Friday, December 31, 2010

டாக்டர் நடராஜன். அவ்வையார் திடீர் சந்திப்பு

கற்பனை, தமாசு ராம்கி


RAMKI & DR.S. NATARAJAN

விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, டாக்டர் நடராஜன் அவர்கள் வெளியே அவ்வை வானவெளியில் நடந்துகொண்டு வருவதைப் பார்க்கிறார். உடனே முருகனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அவ்வைப்பாட்டியின் மொபைல் நம்பரை வாங்கி, அவரிடம் நேரே பேசுகிறார்...

நடராஜன்....... ஹலோ, வணக்கம் பாட்டி, எப்படி இருக்கீங்க?
அவ்வை...முருகா!! ...யாரப்பா நீ, எங்கிருந்து அழைக்கிறாய்?
நடராஜன்......... நான் தான் மும்பை கண் டாக்டர் நடராஜன் பேசறேன் பாட்டி. எப்படியிருக்கீங்க
அவ்வை...........நாடுநாடா எப்போதும் பறந்து கொண்டேயிருக்கும் என் அருமை நடராஜனா....... முருகா, ரொம்ப சந்தோஷம். என்ன விஷயம் என் அப்பனே?
நடராஜன்....... நேத்து டிவியிலே கந்தன் கருணை பார்த்தேன்....முருகனை புகழ்நது நல்லா பாடியிருக்கீங்க..அது போல என்னையும் நீங்க புகழ்ந்து பாடணும்னு ஒரு சின்ன சின்ன ஆசை. நிறைவேற்றுவீங்களா ?..
அவ்வை... ...கந்தா, கடம்பா, கதிர்வேலா !!! என்ன திடீர் சோதனை இது ?...அன்போடு கேட்கும் இச்சிறுவனுக்காக இதோ புகழ்ந்து பாடுகிறேன்.

அவ்வை...(பாடுகிறார்).

அரியது கேட்பின் அரிது அரிது
மானிடனாரா ய் பிறத்தல் அரிது .
அதனினும் அரிது, நடராஜன் போல்
எப்போதும் சிரித்த முகத்துடன் மற்றவரை காணல் அரிது .
அதைவிட அரிது, மொபைல் போன் கையில் இன்றி உன்னைப் பார்ப்பது அரியது

பெரிது, பெரிது.......நடராஜனின் ஞானம் என்றும் பெரிது
அதைவிட பெரியது உனது ஞாபகசக்தி.
சொன்னதை செய்யாதவருக்கு, உனது கோபம் பெரியது
ஏழை எளியோருக்கு எல்லாம் உன் சேவை மிகவும் பெரியது
உனை பெற்றவர்க்கு உனது புகழ் மிகவும் பெரியது

சிறியது, சிறியது.....நடராஜனுக்கு இல்வுலகம் சிறியது
எப்போதும் நாடுநாடாய் பறக்கும் உனக்கு இவ்வுலகம் என்றும் சிறியது

புதியது.....புதியது........
நடராஜனைப் பாடும் பாடலென்றும் புதியது, நடராஜா
உனைப்பாடும் பாடலென்றும் புதியது
முதலிலும் முடிவது, முடிவிலும் முதலது.
என்போதும் உனது முகம் புதியது,
நடராஜனைப் பாடும் பாடலென்றும் புதியது
நீ செயற்கை "ரெட்டினா" செய்வது புதியது.
நோபல் பரிசு உன் கனவது
உன் கனவு நினைவாக கடவது
உனைப்பாடும் பாடலென்றும் புதியது

அவ்வை...அப்பா நடராஜா என்ன இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
நடராஜன்......... ரொம்ப நல்லாயிருந்தது பாட்டி... ரொம்ப நன்றி. கொஞ்சம் லைனிலே இருங்க...எங்க அப்பாவுக்கு கான்பிரன்ஸ் கால் போடறேன்...
அவ்வை...(படபடப்புடன்) ராஜா..நடராஜா....அங்கே என் அப்பன் முருகன் எனக்காக, அடுத்த லைன்லே காத்துகிட்டு இருக்கான்.. அப்புறமாய் உன் அப்பனோடு பேசறேனே....
நடராஜன்......... சரி ஓகே. உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க...என் செகரட்டரி கிட்ட சொல்லி உங்களுக்கு பழம் அனுப்பச் சொல்றேன். ஆமா, உங்களுக்கு சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா பாட்டி?

அவ்வை...அ ஆஆஆ..நம்ப பிட்டை நம்ம கிட்டயே போடுறா யாப்பா?....
இப்போவெல்லாம் எனக்கு கண் சரியா தெரியமாட்டேங்குது. என்ன செய்யலாம்....?

நடராஜன்........ உங்களுக்கு கண்ணை சரிசெய்து, ஞானக்கண் மாதிரி நல்லபடியா செஞ்சுடலாம் கவலைப்படாதீங்க. மும்பைக்கு எப்போ வரீங்க...........முன்கூட்டியே சொல்லுங்க, ஒரு பிளைட் ஏற்யாடு செய்து அனுப்பிடறேன்....

என்று சொல்லிக் கொண்டுயிருக்கும் போது, ஒருவருக்கு டாக்டர் எஸ் எம் எஸ் அனுப்ப முனைகிறார், அவ்வை டாட்டா காட்டியபடியே வான வெளியில் சட்டென மறைகிறார்......

(டாக்டர் நடராஜன், தான் அவ்வையை சந்தித்த தகவலை அப்படியே அனைவருக்கும் மாஸ் எஸ் எம் எஸ் அனுப்பிவிடுகிறார்..........அவரது இந்த சந்திப்பு அடுத்த நாள் அனைத்து தினசரிகளில் செய்தியாக வருகிறது....டிவியில் ஸ்பெக்ட்ரம் பரபரப்பையும் மிஞ்சி, பரவலாகப் பேசப்படுகிறது....)

-RAMKI

No comments:

Post a Comment