தகங்களை லென்டிங் லைப்ரரி மூலம் வாங்கி படித்தால் பணமும் மிச்சமாகும். நிறைய புத்தகங்களைப் படிக்கமுடியும.

இரண்டு. பட்ஜெட் எனக்கு பிடிக்காத வார்த்தை என்று டயலாக் அடிக்காதீர்கள்.. நமக்கு வரவு எவ்வளவு, செல்வு எவ்வளவு, எந்த மாதம் எதை கட்டவேண்டும், என்பதெல்லாம் அமைதியாக குடும்பத்தாரோடு அமர்ந்து ‘குடும்ப பட்ஜெட்’ தயாரித்துக்கொள்ளவும். அப்போ தெரியும், எவை வேண்டாத செலவு, எதில் எவ்வளவு பணம் சேமிக்கலாம் என்பது, வங்கி கணக்கை ஆரம்பித்து அதில் சேமிக்கலாம். அல்லது மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை (ஆர்டியாக) கட்டலாம். அல்லது மொத்தமாக பிக்ஸட் டெபாசிட் செய்யலாம்.

மூன்று. மொத்தமாக பல பொருட்களை வாங்கினால் நிறைய பணம் மிச்சம் செய்யலாம். மொத்தமாக சமைத்தால் கேஸ் முதல் எண்ணெய் வரை நிறைய மிச்சப்படுத்தலாமே. அதற்காக மொத்தமாக வாங்கிப்போட்டுவிட்டு சீக்கிரம் கெட்டுவிட்டது என்று குப்பையில் கொட்டக்கூடாது,. ஆகவே மொத்தமாக எதை வாங்கி முழுவதுமாக உபயோகிக்கமுடியுமோ அதைத்தான் வாங்கவேண்டும்.

நான்கு. எதை வாங்குவதாக இருந்தாலும், எஙகு விலை மலிவாக உள்ளது என்று பல கடைகளில் ஏறி, இறங்கி பார்த்து வாங்கவேண்டும். சில பொருட்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். அல்லது 50 சதவிதம் தள்ளுபடி என்று வரும் போது, அச்சமயத்தில் வாங்கி பணத்தை சேமிக்கலாம். அச்சமயம் பொருளின் தரத்தை பரிசோதித்து கவனமாக வாங்கவேண்டும்.

ஐந்து. பயன்படுத்திய பொருட்களை வாங்கியும் பணம் சேமிக்கலாம். குறிப்பாக கார், டூ வீலர், வீடு, நல்ல பர்னிச்சர்கள் போன்றவை பயன்படுத்தியிருந்தாலும் பல பொருட்கள் மிக நன்றாக இருக்கும். ஒரு சிலர் ஊரைவிட்டு அடுத்த ஊருக்கோ அல்லது அடுத்த நாட்டுக்கோ போகும் போது அதிக விலை கொடுத்து வாங்கிய பல பொருட்களை குறைந்த விலையில் அவசரத்திற்கு விற்க முயல்வார்கள். தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்வார்கள். இப்படி நேரிடையாக விற்பர்களிடம் வாங்கினால் பணம் நிச்சம் குறைவாக செலவாகும்.

ஆறு. முடிந்த வரை கடன் வாங்குவதை தவிரிக்கவும். அதுபோன்று பல கிரிடிட் கார்டுகளை வைத்து, அங்கும் இங்கும் புரட்டிப்போட்டு செலவு செய்து பலர் திண்டாடுகிறார்கள். சிலர் ஏகப்பட்ட வட்டியை வங்கியில் கட்டுவார்கள்.

ஏழு. சேமிப்பு. முடிந்த வரை பணத்தை தினமும் கொஞசம் சேமியுங்கள்...வாரக்கடைசியில் பாருங்கள் அல்லது மாசக்கடைசியில் பார்த்தால் கணிசமான பணம் சேர்ந்திருக்கும். நாளையிலிருந்து சேமிப்போம் என்று தள்ளிப்போட்டால் எதுவும் சேமிக்கமுடியாது, இன்றைய தினத்திலிருந்து, ஏன் இப்பொழுதிலிருந்து சேமிப்பேன் என்று வைராக்கியம் வைத்து சேமிக்க வேண்டும். சம்பளத்திலிருதோ அல்லது வங்கி கணக்கிலிருந்தோ நேரடியாக சேமிப்பது போல் ஏற்பாடு செய்தால் நிறைய சேமிக்கலாம். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா?

எட்டு. பெரிய பெரிய கடைகளில் ஏறி. பிராண்ட்ட் ஐடத்தில் பணத்தை அதிகம் செலவு செய்வதை விட்டுவிடுங்கள். தேவைக்கு ஏற்றபார் போல் வர்ங்குங்கள். சில பொருட்களை, மால் மற்றும் சுப்பர் மார்க்கெட் போன்றவற்றில் வாங்குவதை விட உழவர் சந்தை போன்ற இடங்களிலோ, நியாய விலை கடைகளிலோ வாங்கி பணத்தை சேமிக்கலாம். நேரடி கடைகளில் வாங்கும் போது விலை கம்மியாக இருக்கும்.


ஒன்பது. முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். குடும்பத்தோடு ஓட்டலுக்கு சென்றால் கேட்கவேண்டுமா செலவுக்கு?. காபி, டீ என்றாலும் வீட்டில் செய்து சாப்பிடவும். பாஸ்ட் புட், பீசா, பர்கர் போன்றவற்றிற்கு தற்போது மவுசு அதிகம். (அண்மையில் பீசா வர்ங்கியபோது அதன் விலை ரூ300க்கு வந்த்து, மூன்று பேர்கள் சாப்பிட்டும் வயிறு நிறையவில்லை என்பது அடுத்த விஷயம்). சத்துள்ள உண்வு பொருட்களையே சாப்பிடவும். முடிந்த வரை பச்சைகாய்கறிகளை சேர்த்துக்கொள்ளவும். பந்தாவுக்காக சாப்பிடில் அதிக பணம் செலவு செய்யவேண்டாமே.


பத்து. அதிக விலை என்று தெரிதால் எப்படிப்பட்ட பொருளாக இருந்தாலும் வாங்கவேண்டாம். பந்தாவுக்காக எந்த பொருளையும் வாங்கவேண்டாம். எதையும் சிக்கனமாக பயன்படுத்தவும். ஷேம்பு முதல், பெட்ரோல், தண்ணீர் வரை சிற்று சிக்கனமாக உபயோகிக்க பழகிக்கொள்ளுங்கள். மின்சாரத்தை கொஞசமாக செலவு செய்யுங்கள், வேண்டாத லைட், மின்விசிறி, கம்யூட்டர், டிவி, ஏசி போன்றவற்றை அணைத்துவிடுங்கள். சின்ன சின்ன விஷயத்தில் கவனமாக இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு எல்லாவற்றிலும் சேமித்தால் நிறைய பணம் நம்மை அறியாமலே சேமிக்க முடியும். ஆகவே, இன்றிலிருந்து உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும. வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும் சேமிப்பீர், மகிழ்ச்சியாடு வாழ்வீர். சிக்கன சிகாமணிகளே.............

RAMKI

No comments:

Post a Comment