Tuesday, November 27, 2012

PADMAJA WEDS BALAJI ON 30 11 2012 -CHENNAI

மணமகள் :சௌ. பத்மஜா
மணமகன் :பாலாஜி
கார்ட்டூன் ஏற்பாடு :பாலாஜி R. (பத்மஜாவின் சகோதரர்)
கார்ட்டூன் சித்திரங்கள், ஆக்கம், எழுத்து: ராம்கி, கோவை


கார்ட்டூன்களை பார்த்து, ரசித்து, நிறை குறைகளை எடுத்துச்சொல்லி, பாராட்டி 100க்கு 100 மார்க்கு அள்ளிக்கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி, ராம்கி,


நமஸ்காரம்....வாங்கோ மாப்ளே...வாங்கே...எல்லோரும் வாங்கோ....


பத்மஜாவுக்கும், பாலாஜிக்கும் டும் டும் நிச்சயம் செய்யப்படுகிறது


மாப்பிள்ளை ஊர்வலம்


வரவேற்பு


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்....வரவேற்பு பார்ட்டினா இப்படித்தான்

காலையில் விரதம்


காசியாத்திரை போகவேண்டாம்...பத்மஜா உங்களே உங்களுக்குத்தான் மாப்ளே


மாலை மாற்றினாள் பத்மஜா...மாலைமாற்றினாள் பத்மஜா மாலை மாற்றினாள்.....



லாலி....ஊஞ்சல்


கெட்டி மேளம் கெட்டி மேளம்.. மாங்கள்யம் தந்துனா...


ஆசிர்வாதம் பண்ணுங்கோ.....


எங்கள் கல்யாணம்,கலாட்டா கல்யாணம்.......



மாப்பிள்ளைக்கு மோதிரம்....


போஜனம் பண்ண வாருங்கோ...மகாராஜா போஜனம் பண்ணவாருங்கோ....


கடலை போட்டது போதும் மாப்ளே, இந்தாங்கோ பொரி பொரி....


பூ மாலையில் ஒரு நலுங்கு விளையாட்டு. உருட்டி விளையாட்டு பாப்பா.....


அடுத்தது எனக்குத்தானே......


நன்றி


திருமணத்தை நடத்திகொடுத்து தம்பதிகளை ஆசிர்வதித்ததற்கு எங்கள் நன்றி


அவனா நீயு
............ கார்ட்டூன் சித்திரங்களை வரைந்த அந்த அவன் இவன், ராம்கி, கோவை

Wednesday, November 21, 2012

INSTITUTE FRIENDS MEET 11 11 2012

INSTITUTE FRIENDS MEET 11 11 2012
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...நண்பனே.....'

கே.கே.நகர் பிருந்தாவன் தட்டச்சு கூடத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒன்றாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கத்துக்கொண்டவர்களின் சந்திப்பு இது. அப்போது பயிலரங்கத்தின் மேனேஜராக இருந்தவர் திரு சுப்பாராவ் அவர்கள். அனைவரையும் மிகவும் மரியாதையுடன் நடத்துவார் இவர். இன்றும் எங்களின் குடும்ப நண்பராகவும், நலம் விரும்பியாகவும் திகழ்கிறார். எங்களுடன் சுவாமி மற்றும் சைமன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர்.


சுவாமி அவர்கள் எனது இந்த சந்திப்பு ஐடியா சொன்னதும் 'ஓகே' சொன்னார். நல்ல ஆலோசனைகளை சுவாமியும்,விவேக்கும் அள்ளிவிட்டுக்கொண்டே இருந்தனர்..மேலும் இவர்கள் யார் யார், யார் காரில் வரவேண்டும் என்று திட்டம் போட்டுக்கொடுத்தார்கள்.

ராம்கியும் சேகரும், கிண்டியில் காத்திருந்த விவேக் காரில் பயணித்தனர். வடபழனியில் சைமன் அவர்கள் ரகு மற்றும் ரமேஷை ஏற்றிக்கொண்டார். சங்கர் தன் காரில் சுவாமி 'ஊர்வலமாக' அழைத்துவந்தார்.

செம்மொழி பூங்காவுக்கு செல்லலாம் என ஐடியா கொடுத்தவர் சைமன். ஓட்டலை முடிவு செய்ததும் இவர்தான்...பீச்சுக்கு போகலாமே என கடைசி நேரத்தில் ஐடியா கொடுத்து அனைவரையும் அசத்தினார். ஐடியாவா கொடுத்துகொண்டே இருந்தார்.

மேலும், தன் புதிய காரில் வந்து சைமன் அனைவருக்கும் ஒரு 'சர்பிரைஸ்' கொடுத்தார். சந்தித்த முதல் வேலையில் ரமேஷக்கும், ரகுவிற்கும் சிறந்த நண்பராகிவிட்டார் சைமன். 10.30க்கு அனைவரும் அந்தந்த சந்திப்பு முனைகளில் சந்திக்கவேண்டும், மேலும் 11 மணிக்கு செம்மொழி பூங்காவில் (முன்பு டிரைவின் ஓட்டல்) கூட முடிவுசெய்தது அப்படியே நடந்தது. முதலில் விவேக்கின் கார் வந்து சேர, பின் சைமன் கார் வர அடுத்து சங்கர் கார் செம்மொழி பூங்காவில் நுழைந்தது. 'ஹாய் ஹாய் ஹாய்' என்ற வரவேற்புடன் சந்திப்பு ஆரம்பமானது. அனைவரும் வரிசையாக நிற்க வேறுஒரு காரின் டிரைவரை கொண்டு ஒரு குரூப் போட்டு எடுக்கச் சொன்னோம்.

