Wednesday, March 14, 2012

இந்திய பேனா நண்பர் பேரவை நண்பர்கள் தினம்

இந்திய பேனா நண்பர் பேரவை நண்பர்கள் தினம்



கோவை திம்மம்பாளையம் ஆனந்தவனம் என்னும் ஆதரவற்ற குழந்தைகள் குருகுலத்தில், இந்திய பேனா நண்பர் பேரவை (மும்பை பதிவு) கோவை கிளை சார்பாக நண்பர்கள் தினம் மார்ச் 11, 2012 அன்று கொண்டாடியபோது, குருகுலத்திற்க்கு தேவையான வாட்டர்பில்டர் மற்றும் பாத்திரம் கோவை மாவட்ட அமைப்பாளர் வெ. ராஜா, வீரராகவன், ராம்கி, மற்றும் பல உறுப்பினர்கள் வழங்கிய போது எடுத்த படம்.

அந்த குருகுலம் மிகவும் அமைதியாக சிறிய மலைஅடிவாரத்தில் உயர்ந்து நிற்கிறது. நாங்கள் நுழைந்ததும் குருகுலத்தின் அம்மா எங்களை அன்போடு வரவேற்று, இளைப்பார நீர் மற்றும் பழச்சாறு அளித்தார்கள். அங்கே ஒரு குழல் ஊதும் கிருஷ்ணனின் சிலை மிகவும் அழகாக இருந்தது. அக்குழந்தைகள் பற்றியும் அவர்களது குடும்ப சுழல் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டோம்.

குருகுல குழந்தைகளுக்காக நாங்கள் அனைவரும் சேர்ந்து வாங்கிய வாட்டர் பில்டர் மற்றும் 25கி அளவு பெரிய எவர்சில்வர் டப்பாவை (அரிசி போன்ற பொருட்களை போட்டுவைக்க பயன்படும் பாத்திரம்)கோவை ஐபிஎல் சார்பாக நாங்கள் அளித்தோம். பின் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

சிறிது நேரம் 5 குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்தோம். மொபைல் போனில் பாட்டு போட்டு குழந்தைகளை டான்ஸ் ஆடச்சொன்னோம். அவர்களும் குஷியாக விளையாடினர். குருகுலத்திலிருந்து பார்த்தால் எதிரே இயற்கை எழில் நம்மை மெய்மறக்கச்செய்தது. பிறகு நாங்கள் கிளம்ப தயாரானபோது, அம்மா எங்களை சாப்பிட அழைத்தார்கள். அவர்களுக்கு சிரமம் அளிக்ககூடாது என நாங்கள் இருந்தோம். இருப்பினும் எங்களை இதை சாமி பிரசாதமாக நினைத்து சாப்பிடுங்கள் என்று அம்மா சொன்னதை தட்டமுடியாமல் நாங்கள் இருங்க, சுடச்சுட தக்காளி சாதம், அப்பளம், தயிர்சாதம் வாழையிலை போட்டு பரிமாறப்பட்டது. பிறகு அம்மாவிடமும், குழந்தைகளிடமும் நாங்கள் விடைபெற்றோம். எங்களுக்கு அம்மா உடனே கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். வெளியைவந்ததும் நான் குழந்தைகளுக்கு கையசைத்து டாட்டா காட்ட யாருமே டாட்டா காட்டவில்லை, அதற்கு பதிலாக இருகரம்கூப்பி ஹரி ஓம்... ஹரி ஓம்....என்று குழந்தைகள் சொன்னார்கள், பதிலுக்கு நாங்களும் ஹரி ஓம் என்று சொல்லி கிளம்பினோம். சில மணி நேரங்கள் அக்குழந்தைகளோடு குருகுலத்தில் இருந்தது மனதிற்கு சாந்தி தந்தது.

ஐபிஎல் கோவை மாவட்ட அமைப்பாளர் வெ. ராஜா அனைத்து ஏற்பாடுகளையும் அருமையாக செய்திருந்தார். 30ம் மேற்பட்ட உறுப்பினர்களை குறைந்த நாட்களில் ஐபிஎல்லில் சேர்த்த பெருமையும், சாதனையும் ராஜாவுக்கு உண்டு. தொடரட்டும் அவரது சேவை. தொடரட்டும் மனித நேயமும், நட்பும். விரைவில் கோவை உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று ராஜாவிடம் கூறினேன்.

ஐபிஎல் தலைவர் கருண் அவர்களுக்கு இத்தருணத்தில் நண்பர்கள் தினம் மற்றும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை போனில் தெரிவித்து வாழ்த்தினேன்.கருண் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இன்னும் நிறைய சமூகசேவை செய்ய கடவுள் எங்களுக்கு அருளவேண்டும்.

ராம்கி

No comments:

Post a Comment