Saturday, July 14, 2012

என்னவள் ஒரு மழை

என்னவள் ஒரு மழை!! RAMKI அவள் தலைதுவட்ட கருமேகம் முட்டிக்கொள்கிறது
அவள் விழிதிறக்க மின்னல்மின்னுகிறது
அவள் இடைகுலுங்க இடிஇடிக்கிறது
இதோ மழையென பொழிகிறாள் என்னவள்……..!!

அவள் கண்திறந்தால் பாசமழை
அவள் குளித்தால் தீர்த்தமழை!!
அவள் குலுங்கினால் ஆலங்கட்டிமழை
அவள் குழைந்தால் சாரல்மழை!!

அவள் மேலாடைசரிந்தால் கிளாமர்மழை
அவள் கோபித்தால் பேய்மழை!!
அவள் நடந்தால் அடைமழை
அவள் நிமிர்ந்தால் வான்மழை!!

அவள் இடைதெரிந்தால் சோமழை
அவள் இதழ்குவித்தால் முத்தமழை!!
அவள் சிரித்தால் தூறல்மழை
அவள் மனம்திறந்தால் கனமழை!!

அவள் தொழுதால் பக்திமழை
அவள் கொடுத்தால் பணமழை!!
அவள் தொடுத்தால் பூமழை
அவள் தொட்டால் அன்புமழை!!

அவள் படுத்தால் பருவமழை
அவள் பாடினால் இன்னிசைமழை!!
அவள் கண்சிமிட்டினால் பரிசுமழை
அவள் கிடைத்தால் அதிர்ஷ்டமழை!!

அவள் அழுதால் ஆழிமழை
அவள் ஆடினால் ஆலிமழை!!
அவள் நடுங்கினால் பனிமழை
அவள் முயன்றால் மும்மாரிமழை!!

அவள் சொக்கினால் சோனைமழை
அவள் சோதித்தால் மாமழை!!
அவள் இதழ்விரித்தால் சிரிப்புமழை
அவள் சுட்டால் கோடைமழை!!

அவள் பணிந்தால் பதமழை
அவள் பாய்ந்தால் புயல்மழை!!
அவள் மயங்கினால் தொடர்மழை
அவள் வாங்கினால் வசுல்மழை!!

அவள் அடித்தால் பயங்கரமழை
அவள் அணைத்தால் இன்பமழை!!
அவள் அழைத்தால் அந்திமழை
அவள் அழகுஇதுவரை பெய்திராத மழை!!

அவள் வருடினால் வருணமழை
அவள் சினுங்கினால் செயற்கைமழை!!
அவள் தட்டினால் பலத்தமழை
அவள் நீர்துளியோ நிறமற்றமழை!!

அவள் சொன்னால் பெய்மழை
அவர் பார்த்தால் காந்தமழை!!
அவள் ஓய்ந்தால் பெய்ந்தோந்த மழை
அவள் இந்தாண்டின் நந்தனமழை!!

நினைந்தது போதுமோ மனமே
கிடைத்தது போதுமே மனமே!!
ரசித்தது போதுமே மனமே
மழையால் மயங்குதோ மனமே!!!

-RAMKI

1 comment:

  1. அவள் ஒரு மழை
    இராம்கியின் கவிதை மழை
    தமிழ் நடனமாடும் மழை
    தமிழ்தாய் புன்னகைக்கும் மழை
    தமிழ்மனதை மகிழ்விக்கும் மழை
    வற்றாதநதியின் ஒயில் மழை
    வாழ்க நீவீர்.வாழ்க நின் கொற்றம்
    இராமச்சந்திரன், Mumbai
    *