சுவாமி மறவாமல் இந்த மாத மங்கையர் மலர் புத்தகத்தை கொண்டுவந்து ராம்கி வரைந்த கார்ட்டூன்களையும், கட்டுரையையும் அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தார். இச்செயல் ராம்கியை நெகிழவைத்தது. *
11.11.2012 எங்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக இருந்தது. செம்மொழி பூங்காவில் அனைவரும் நுழைந்தோம். ஆங்காங்கே ஜோடிகள், இருப்பினும் பசுமைக்கு அளவே இல்லை. கலாட்டா பேச்சுடன் காலார பூங்காவை ஒரு வலம் வந்தோம். பாலு அலுவலக வேலை காரணமாக எங்களுடன் கலந்துகொள்ள இயலவில்லை. இது அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
*
போதி மரத்த்தின் அடியே அமர்ந்து அரட்டை. அப்படி என்ன தான் பேசினாங்களோ?
* *
பார்க்கை விட்டு செல்லும் முன், பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்ந்தோம்...விலையில்லா நட்பு திரும்ப கிடைத்ததே என அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் சிறிது நேரம் மிதந்தனர்.
பாலு தன் பங்கிற்கு பரிசு கொடுக்க தன் நண்பர் மூலம் பெரும் முயற்சி எடுத்திருந்தார். விவேக் தன் பங்கிற்கு அனைவரும் இருக்கும்போட்டோவை நான் லேமினேட் செய்து தருகிறேன் என்றார். 60ம் பிறந்தநாள் வாழ்த்தக்களை விவேக்கு நாங்கள் தெரிவித்தோம்... *
'ஒட்டு மொத்த பெருந்தலைகள் இவா தான்' - "KODAMBAKKAM" Simon,
; "PULI" Sekar; "RANBAXY" Ramesh; "BANK" Sankar; "PORUR" Ramki; "JINGJING" Swamy; "PERIYAPPA" Raghu & "AAVIN" Vivek!!!! *

கடலை போடும் நண்பர்கள். *

ரொம்ப ஜில்லுனு இருக்குல்லே..அருமையான பூங்காவில் ஜாலியான அரட்டை ஒரு பொடி நடையுடன். அனைவருக்கும் சற்று வயதாகிவிட்டதால், 'எக்கேயாவது உட்காரலாம்பா..'என குரல் கொடுத்தனர். வழக்கமாக அனைவரையும், 'நாயே, பேயே..' என தெனாவட்டாக ரமேஷ் கலாட்டா செய்தவண்ணம் இருந்தார்.
*

மனதிலோ மகிழ்ச்சியின் தாக்கம். போட்டோவுக்கு அனைவரும் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்தனர், ராம்கி அவ்வப்போது போட்டோ எடுத்தவண்ண இருக்க,'ஆரம்பிச்சுட்டாய்யா' என நல்ல போஸ் கொடுத்தபடியே மற்றவர்கள் கலாட்ட செய்தனர்.
கிளம்பும் முன் செம்மொழி பூங்காவின் கல்வெட்டின்கீழ் வரிசையாக அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். மூன்று கார்களும் சர் சர் என ஓட்டல் மாரிஸ்க்குள் நுழைந்தது.
ரமேஷ் மாரிஸ் ஒட்டலில் 'வடை நல்லா இருக்கும் டா' என்று சொன்னதும், உடனே ஆர்டர் செய்து ருசிச்தோம். பழரசம் மற்றும் சுவையான வடை உபயம் ரகு. மதியம் ஓட்டல் மாரிஸில் மதிய உணவு உண்டோம். சாப்பாடு உபயம் சங்கர்.
ஓட்டலின் வரவேற்பு அறையில் உண்ட மயக்கம் தீர சிறிது நேரம் உட்கார்ந்து அரட்டை. பின் கார்கள் வரிசையாக பீச்சுக்கு கிளம்பின. சங்கர் மட்டும் வேறுவேலை இருப்பதால் விடைபெற்றார். ரகு ஐஸ்கிரீம் சாப்பிட பெரும்முயற்சி எடுத்தும், அது முடியாமல் போனது.
*
என்னமா லுக்கு....
'ராம்கி இமெயிலா போட்டுதாக்கராய்யா...அவனுக்கு வேற வேலையே இல்லாயா என நையாண்டி வேறு.... இன்பாக்ஸை திறக்கவே பயமா இருக்கு, இவன் இமெயிலே ஒரு 50 இருந்தது' என்று சேகர் நொந்து கொண்டார், பார்க்க பாவமாக இருந்தது.
எங்களது சந்திப்பு 'வாடா போடா' என ஆரம்பித்து, 'நாயே பேயே' என்ற தொடர்ந்து, அடுத்த முறை ஊட்டியில் சந்திப்போமா என கேட்டும், வழக்கம் போல 'நாளையிலிருந்து ராம்கியின் இமெயில் வந்துகிட்டே இருக்குமே' என்று கடைசியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ராம்கியின் தலையை நீண்டநேரமாக அனைவரும் கலாய்த்தனர். அடிக்கடி இதுபோன்ற எல்லோரும் சந்திக்க வேண்டும் என விரும்பினர்.

பீச்சில் தரை தட்டிய கப்பலையும் கண்டு ரசித்தோம்..(மேலே உள்ளது அக்கப்பலை இழுக்க வந்த பெரிய கப்பலாகும்) பீச்சிலிருந்து குரூப் குரூப்பாக 2 கார்களில் விடைபெற்றோம்..
ராம்கி, சுவாமி, ரமேஷ் விவேக் இந்த நால்வரும் அசோக் நகரில் உள்ள சரவன பவனில் அருமையான ஒரு காபி குடித்துவிட்டு, ரமேஷினை அவனது வீட்டு வாசலில் விட்டுவிட்டு, பரணி காலனியில் உள்ள சுவாமியின் அம்மாவை பார்த்துவிட்டு கிளம்பினோம்.
ராம்கியை போரூரில் இறக்கிவிட்டு விவேக்கும் சுவாமியும் காரில் 'பறந்தனர்'. பறந்தது அந்த கார் மட்டுமல்ல, அந்த இனிய நாளும் தான்.. இந்த நாள் எங்களால் ஒரு மறக்கமுடியாத நாள்.
நண்பேன்டா.... நண்பேன்டா... நண்பேன்டா.....
(வீட்டிற்கு சென்றதும், பரிசுப்பொருளை திறந்து பார்த்து, கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல ஒருவருக்கு ஒருவர் போன் செய்தது பாராட்டத்தக்கது).

Tuesday, August 7, 2012

'அடடே' மனோகரின் அதிரடி பேட்டி

பேட்டி ராம்கி, கோவை


'அடடே மனோகர்' அவர்கள் நம்மை நாடகத்திலும், திரையிலும் சிரிக்க வைத்தவர். அவரிடம் நாம் கேட்ட 'சுருக்' கேள்விகளுக்கு 'நறுக்' என்று பதில் வந்தது. அதை நீங்களும் படித்து மகிழலாமே?


'அடடே' என்று அடைமொழி கிடைத்து எப்படி? யாரால்?(ஒரு சின்ன பிளாஷ்பேக்)
1986 வெளியான 'அடடே மனோகர்' தொலைக்காட்சி தொடரில் நான் அடிக்கடி பலவிதமாய் 'அடடே' என்ற வார்த்தையை பிரயோகிப்பேன்; அதனால்...அதன் தயாரிப்பாளர் திரு. கிருஷ்ணன் அவர்களே வைத்த பெயர்தான் 'அடடே மனோகர்' என்று அந்த தொடருக்கு!!

*
அடடே மனோகருக்கும், ஆர்எஸ் மனோகருக்கும் என்ன வித்யாசம்?
ஆர்.எஸ்.மனோகர் இறந்துவிட்டார்;
அடடே மனோகர் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்!!

*
ஒரு படத்தில் விவேக்கை ஒரு பெண்ணா மாற்றிய உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆண்மகனை பெண்ணாகமாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் யாரை தேர்வு செய்வீர்கள்- (அது ஒரு நடிகராகவோ அல்லது அரசியல் வாதியோகவோ, யா வேண்டுமானாலும் குறிப்பிடலாம்)
மன்மோகன்சிங்!!

*
அதுபோன்று ஒரு பெண்ணை ஆணாக மாற்றும் சக்தி உங்களுக்கு கிடையாதல் எந்த பெண்ணை ஆணாக மாற்றுவீர்கள்?

சோனியா காந்தி!!

*
உங்களை நாடக அல்லது திரை உலகில் நெகிழவைத்த நிகழ்ச்சி அல்லது நபர்
நிறைய காட்சிகளில் நான் நெகிழ்ந்துவிடுவேன்; சிரிப்பதிலும் அப்படியே; நான் மிகவும் 'எமோஷனல்'.
* திரையுலக நண்பர் யார்- நாடக உலக நண்பர் யார்?

திரை - டெலலி கணேஷ்; நாடகம் - காத்தாடி

* ரசிகர்களுடன் நடந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி அல்லது சம்பவம்


நான் மேடையில் பாடி நடிப்பேன்....பங்களூருவில் ஒரு தடவை ஒரு பாட்டை (எம்.கே.டியின் ஒரு பாட்டு) ஒரு வரி பாட வேண்டும்; அவ்வளவே; ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க முழு பாட்டையும் பாடி, ரயிலை கடைசி நிமிடத்தில் பிடித்தோம்.

*
ரஜினி அல்லது கமலுக்கு அப்பாவா நடிக்க ஒரே சமயத்தில் வாய்ப்பு வந்தால் யாருடைய படத்தில் நடக்க விருப்புவீர்கள்?

எனக்கு இருவரும் ஒன்றே; ஆனால் இருவரும் என்னை சத்தியமாக கூப்பிடமாட்டார்கள்; ஏனென்றால் நான் யாரென்றே அவர்களுக்கு தெரியாது.

* பிடித்த நாடக அல்லது சினிமை இயக்குநர் யார்
பாலு மகேந்திரா; அனால் அவருக்கு என்னவோ என்னை கண்டாலே பிடிக்காது.

* பிடித்த தமாசு நடிகர் அல்லது நடிகை யார்
ஆச்சி மனோரமா & மறைந்த நாகேஷ்.

*
மிகவும் ரசித்த ஜோக் எது
மனைவி: என் கணவர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டே ஓடிவிட்டார். இன்ஸ்பெக்டர்: (மிகுந்த யோசனைகுப்பின் தனக்குள்) ஓ! அப்படி ஒரு வழி இருக்கா?

*
சந்திரபாபு முதல் சந்தானம் வரை நினைத்த உடனே வரும் தமாஷ் பஞ்ச் டயலாக் எது?
வரும் ....ஆனா வராது - என்னத்தெ கன்னையா!!!

* நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் தங்கள் மனனைவி மிகவும் பாராட்டிய கதாபாத்திரம் எது?
'அடடே மனோகர்' என்று நினைவு; அவளே மறைந்துவிட்டாளே!

* நீங்கள் ஒரு மகா கவி என்பது எனக்குத்தெரியும்....ஒரு நாலுவரி கவிதை ஒன்று சுடட்சுடத் தாருங்களேன்.......

காரிகையின் அணைப்பிற்கு ஏங்கியதோர் காலம்
காலனின் அணைப்பிற்கு ஏங்குகிறேன்
காரிகையும் அந்நாளில் வந்தாளில்லை
காலனும் இந்நாளில் வருவதாயில்லை
எப்பொருளும் ஏங்கும் போது கிட்டுவதில்லை
அப்பொருள் கிட்டும்போது நமக்கதில் நோக்கமில்லை
இப்பொருளை சிந்திக்குங்கால் விளங்கியதோர் உண்மை
மெய்ப்பொருளுக்குட்பட விதி யீதென்பது!


கேள்வி ராம்கி, கோவையிலிருந்து
பதில் அடடே மனோகர், சென்னையிலிருந்து

Wednesday, July 18, 2012

தி தி தி
BY RAMKI


காலை எழுந்ததுமே துதி
நாம் வணங்கவேண்டுமே ஆதி
கடவுளை தொழவேண்டுமே ஓதி
படிக்கவேண்டுமே இதி
அடையவேண்டுமே கதி

எப்போதும் சேர்க்கவேண்டுமே நிதி
செய்யவேண்டுமே திதி
எதற்கும் வேண்டாமே பீதி
வைக்க வேண்டாமே மீதி
கிடைக்க வேண்டுமே நீதி
நீண்டு போகவேண்டுமே வீதி

அழகுக்கு அழகாமே ரதி
தீட்டவேண்டமாமே சதி
கூட்டவேண்டுமே சுதி
மதிக்க வேண்டுமே பதி
பாவம் நீக்குமே நதி

மயங்கவைக்குமே மதி
குளத்தைபார்த்ததுமே குதி
யாரையும் விடாதாமே விதி
ஆடவேண்டாமே சூதி
போடவேண்டுமே ஜதி

திருந்தவேண்டுமே கைதி
ஆணும்பெண்ணுமேசரி பாதி
கெடுக்கக்கூடாது மனமே ஊதி
பார்க்கவேண்டாமே ஜாதி

நீதிக்கு வேண்டுமே வாதி
படிக்கவேண்டுமே வேதி
பிடிக்குமே ஒண்ணாம் தேதி
வரவேண்டாமே பேதி
கிடைக்கவேண்டுமே சேதி

தலை வாரிவிடுவோமே கோதி
பார்க்கவேண்டாமே மோதி
நமக்கு கிடைக்குமே போதி
ஏற்ற வேண்டுமே ஜோதி!!!

-RAMKI

Saturday, July 14, 2012

என்னவள் ஒரு மழை

என்னவள் ஒரு மழை!! RAMKI அவள் தலைதுவட்ட கருமேகம் முட்டிக்கொள்கிறது
அவள் விழிதிறக்க மின்னல்மின்னுகிறது
அவள் இடைகுலுங்க இடிஇடிக்கிறது
இதோ மழையென பொழிகிறாள் என்னவள்……..!!

அவள் கண்திறந்தால் பாசமழை
அவள் குளித்தால் தீர்த்தமழை!!
அவள் குலுங்கினால் ஆலங்கட்டிமழை
அவள் குழைந்தால் சாரல்மழை!!

அவள் மேலாடைசரிந்தால் கிளாமர்மழை
அவள் கோபித்தால் பேய்மழை!!
அவள் நடந்தால் அடைமழை
அவள் நிமிர்ந்தால் வான்மழை!!

அவள் இடைதெரிந்தால் சோமழை
அவள் இதழ்குவித்தால் முத்தமழை!!
அவள் சிரித்தால் தூறல்மழை
அவள் மனம்திறந்தால் கனமழை!!

அவள் தொழுதால் பக்திமழை
அவள் கொடுத்தால் பணமழை!!
அவள் தொடுத்தால் பூமழை
அவள் தொட்டால் அன்புமழை!!

அவள் படுத்தால் பருவமழை
அவள் பாடினால் இன்னிசைமழை!!
அவள் கண்சிமிட்டினால் பரிசுமழை
அவள் கிடைத்தால் அதிர்ஷ்டமழை!!

அவள் அழுதால் ஆழிமழை
அவள் ஆடினால் ஆலிமழை!!
அவள் நடுங்கினால் பனிமழை
அவள் முயன்றால் மும்மாரிமழை!!

அவள் சொக்கினால் சோனைமழை
அவள் சோதித்தால் மாமழை!!
அவள் இதழ்விரித்தால் சிரிப்புமழை
அவள் சுட்டால் கோடைமழை!!

அவள் பணிந்தால் பதமழை
அவள் பாய்ந்தால் புயல்மழை!!
அவள் மயங்கினால் தொடர்மழை
அவள் வாங்கினால் வசுல்மழை!!

அவள் அடித்தால் பயங்கரமழை
அவள் அணைத்தால் இன்பமழை!!
அவள் அழைத்தால் அந்திமழை
அவள் அழகுஇதுவரை பெய்திராத மழை!!

அவள் வருடினால் வருணமழை
அவள் சினுங்கினால் செயற்கைமழை!!
அவள் தட்டினால் பலத்தமழை
அவள் நீர்துளியோ நிறமற்றமழை!!

அவள் சொன்னால் பெய்மழை
அவர் பார்த்தால் காந்தமழை!!
அவள் ஓய்ந்தால் பெய்ந்தோந்த மழை
அவள் இந்தாண்டின் நந்தனமழை!!

நினைந்தது போதுமோ மனமே
கிடைத்தது போதுமே மனமே!!
ரசித்தது போதுமே மனமே
மழையால் மயங்குதோ மனமே!!!

-RAMKI

Saturday, June 30, 2012

HAPPY BIRTHDAY TO SRI. VISU
விசு ஐயாவின் பிறந்தநாள் நாளைக்கு. அன்று அவர் 'பாட்டும் நானே.....' என்ற பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தேன்.இதோ உங்களுக்காக
கற்பனை ராம்கி, கோவை (9790684708) என் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்
மக்கள் அரங்கமும் நானே அரட்டை அரங்கமும் நானே
மற்ற அரங்கத்தையெல்லாம் ஆடவைப்பேனே
(மக்கள்)
பேச்சும் நடிப்பும் நாடகத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(மக்கள்)
ஞாயிற்று கிழமை டிவியில் அரசன்நானே
இசை அரங்கத்தில் நடுநாயகன் நானே

பலநாடகமும் படமும் இயக்கியது நானே (2)
என்நிகழ்ச்சி நின்றால் அடங்கும் டிவிஉலகே

நான் அமர்ந்தால் அசையும் அரங்கமெல்லாமே (2)
அறிவாய் மனிதா நான் மாணவர்களுக்கு உதவுவது பெரிதா?

ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
மக்கள் அரங்கமும் நானே அரட்டை அரங்கமும் நானே
மற்ற அரங்கத்தையெல்லாம் ஆடவைப்பேனே../> -ராம்கி, கோவை

Friday, June 1, 2012

கார்த்திக் யாமினி திருமணம் KARTHICK WEDS YAMINI

KARTHICK WEDS YAMINI
யாமினி நீயும், கார்த்திக் நானும் கைபிடிச்சா திருவோணம்......

30ம் தேதி மாலை 3 மணிக்கு ஒரு வேனில் நானும் சீதாவும் போரூரிலிருந்து கிளம்பி ஆதம்பாக்கத்தில் உள்ள மீனா அக்காவீட்டிற்குச் சென்றோம். ராஜி குடும்பத்தார், உமா மற்றும் சுதா, சௌர்ணா மற்றும் ஹரியின் குடும்பத்தாருடன் அங்கிருந்து வித்யாவின் வீட்டிற்கு சென்று அவளையும் அழைத்துக்கொண்டு ஓட்டல் மாரிஸில் கார்த்திக் யாமினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 4.30மணிக்கு போய் சேர்ந்தோம். வித்யாவின் 2வது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் நாங்கள் இருவரும் ஓடும் காரில் வாழ்த்து தெரிவித்தோம். ஒரு மினி பிக்னிக் போவது போல் இருந்தது. Van Courtesy: Mutuhuanna - Special Thanks to you!

மும்பை 'QUEEN' யாமினி

ஓட்டல் மாரிஸில் முத்து அண்ணா, லலிதா மன்னி மற்றும் கார்த்திக்கை சந்தித்த பிறகு மாலை சிற்றுண்டிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். பாதாம் அல்வா, போண்டா மற்றும் 2 வகை சேவையும், சுடச்சுட காபியும் உண்டு மகிழ்தோம். பிறகு கார்த்திக் மற்றும் முத்து அண்ணா அவர்கள் நான் வரைந்து எடுத்துச்சென்ற கார்ட்டூன்களை பார்த்தனர். அவர்களுக்கு பிடித்துவிடவே, அவைகளை ஒட்ட ஒரு போர்டு ஏற்பாடு செய்துதந்தனர். பிறகு அதை திருமண நிகழ்ச்சி வரிசைப்படி நான் மகேஷின் உதவியோடு சுமார் 17 கார்ட்டூன்களை ஒட்டினேன்.

தங்க மகனுக்கு, தங்கச் சங்கலி அலங்காரம்
பிறகு வரவேற்பு நேரம் நெருங்க நெருங்க, முதலில் ஸ்ரீராம் அவர்கள் மாப்பிள்ளை கார்த்திக்கு தங்க மாலை அணிவித்து நிகழ்ச்சிகளை துவங்கிவைத்தார். மயில்கழுத்து கலரில் கார்த்திக்கின் உடை பார்ப்பவரை கவர்ந்தது. மணப்பெண் யாமினியும் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைஏறினார்.

கீழ் கண்ட எனது கார்ட்டூன் சித்திரங்களை படம் பிடித்து எனக்கு அனுப்பியவர் Chinaவை சேர்ந்த Lingfei SUN (Thanks a million Lingfei SUN)

சுமார் 4 நாட்கள், தினமும் இரவு 10 முதல் 12 மணி நேரம் வரை அமர்ந்து வரைந்த கார்ட்டூன்கள் இவை. இவற்றுடன் மேலும் 4 படங்கள் இருந்தன. இடம் பற்றார்குறையால் அவற்றை பார்வைக்கு வைக்கமுடியவில்லை.
நாதஸ்வரம் குரூப் கார்ட்டூன் பக்கத்தை, அங்கு வந்திருந்த நாதஸ்வர வித்வானிடம் கொடுத்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்து பத்திரமாக எடுத்துச்சென்றார். சார் நல்லா இருக்கு சார் என்று கைகொடுத்தார். எங்களுக்கும் மரியாதைகொடுத்து ஒரு சீன் வரைஞ்சு இருக்கீங்க என்று சொல்லி மகிழ்ந்தார்.






