Monday, December 6, 2010

சிறந்த முறையில் பிரசன்டேஷன் (Presentation) செய்ய 5 வழிகள்

சிறந்த முறையில் பிரசன்டேஷன் (Presentation) செய்ய 5 வழிகள்
Courtesy: "PreSense ezine"

Tamil Translation : ராம்கி


முறை 1
•உங்கள் முன் உள்ள பார்வையாளர்கள் (ஆடியன்ஸ்) யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
•எதைப்பற்றி பேசப்போகிறோமோ அது சம்பந்தமான தகவல்களை முன்கூட்டி தயாரித்துக் கொள்ளவேண்டும்.
•உங்களது பேச்சு நேரத்தின் அளவு எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

முறை 2
•எதற்காக, யார், எதற்கு, எப்பொழுது, ஏன் மற்றும் எப்படி என்று வரிசைப்படி பிரசன்டேஷனை வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.
•பவர்பாயிண்ட் அல்லது கையடக்க பேப்பரில் தகவல்களை பதிவுசெய்துவிடவும்
• உங்கள் முன் அமர்ந்து இருக்கும், பார்வையாளர்களுக்கு ஏற்ப தகவல்களை முறைப்படுத்திக்கொள்ளவும்
•உங்களது பேச்சினை சார்ந்த படங்கள் மற்றும் வீடியோ கிளிப்பிங்குகளை சரியான இடத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
• விற்பனை (மார்க்கெட்டிங்) சம்பந்தமான பேச்சாக இருந்தால் ஏஐடிஎ [A.I.D.A.] முறையை பின்பற்றவும். அதாவது கவனம் (அடேன்ஷன்), ஆர்வம் (இன்டரஸ்ட்), விருப்பம் (டிசையர்) மற்றும் பலன் (ஆ க் ஷன் ),
•ஸ்லைடுகளை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், நான்கில் மூன்று பாகத்துக்குள் முடியும்படி தயாரிக்கவும்
•மனதளவில் தைரியமாக இருந்து, ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
•ஒரு குறிப்பிட்ட தலைப்பில், நிறைய பகுதிகள் இருந்தால், அனைத்தும் சிறிதாவது விளக்கவேண்டியது அவசியம். அல்லது சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, முக்கியமான தகவல்களை தவறாமல் பேசவும்.

முறை 3
*நேர்த்தியாக உடை அணிந்து செல்லவும். உங்களை முதலில் பார்த்த மாத்திரத்தில் மனதில் பதியும்படியான வகையில் உங்கள் ஆடைகளை தேர்வுசெய்யவும்.
*மேடை ஏறும்போடு நடுக்கம் ஏற்படும் பழக்கமுள்ளவராக இருந்தால், ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, பெரு மூச்சு விட்டுவிட்டு பின் மேடை ஏறவும்.
*பயம், நடுக்கம் இன்றி, தன்னம்பிக்கையுடன் மேடை ஏறவும்
* உங்களை பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் ஒரு சிறு குறிப்பும் தேவைக்கு ஏற்ப சொல்லலாம்
*உங்கள் முன் உள்ள லேப்டாப்பில் காட்டும் தகவல்கள் உள்ளவாறே அப்படியே சும்மா படிக்காதீர்கள். முக்கிய தலைப்புகளை காட்டிவிட்டு, அதுசம்பந்தமாக சுயமாக, விளக்கி பேசவும்.
*நடுநடுவே, குட்டிகதைகள், ஜோக்ஸ் மற்றும் மற்றவர்கள் சொன்ன முத்துக்களையும், அடைமொழிகளையும் சேர்த்து பேசவும்
*சிரித்த முகத்துடன், கைகால்களை மெல்ல ஆட்டி பேசவும்.

முறை 4
•பேசும்போது ஒரே இடத்தை மட்டும் பார்க்காமல், கண்களை அங்கும் இங்கும் ஓடவிடவும். பார்வையாளர்களை கவனித்து, அதற்கு ஏற்றார்போல் பேசவும்.
• பார்வையாளர்களின் கண்களுக்கு நேருக்கு நேர் பார்த்துப் பேசவும்.
•நடுநடுவே பார்வையாளர்களை பேசவைக்கவும். சிறிய கேள்விகள் கேட்டு அவர்களிடம் இருந்து பதில்களை பெறவும்.
•நீங்கள் நல்ல அறிவுடையராக, அனுபவசாலியாக இருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களுக்கு ஏற்ப அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி பேசவும்.

முறை 5
•உங்களது பேச்சை கடைசியாக முடிக்கும் முன், இதுவரை பேசியவற்றின் தொகுப்பை குறிப்பிட்டு, தாங்கள் சொல்லவந்த முக்கிய விஷயத்தை கடைசியாக தெரிவிக்கவும்.
•உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசவும். ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மிக அதிகமாக பேசுவது அழகன்று.
* மிக கடைசியில் ''உங்களுக்கு இன்னும் ஏதாவது விளக்கம் வேண்டுமா?” என்றும் வினவுங்கள்
•கடைசி ஸ்லைடு நன்றி என்று இருக்கவேண்டும்.
•கேள்வி, பதில் நேரம் வரும்போது தெளிவாக பதில் கூறவும். தெரியாத பதிலாக இருந்தால், தனிப்பட்டு பதிலை சொல்வதாகச் சொல்லி சமாளிக்கவும்.
•உங்களது பேச்சு பற்றிய கருத்துக்களை, உங்களது பேச்சை கேட்ட நண்பர்களிடம் இருந்து பெற்று, அடுத்த முறை பேசும்போது குறைகளை நீக்கி பேசவும்.

உங்களது பேச்சு இனிதாய் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment