My article in Varamalar dt 11 8 2013
கங்காரு பைக்
அமெரிக்காவில், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல, "கங்காரு பைக்' எனும் புது மாடல் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுமினியத்தால்
செய்யப்பட்டு, பாலித்தீன் கவரால் மூடப்பட்டு, காற்று, மழை, வெயில், பனி
என, அனைத்தையும் தாங்கும் விதத்தில் உள்ளது. மேலே உள்ள மூடியை, பத்தே
வினாடிகளில் திறந்து விடலாம். குழந்தையை உள்ளே வைத்து மூடியும்,
திறந்தபடியும், எங்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லலாம்.
இதில் உள்ள,
அனைத்து பாகங்களையும் நம் தேவைக்கு ஏற்றாற் போல, வேகமாக மாற்றிக்
கொள்ளலாம். ஒரு குழந்தை மட்டுமின்றி, இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து,
வெளியே அழைத்துச் செல்ல முடியும். இருக்கையில், பெல்ட் வசதி உள்ளது. மூடி
போட்டு ஓட்டினாலும், குழந்தைகளுக்கு மூச்சு திணறாது. இந்த வாகனத்தை,
பின்புறம் அல்லது மேற்புறம் மற்றும் பக்கவாட்டு என, எந்த பக்கம்
வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளலாம்.
ஐட்ராலிக் பிரேக் முன்பகுதியில்
இருப்பதால், எந்த ஆபத்தான நேரத்திலும், இந்த, "கங்காரு பைக்'கை நிறுத்த
முடியும். குழந்தைகள் மட்டுமின்றி, அவர்களுக்கு வேண்டிய உணவு, துணி போன்ற
இதர பொருட்களை வைக்கவும், போதிய இடவசதி உள்ளது. எல்.இ.டி., விளக்குகள்
உள்ளன.
பெண்கள் வெளியே செல்லும் போது, இந்த சைக்கிளை ஓட்டுவதால்,
உடற்பயிற்சி செய்வது போலாகி விடுகிறது. குழந்தையை தூக்க வேண்டிய அவசியம்
இல்லை. இந்த வண்டி, தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.