மெல்ல மெல்ல அந்தப்பக்கம் வருவோரும் செல்வோரும் அறையின் முன் வாசலில் வைக்கப்பட்ட எனது கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்தனர், ரசித்தனர். நான் தான் வரைந்தது என்று தெரிந்ததும் பலர் 'ரொம்ப நன்னா வரைஞ்சு இருக்கேள்' என்று தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 'யார் அந்த ராம்கி, அவரை நாங்க பாக்கனுமே' என்று முத்து அண்ணா மற்றும் லலிதா மன்னியிடம் பலர் கேட்க, அவர்களிடம் என்னை அழைத்துச்சென்று 'இவா தான் அவா' என்று அறிமுகப்படுத்தினர். பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் உதவியாளர் என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் கார்ட்டூன்களை பார்த்து மிகவும் பாராட்டினார். வெளிநாட்டுப் பெண்மணிகளும் (Including Lingfei SUN) எனது கார்ட்டூன்களை பார்த்து ரசித்தனர். பிறகு தொடர்ந்து நடக்க இருக்க நிகழ்வுகளை கார்ட்டூன் வரிசைப்படி கேட்டு அறிந்தனர். என்னையும் கார்ட்டூன் பக்கத்தில் நிற்க வைத்துப்புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 'வாட் இஸ் நலுங்கு?' என்று கேட்டு நான் சொன்ன விளக்கத்தை கேட்டு சிரித்தனர். 'வெரி னைஸ் பிக்சர்ஸ்'.. 'ஒன்டர்புல் கார்ட்டூன்ஸ்' என்று கைகொடுத்து சென்றனர்.
முத்து (வெங்கட்), யாமினி, கார்த்திக், பகவதி, பாலு (நெல்லை)
கார்த்திக் என்னைவிட கொஞ்சம் உயரா இருக்கானோ?? -ரவி!!....

கார்த்திக், யாமினி அழகாக அலங்காரம் செய்து மேடை ஏற, ஒன்றின்பின் ஒருவராக அவர்களுக்கு கைகுலுங்கி வாழ்த்துதெரிவித்தவண்ணம் இருக்க, திடீரென சலசலப்பு ஏற்பட அனைவரும் வாசல் பக்கம் திரும்ப, ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண்மணி சற்று செக்ஸியாக இருக்க அனைவரும் அவரை பார்த்தனர். தன் கணவன்மார்கள் அப்பெண்மணியை பார்த்து ஜொல்விடுகிறார்களா என்று பல பெண்மணிகள் தங்கள் கணவரது பார்வையை நோட்டமிட்டனர். (என் மனைவியும் இதில் அடக்கம்). அப்பெண்மணிகள் கார்த்திக்கை ஒருவர்பின் ஒருவராக கட்டியணைத்து வாழ்த்து தெரிவக்க, பலருக்கு மேல்மூச்சு வாங்கியது. மச்சம் உள்ள ஆளு கார்த்திக் என்று பெருமூச்சுவிட்ட இளைஞர்களும் உண்டு. பிறகு அவர்கள் போட்டிகோட்டுக்கொண்டு போட்டோ எடுத்து தள்ளினர்.

வித்யா, மீனா அக்கா, பகவதி, சீதா, பாலு, உமா

முத்து அண்ணாவின் முதல் சம்பந்தி எங்களுடன் எப்போதும் ஜாலியாக பழகுவார். நீங்க முத்து அண்ணாவின் சம்பந்தின்னு எங்களுக்கு தெரியும் ஆனா அதுக்காக சேர் மேலே சேர் போட்டு உட்கார்ந்திருப்பது டூ மச் என நான் ஜோக் அடிக்க அப்போது தான், தான் இருண்டு சேர்களுக்கு மேல் உட்கார்ந்திருப்பது தெரிந்து அவர் சிரிக்க, முத்து அண்ணா முதல் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். சம்பந்தியின் மனைவியும் என்னுடன் சேர்ந்து கணவரை கிண்டல் செய்தார். இவரும் எனது கார்ட்டூன்களை வெகுவாக ரசித்தார். ரவி குடும்பத்தினர், ஸ்ரீராம், திருமதி ஸ்ரீராம், லாவண்யா மற்றும் குழந்தைகளை பார்த்து மகிழ்ந்தேன்.
பகவதி, ராஜி, உமா
கணேஷ், ராஜியை கலாட்டா செய்து கிண்டல் செய்ய சுற்றியிருந்த உமா, சீதா என அனவைரும் ஜாலியாக ஜோக் அடித்து கணேஷை கலாய்த்தோம். பாஸ்கர் மனைவியையும் குழந்தைகளையும் பார்த்து பேசினோம். மாப்பிள்ளை ராஜகுமார், நாராயணி, தீப்ஷிகா,தர்னேஷ் ராஜ் போன்றவர்களை கண்டு மகிழ்ந்தோம். நாராயணி திருமணத்தில் முன்னின்று, தன் பெற்றோர்களுக்கு அனைத்து உதவிகள் செய்தவண்ணம், தன் குழந்தைகள் மீது வைத்தகண் வாங்காமல் கவனித்துக்கொண்டு, படு பிஸியாக இருந்தை காணமுடிந்தது (என்னே அடக்கம்). ராஜ்குமார் உறவினர்களை நீண்ட வருடங்களுக்குப்பிறகு சந்தித்து பேசினேன். வரவேற்பின் நிறைவாக, யாமினி மற்றும் கார்த்திக்குடன் இளசுகளும், பெரியவர்களும் இசைக்கு ஏற்ப சிறிது நேரம் நடனமாடி மகிழ்ந்தனர். கார்த்திக், யாமினி மற்றும் அவளது சகோதரியும் மிக அழகாக இசைக்கு ஏற்ப ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானேவரும் அல்லவா?
இரவு விருந்தும் மிகவும் நன்றாக இருந்தது. முத்து அண்ணா நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஸ்ரீராம் அவர்கள் மூலம் ஒரு வேன் ஏற்பாடு செய்து கொடுத்தார். (நன்றி முத்து அண்ணா) மீனா அக்கா குடும்பத்தாரை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு, சுமார் 10.30க்கு போரூர் போய் நானும் சீதாவும் சேர்ந்தோம்.
காலை முகூர்த்ததிற்கு நானும் சீதாவும் காலை 6.30க்கு கிளம்பினோம். போரூர் வரை இருசக்கர வாகனத்தில். பின் கிண்டி வரை ஷேர் ஆட்டோவில், பின் நந்தனம் வரை பஸ் பின் அங்கிருந்த ஆட்டோவில் ஓட்டல் மாரிஸ் வந்து சேர்ந்தோம். பின் காலை சிற்றுண்டி பொங்கல், இட்லி வடை சாப்பிட்டோம்….விரதங்கள் முடிந்து காசியாத்திரை சிறப்பாக நடந்தது. 'காசிக்கு போக வேண்டாம். என் மகள் யாமினியை உனக்கு திருமணம் செய்துவைக்கிறேன்' என்று திரு வி. ராமச்சந்திரன், கார்த்திக்கிடம் சொல்லி, இரண்டு தேங்காய்க்களை கொடுத்து, காசியாத்திரைக்கு தயாரான கார்த்திக்கை போகவிடாமல் திசைதிருப்பினார். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'.......