    Ungal kavithai mazhail nanaithom. -Nice. Viji Chennai
    *
    The “kavithai” on “Mazhai” is very nice. You have covered all the different kinds and types of “Mazhais”. -Swamy, Gurgaon
    *
    Chittappu!!Great!! ingeyum ippo peyyudhu mazhai
    Ithu verum "saadha mazhai" = Sriram, UK
    *
    மொத்தத்தில் உங்க காட்டுல மழை...! -Elango, Mumbai
    *
    Nice. -Dr. R. Srinivasan, Mumbai
    *
    nice one..PVR Mumbai
    *
    This year we are experiencing extreme hot whether all over the world. We have a brown lawn instead of green in our yard. No rain in sight. Thanks for your imagination in the lyric form. Pray for a good soaking rain so that the river could flow, the lakes over flow, and the fields can grow. - Mani mama, USA.
    *
    லக்னோவில் ஒரு வாரமாக மழை. இதமாக இருக்கிறது. இன்பமாக இருக்கிறது,...இனிமையாக இருக்கிறது,....அந்த இனிமைக்கு. இனிமை சேர்க்க,...கவிஞர் ராம்கியின் கவிதை மழை. மனுஷன்......சும்மா பொழிந்து தள்ளி விட்டார். அவளின்...... தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. கற்பனை மேகங்களை சுமந்து கொண்டு.....அவள் என்ற மலை மீது மோதி,.....கிடைத்தது நமக்கு ஒரு மழை. அருமையான கவிதை மழை. நீவிர் வாழ்க.....வளர்க.....வளமுடன்.....
    ம.சுப்ரமணியன்,லக்னோ
    பின் குறிப்பு : in the lighter vein.....அந்த அவள்...... யார் என்று உங்கள் மனைவியிடம் சொல்லியாச்சா ? அப்படி என்றால் எங்கள் எல்லோருக்கும் வீட்டு land line நம்பர் கொடுக்கவும்....
    *
    இங்கே இங்கிலாந்தில் நல்ல வெயிலை பார்த்தே நாளாச்சு.., இந்த கோடை மழையோடும், குளிரோடும் தான் போகிறது. இந்த வேளையில் நண்பர் ராம்கி அவர்களின் மழை வேறு... அவ்ர்காட்டில் பெய்த மழையில், நம்மையும் நனைய வைத்திருக்கிறார். நாமும் சிலிர்த்துபோனோம்.வாழ்த்துகள் ராம்கி..எனக்கு பிடித்த வரி..., "அவள் அழகுஇதுவரை பெய்திராத மழை". The best thing one can do when it's raining is to let it rain.
    San.sanka,England
    *

    Beautiful! I did not know this hidden talent in you! - PARAMESHwar K.R., FOUNDER-DIRECTOR, INDIAN THEATRE CENTRE, Mumbai.
    *
    seetha coimbatore vandhu pona mazhai charal, ippadi idiyudan kottum mazhaiyaga vandadhaaa?????. orey sara mazhai poo!!!! Avaladhu glamour mazhaiyilum, paasa mazhaiyilum nanaindha , nee maaayaa ulagathin karumegamathil un mugam mudi vidapogiradhu. agaiyaal theerata mazhai illatha poo mazhaiyudan un vazkai epodum adrishtam ennum allamkatti mazhai, adai mazhaiyaga peiyya en bhakthi mazhaiyaal vendu giren., en nandri mazhai unakku urithagugaa!!?!?!?!?!?!
    -Mythili Manni, Hyderabad.
    *
    Raamki Ungal Mazhai Arumai..
    ungal Mugavari Anuppavum....Ennudaya Recent Film Mannaaru Audio Anmaiyil..07-07-12 Veliyaanathu...Athai ungalukku Anuppavendum......... -Nanrigal Udayan, Music Director, Chennai
    *
    RAMKIyin KAVITHAI MAZHAI ORU THIHATTATHA THEINMAZHAI.

    M.KARUN, Mumbai
    *
    EXCELLENT- RAVI, Chennai.
    *
    thank u very nice you left goa rain with that we r enjoying with ramki s abishakamazai i dint wriite propelly i will talk to u later.
    Usha, goa
    *
    AVAL PARTHAL THIRAIMAZHAI,
    AVAL PESINAL MAYAMAZHAI
    AVAL PAKKAM VIZHUNDAVAN EZHAMAZHAI
    AVAL MOTHATHIL VESHAMAZHAI.
    K.Subramanian, CEO, Teledata marine solutions Ltd, Bangladesh.
    *
    Vairamuthuvudan modhugirirgal. vaazthukal

    DR T S SURENDRAN, Vice Chairman, Sankara Nethralaya, Chennai
    *
    Really a descriptive song - C V Narayanan, Pune
    *

    Really fantastic MAZHAI - Balu,Covai
    *
    Ramki, your imagination runs riot, I think. Good. -
    Charukesi (Sr. Journalist & Writer),Chennai
    *

    ReplyDelete