Saturday, March 24, 2012

அப்போ....அப்போ, இப்போ...............இப்போ

அப்போ....அப்போ
இப்போ...............இப்போ
ராம்கி




அப்போ கையில் நோட்புக்

இப்போ (கம்யூட்டர்) நோட் புக்



அப்போ வகுப்பில் முதலாக வர ஆசை

இப்போ சிறந்த பணியாளராக வர ஆசை



அப்போ டீச்சரைப் பார்த்தாலும், தேர்வு என்றாலும் பயம்

இப்போ அதிகாரியை பார்த்தாலும், டார்கெட்டுக்கும் பயம்



அப்போ கையில் நோ போன்

இப்போ நோக்கியா போன்



அப்போ கையில் பாக்கெட் மணி

இப்போ சம்பளமே பாக்கெட் மணி



அப்போ பட்டாசுக்காக காத்திருப்பு

இப்போ தீபாவளி போனசுக்கு காத்திருப்பு



அப்போ ஸ்கர்ட்

இப்போ மினி கைக்ரோ ஸ்கர்ட்



அப்போ பாடிப்பாவாடை

இப்போ பாடியே ஆடை



அப்போ இரண்டை பின்னல்

இப்போ வாழ்க்கையே பின்னல்



அப்போ வாசலில் மெயிலுக்காக காத்திருப்பு

இப்போ கையில் இமெயிலுக்காக காத்திருப்பு



அப்போ நிறைய நோட்டீசு கல்யாணத்துக்கு

இப்போ நிறைய நோட்டீசு விவாகரத்துக்கு



அப்போ வாசலில் அம்மா காத்திருப்பு

இப்போ வாசலில் நம் குழந்தைக்கா காத்திருப்பு



அப்போ வீட்டிலேயே இனிப்பு

இப்போ இனிப்பு கடையை நம்பியே நம்இருப்பு



அப்போ எப்போதும் சிரிப்பு

இப்போ எப்போதும் கடுகடுப்பு



அப்போ கூட்டுக்குடும்பமே விசேஷம்

இப்போ விசேஷத்தில் தான் ஒன்றுகூடுது குடும்பம்



அப்போ கொஞ்சம் சம்பளம், நிறைய மகிழ்ச்சி

இப்போ கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய சம்பளம்



அப்போ கொஞ்சமாய் வியாதிகள்

இப்போ எக்கச்சக்கமாய் மருத்துவமனைகள்



அப்போ காபிகொட்டைக்கு கியூ

இப்போ டாஸ்மார்க்கு கியூ



அப்போ கட்டையில் நம் எரிப்பு

இப்போ கட்டையானபின் எலக்ட்ரிக்கில் நம் எரிப்பு



ஆக எதுவும் மாறவில்லை…………

ஆக எதுவும் மாறவில்லை………………

ராம்கி

1 comment:

  1. By separate mail:
    கடந்த காலநிகழ்வுகளை நிகழ்கால நிகழ்ச்சிகளுடன் ஒப்பட்டு பார்ப்பது பல காலமாக தொடரும் பழக்கம். உங்கள் கைவண்ணத்தில் வழக்கமாக தெரியும் மெருகேற்றம் இதிலும் காணப்படுகின்றது. பொருத்தமான் ஒற்றுமை வேற்றுமைகள்.

    அன்புடன்,
    இராமச்சந்திரன் Mumbai
    *

    ah ah ahhaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
    KRV, Hyderabad
    *
    great., very good try., keep it up
    Mythili manni, Hyd

    *
    super moms! romba nanna eruku! - Bhuvana, chennai.
    *
    SABHASH.....SABHASH..........
    ENDRENDRUM ......RAMKI...KUMAR.........
    RAMESH, chennai.
    *
    RAJA YENNA ACHHU UNAKKU.................. IPPADI TOOL KELAPPURA....! KEEP IS APPPU
    SIMON, CHENNAI.
    *
    appappaa !!
    DR T S SURENDRAN
    VICE CHAIRMAN -SANKARA NETHRALAYA
    *
    Aaanal, Manidthan Maarivitaan!... ooooo ... ooooo.. oh..ohooooo... OOO!
    Good one ramki.
    Vaidy, Mumbai.
    *
    அப்போ பாடிப்பாவாடை
    இப்போ பாடியே ஆடை

    கொஞ்சம் மாதி யோசிச்சேன் ஹைதராபாத் வெய்யிலில் அலைஞ்சபிறகு

    அப்போ பாடிப்பாவாடை
    இப்போ பாடியில் ஏதோ ஆடை

    இதில் உங்களது எண்ணமும் இருக்கு "இப்போ பாடியே ஆடை" மற்றும் "பாடியில் ஏதோ ஒரு ஆடை" என்றும் பொருந்தும்
    அன்புடன்
    சீனு. HyderaBAD.
    *

    ReplyDelete