இரண்டுமே, எனக்கே எனக்கா மாமா?
இது எத்தனை நாள் கனவு தெரியுமா யாமினி?...

தூக்கிட்டாங்கையா....மாமாக்கள் அலேக்கா தூக்கிட்டாங்கையா
முன்னேறு மேலே மேலே
மாலை மாற்ற வா.. பார்த்து பேச வா...
சிறிது நேரத்தில் திருமணச் சம்பிரதாயங்கள் தொடங்கின. யாமினி கார்த்திக் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கவனே நல்ல உயரத்தில் கார்த்திக்… மணப்பெண் யாமினியின் மாமாக்கள் அவளை தூக்க, அதற்கும் மேலாக கார்த்திக்கை கணேஷ், பாச்சா எனும் இரண்டு மாமாக்கள் மேலும் அலேக்காக தூக்க, யாமினியும் விடாமல் உயர்ந்து மாலையை மாற்றியது ரொம்ப தமாஷாக இருந்தது. பின் இவர்களை ஊஞ்சலில் உட்காரவைத்து மெல்ல ஊஞ்சல் ஆட, ஒவ்வொரு பெண்மணியாக, தம்பதிகளின் கால் துடைத்து, பாலு பழம் கொடுத்துனர்.
இனி விடமாட்டேன் யாமி
யாமி இப்பவேவா...
இப்போ கையைபிடி கையைபிடிடா, அப்புறமா கட்டிபுடி கட்டிபுடிடா.....
ஆதம்பாக்கம் சித்தியுடன் நம் உறவினர்கள்
பின் ஒவ்வொரு பெண்மணிகளாக வண்ண அன்ன உருண்டைகளை இவர்களின் தலையைச்சுற்றி நால்புறம் கிரிக்கெட்டில் பந்து வீசும் ஸ்டைலில் வீசினர். 'கார்த்திக் வாயை முடிக்கோ இல்லேனா ஒரு உருண்டை உன் வாயில் விழும்' என்று நான் தமாஷ் செய்ய, காயத்ரி போட்ட உருண்டை அவரது மச்சினர் மீது சரியாக விழ, 'நேரம் பாத்தது அடிச்சிட்டாங்கையா' என நான் சொல்ல அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். ஆரத்தி எடுக்க தம்பதிகள் மெல்ல மெல்ல அடிஎடுத்து திருமண ஹாலுக்குள் நுழைந்தனர். வாராயோ தோழி வாராயோ....
யார் அங்கே? நான் பவுல் போட ரெடி = ஆதம்பாக்கம் சித்தி
எல்லாம் தயார் டீலா...
முகூர்த்தத நேரம் நெருங்கியாச்சு..சீக்கிரம்
கரெக்டா இருக்கா?
அப்போது கோவில்பட்டி சித்தி, சித்தப்பா, நெல்லை மாமா, மாமியையும் தென்காசிமாமாவையும் பார்த்து பேசினோம். ஆதம்பாக்கம் சித்தப்பா, கோவில்பட்டி சித்தப்பா, நெல்லை மாமா, தென்காசி மாமா போன்றோர் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பிரிவோம் சந்திப்போம்....கோவில்பட்டி சித்தியுடன் ராம்கி

