
சற்று நேரம் எந்த சிந்தனையும் இன்றி, அனைத்தையும் மறந்து அமைதியாக இருங்கள். என்ன தெரிகிறது? எத்தனை அழகான உலகம்...எங்கும் இயற்கையின் அழகு...எதையும் முடிக்கலாம் என்ற எண்ணம். புதியவற்றை சாதிக்க நினைக்கும் கனவுகள். ஒரு ஒளிமயமான எதிர்காலம். எல்லாம் இன்பமயம்.
இருப்பினும் உங்களுக்கு எதிரே பூதகாரமாக தற்போது தெரிவது ஏகப்பட்ட சவால். போட்டி..பொறாமை, .துக்கம், வெறுப்பு, அடிதடி., அழுக்கு வறுமை...இத்தகயவை இருந்து கொண்டிருந்தாலும், எங்கும் நமக்காக அன்பு கொட்டிக்கிடக்கிறது.. சந்தோஷமும், இன்பமும் நாம் அனுபவிக்க நமக்காக உள்ளன.. சாதிக்க நிறைய, நல்ல வாய்ப்புகள் காத்துக்கிடக்கிறது
நாளை இது ஒருபுரியாத புதிர். நாளைக்கு நாம் எப்படி இருப்போம், என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. எதிர்காலம் நிலையானது அல்ல. எதுவும் நடக்கும். நடக்காமல் போகலாம். ஆனால், இன்றைய நாள் என்பது உங்கள் கையில். எதையும் இன்று உங்களால் சாதிக்கமுடியும.. இது உங்கள் வாழ்க்கை ஆகவே உங்களால் மகிழ்ச்சியாக வாழமுடியும், வாழ்க்கையில் நடந்த நல்ல சம்பவங்களையும், நல்ல சுற்றத்தாரையும் நினைத்துப்பாருங்கள். எத்தனையோ நல்லவைகள் நடந்துள்ளது, பல சோதனைகளை கடந்து, நல்ல நிலைக்கு வந்துள்ளோம் என்பது புரியும்.
இப்பொழுதே.
நாளை என்பது ஒரு மாயை போன்றது. பகல் கனவு பலிக்குமா. ஆகவே ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக, ஒரு ‘ஸ்பெஷல்’ நாளாக நினைத்து வாழுங்கள். கிடைத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள். இன்று இந்த அளவுக்காவது உள்ளோமே என நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நாளை பொழுதினை இறைவனுக்கு அளிந்து, இப்பொழுது நடக்கும் வாழ்வில் நம்மதி நாடுங்கள். நாளை (யும்) நமதே, இதில் ஐயம் இல்லை. உங்கள் மனது சொல்லும் நல்வழியில் நேர்மையாக பயணம் செய்யுங்கள்.
‘நாம் எதற்கு இந்த உலகத்தில் ஜனித்தோம்?. இப்படி கஷ்டப்படவா?..இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி?’ என்றெல்லாம் புலம்பி குறைப்பட்டுக்கொள்ளாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. பல காரணங்களுக்கு, நம்மால் தலை கீழாக நின்றாலும் விடை காண முடியாது. ‘பல சோதனைகளை சந்தித்தால் தாய்யா, அது சாதனைகளாய் மாறும்’ என்று ரஜினிகாந்த் மேடையில் கையை உயர்த்தி பேசிய போது “அப்பா என்னா மாதிரி டயலாக்” என்று அவருக்கு கைதட்டியுளோம்.
வாழ்வில் சோகங்களும், சோதனைகளும், பேப்பர் இல்லாத தேர்வு போன்று நடந்து கொண்டேதான் இருக்கும். இரவும் பகலும், இன்பமும் துக்கமும். உறவும் பிரிவும் (இமெயிலும் எஸ்எம்எஸ்ம்) மாறிமாறி நிழல் போல் நம்மைத் தொடரும். நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும் என்பது ஒரு பாடல். ஆகவே, இப்பொழுதினை எண்ணி, ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாக, நல்ல காரணத்திற்கு பயன்படுத்துங்கள். நல்ல வார்தைகளாக, ஆறுதல் வார்த்தைகளாக எப்போதும பேசுங்கள். அகங்காரத்தை விட்டு விடுங்கள். நான் பெரியவன், நான் சீனியர் என்றெல்லாம் நீங்களே தலைப்பாகை கட்டிக்கொண்டு பந்தா காட்டாதீர்கள். நான் அழகாக இருக்கிறேன் என்று கர்வம் கொள்ளாதீர்கள். வாழ்க்கை ஒரு நீர்குமிழி போன்றது என்கிறார் ஆதி சங்கரர். பகவத்கீதையின் கீதாசாரத்தை படித்தாலே போதுமே, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தெரி(ளி)ந்துவிடுமே.=
“இன்று எது நடந்த்தோ அது நன்றாகவே நடந்தது”
“நாளை நல்லதாகவே நடக்கும்”
போன்றவை நமக்கு நெற்றியில் அடித்தால் போல் அல்லவா நச் என்று புத்திமதி சொல்லியுள்ளார் கிருஷ்ணன்.
இப்பொழுது என்பது நமக்கு கிடைத்த “மிகப்பெரிய பரிசு”
இப்பொழுது என்பது தான் “நமது எதிர்காலம்”
இப்பொழுது என்பது தான் நமக்கு கிடைத்த “வரப்பிரசாதம்”
ஆகவே, இப்பொழுதை எப்பொழுதும் நல்ல பொழுதாக மகிழ்ச்சியாக கழியுங்கள். ஈகோவை கிழற்றி எறியுங்கள். மனித நேயத்தோடு, எல்லோரிடத்திலும் சிரித்த முகத்துடன், முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வாழ பழகிக்கொண்டால், எல்லா நாளுமே இனிய நாள் தான் என்று நான் இப்பொழுது சொல்லவேண்டுமா என்ன?
இனி “எப்பொழுது எப்பொழுது?” என்று விக்ரம்-ஜோதிகா பாடியது போல் பாடாமல், “இப்பொழுது இப்பொழுது” என்றே எதையும் துணிந்து செய்யுங்கள்.
நன்றே செய். அதை இன்றே செய் செல்லம்.........
ராம்கி