நானும் கோவில்பட்டி சித்தியும் எப்போதும் சின்ன மாமியார்=மாப்பிள்ளை என்று பழகாமல் தாமாஷ் செய்து கொண்டு இருப்போம். இன்றும்அப்படியே எங்களது தமாஷ் துவங்கியது. பள்ளிக் குழந்தைகள்தான் அப்பப்போ சண்டை போட்டுகிட்டு கொஞ்சநேரம் பேசாம இருப்பா, கொஞ்சநேரத்திலே பேச ஆரம்பிச்சுடுவா. அதுபோல் தான் நம்ம சண்டையும்… போன்லயாவது பேசுங்கோ என்று சித்த சொன்னார்கள். (என்னாலே உங்க நிம்மதி கெடக்கூடாது அல்லவா என்று நான் (ராம்கி) சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை). என்றும் பிரிவோம் சந்திப்போம் ஸ்டைலில் நாங்கள் பேசும் சமயம் பார்த்து எங்களை போட்டோ எடுக்கச்சொன்னேன்.
நான் ரெடி..ரெடி...ரெடி
மூன்று முடிச்சு
தாலி கட்டப்போறேன்....கட்டபோறேன்.. கட்டிட்டேன்..
என் தங்க சங்கலி உனக்கே உனக்கு
திருமாங்கல்யத்திற்கு மரியாதை...
முகூர்த்தம் சரியான நேரத்தில் துவங்கியது. மும்பை திரு. ராமச்சந்திரன் மடியில் மணமகள் யாமினி உட்கார, மேளம் கொட்ட, கார்த்திக் யாமினிக்கு தாலி கட்டி 31.5.2012 அன்று வியாழக்கிழமை, வளர்பிறை ஏகாதசி திதி, ஹஸ்த நட்சத்திரம், சித்தயோகத்தில் 9.35க்கு கடக லக்னத்தில் முறைப்படி தன் துணைவியாக ஏற்றுக்கொண்டார். அட்சதைகளும், மலர்களும் அவர்கள் மீது நாங்கள் தூவ, தேவர்கள் மேலிருந்து ஆசிர்வதித்தனர். யாமினிக்கு ஒருதங்க சங்கலியும் போட்டு, மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு, யாமினியின் நெற்றியில் குங்குமம் இட்டு கார்த்திக் யாமினியின் கைபிடித்தார்.
பொட்டுவைத்த முகமோ...
தந்துவிட்டேன் என்னை...
பொரி சின்ன விஷயமில்லே யாமி
அதிக புகையில்லா ஹோமம். எப்படி நம்ம ஐடியா..
இந்த அம்மிக்கல் மாதிரி நாம என்றும் உறுதியா இருக்கனும்
மற்ற திருமண சடங்குகள் மீண்டும் துவங்க, அக்னியை இருவரும் வலம்வந்த பிறகு, ஸ்ரீராம் யாமினியின் கையில் பொரி போட, கார்த்திக் யாமினியின் கையுடன் இணைந்து அக்னியில் இட்டனர். பின் மெட்டியிடுவது, அருந்ததி பார்ப்பது போன்றவை நடைபெற்று, பெரியவர்களை ஒன்றாக நிற்கவைத்துப் புதுமணத் தம்பதிகள் நமஸ்கரித்தனர். இருசம்பந்திகளும் ஆரத்தி எடுக்க திருமணம் நல்லவிதமாக நிறைவுக்கு வந்தது.
திருமண நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தது பாராட்டத்தக்கது. இந்நிகழ்ச்கிகளை அமெரிக்காவிலிருந்து கணினியில் நேரடியாக கண்டு ரசித்த ஸ்ரீவித்யா ரவி என்னுடன் போனில் பேசினார். 'அத்திம்பேர் எல்லோரும் உங்க கார்ட்டூன் பற்றிதான் என்கிட்ட சொல்றாங்க…கேமராவில் உங்க கார்ட்டூனையும் கொஞ்சம் போக்கஸ் செய்யச் சொல்லுங்க பிளீஸ்' என்றார். நேரடியாக திருமண நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் இருக்கும் ரவிகுடும்பத்தார் பார்த்து மகிழ்ந்தனர். (இந்த ஆன்லைன் ஐடியாவும் நான் முத்துஅண்ணாவிடம் முன்பே சொல்லியிருந்தேன்)
என் இணை சீதா ராம்கி, மாமி, ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் மாமா (நெல்லை)
இரண்டு உமாக்களுக்கு நடுவே சிக்கிய புள்ளிமான் (?) சீதா
தங்கை உமாவுக்கு நினைவுப்பரிசு தரும் அண்ணா முத்து
இப்போ தங்கை சீதாவுக்கு
சீதா,ராஜ்குமார் (முத்து அண்ணாவின் மாப்பிள்ளை)
சம்மந்திகள் பதில் மரியாதை, வந்தவர்களுக்கு மரியாதை செய்தல் போன்றவை சிறப்பாக நடந்தேரியது. நானும் சீதாவும், ராஜ்குமாரிடம் எப்போதும் சிரித்து பேசுவோம். அப்படியே அவரை கலாட்டா செய்ய சீதை ராஜகுமாருக்கு மகிழ்ச்சியில் கைகொடுக்க டக் என கிளிக் செய்தேன்.

முத்து அண்ணா, லலிதா மன்னி மற்றும் திரு வி. ராமச்சந்திரன், மீனா தம்பதிகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றனர். கார்த்திக் யாமினி திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் அனைவரும் ஒவ்வொருவராக தாம்பூலப்பையுடன் விடைபெற்றோம்.
கடைசியா சென்ற எனக்கு?? இத்திருமணத்தில் பல புதுமைகளை புகுத்திய கார்த்திக்கை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. இவரது பண்பை இன்றைய இளைஞர்கள் சிலராவது கடைபிடிக்க வேண்டும் என்பது என் அவா. யு ஆர் கிரேட் கார்த்திக்..கீப் இட் அப்.
வாழ்த்துக்கள் யாமினி, கார்த்திக்… நன்றி எஸ்வி மற்றும் விஆர் தம்பதிகளுக்கு.
We all missed Ravi & Family. Also Muthuanna's parents & Lalitha Manni's parents and other close relatives including Yamini's Mani Mama (USA) very much at the wedding.

நேர்முக வர்ணணை மற்றும் புகைப்படங்கள் RAMKI