Thursday, March 22, 2012

POSITIVE THINKING ARTICLES IN TAMIL

இன்றே செய்
RAMKI

காலம் பொன்போன்றது. நாளை என்பது மிகவும் தாமதமாகும் எனவே, இன்றைய தினம் என்பது உங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய அருமையா தருணம். இன்றே முடிக்கக்கூடிய வேலைகளை, நாளைக்கு என்று தள்ளிப்போடதீர்கள். முடிவு எடுக்க. முன்னேற்றமடைய, வேலை செய்ய ஏற்றது இன்றைய பொன்னாள் தான். நாளை நடப்பது யாருக்கும் தெரியும்?. ஆனால், இன்று என்பது உங்கள் உள்ளங்கையில் தயாராக, இப்போதே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாக நினைத்து செயல்படுங்கள். அதற்கு ஈடுஇணை எதுவுமில்லை. தயக்கம் எதுவுமின்றி, இப்பொழுதுதே செயல்பட துவங்கவும். நீங்கள் துவங்கியதை வெற்றிகரமாக செய்துமுடிக்க அனைத்துச் சாத்திய கூறுகளும் தயாராக இன்றே இருக்கும் போது, ஏன் நாளைக்கு என தள்ளிப்போடுகிறீர்கள்? இன்று செய்ய துவங்குவது, இன்றே நல்லபடியாக முடியும். எதையும் நாளைக்கு செய்யலாம் என்று இருந்தவிட்டால், அது மறந்து போகலாம் அல்லது செய்ய முடியாமலும் போகலாம் அல்லவா? சாக்குபோக்குச் சொல்பவர்கள் தான், எல்லாவற்றையும் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்யலாம் என வந்த நல்ல வாய்ப்பை தவறவிடுவார்கள். எனவே, நன்றே செய்வீர், அதை இன்றே, இப்பொழுதே, செய்து எடுத்துகாரியத்தில் வெற்றிபெற இப்பொழுது என் நல்வாழ்த்துக்கள்

*
திருப்பு முனை
RAMKI

உங்களது பிரச்சனைகளோ, பாதிப்புகளோ சில நேரங்களில் உங்களிடம் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம். பிரச்சனைகள் உங்களைப் பின்தொடர்ந்துவரும் பொழுது, அதனை சமாளிக்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் நீங்கள் முழு மூச்சில் முயற்சி செய்ய துவங்கிவிடுவீர்கள். உங்களின் பிரச்சனைகள், உங்களது பலவீனம் என்ன என்பதை உணர்த்திவிடும். அப்பொழுது பலவீனங்களை பின்தள்ளி முன்னேற தானாக செயல்பட ஆரம்பித்துவிடுவீர்கள். ‘புது பிரச்சனை வந்துவிட்டதே’ என நொந்து போவதை தவிர்த்து, அதனை சமாளிக்க பழகிக்கொள்ளவேண்டும். வாழ்வில் ஒவ்வொரு சவால்களும் உங்களது நிலையை உயர்த்திக்கொண்டே போகும்.
உங்கள் பிரச்சனைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கும்பொழுது, அதிலிருந்து தப்பிக்க பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு, அதையே உங்கள் வாழ்வில் ஒரு ‘திருப்பு முனையாக’ நினைத்து சவால்களை முறியடிக்க முயலவேண்டும். சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பல்லாயிரக்கணக்கான பிரச்சனைகளிலிருந்து தான் சமுதாயம் நன்கு முன்னேறியுள்ளதை தெரிந்துகொள்கிறோம். அதுபோன்று, உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களால் உங்களின் நிலையை உயர்ந்தியிருப்பதை உணர்வீர்கள். ‘எல்லம் நன்மைக்கே..’, ‘ஆல் இஸ் வெல்’ என்று எல்லாவற்றையும் பாஸிட்டிவ்வாக வாழ கற்றுக்கொண்டால், பிரச்சனைகள் என்றும் உங்களை நிழல்போல் தொடர்ந்து வராது என்று சொல்லவும் வேண்டுமோ?
*
மனிதன் மனிதன், அவனும் மனிதன்
RAMKI

உங்களுடன் ஒருவர் தொடாபில் இருக்கும் பொழுது அவரை முதலில் ஒரு மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களது இமெயிலை பெறுபவராக இருக்கட்டும், அல்லது போனில் பேசுபவராக இருக்கட்டும், அல்லது ஒரு தனி தபர் உங்களை சந்திக்க வரிசையில் காத்திருப்பவராக இருக்கட்டும். இப்படி யாராக இருந்தாலும் அவரும் ஒரு மனிதன் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் பல நம்பிக்கைகள், கனவுகள். மகிழ்ச்சிகள், வலிகள், பிரச்சனைகள், சாமர்த்தியங்கள். விருப்பங்கள், செய்யவேண்டிய வேலைகள், தனிப்பட்ட கருத்துக்கள் என பல்லாயிரம் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். அவரையோ அல்லது அவளையோ உங்களுக்கு பிடித்தும், பிடிக்காமலும் இருக்கலாம். அவரது கருத்து உங்களோடு ஒத்துப்போகலாம், போமாகலிருக்கலாம். இருப்பினும், அவர்களை மரியாதையோடு, புரிந்து கொண்டு உதவ முன்வரவேண்டும்.

இவவுலகில் உங்களோடு இருப்பவர்கள், உங்கள் வாழ்வு மேலும் பிரகாசிக்க வைப்பவர்களாக பாவியுங்கள். மற்றவர்களோடு உதவ, கவனித்துக்கொள்ள உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள். மற்றவர்களோடு செலவிடும் பொழுதை பொன்னான தருணமாக நினைத்து, அவர்கள் மீது தனிகவனம் செலுத்தி, அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கவும். உங்களது உறவுக்கு மதிப்பளித்து, தொடர்ந்து என்றும் அன்போடு பழகுங்கள். அவர்களை மதிப்பது, கவனிப்பது, பதிலளிப்பது, பாராட்டுவது, இடமிளிப்பது போன்றவந்றை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கைப் பாதையில் சந்திப்பவர்களுக்கெல்லாம் நீங்களாகவே முன்வந்து உதவ தயங்காதீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு மதிப்பளித்து வாழ்வது, உங்கள் வாழ்க்கையில் ஒரு தனிஅர்த்தத்தை ஏற்படுத்தும் என சொல்லவும் வேண்டுமோ?

*

No comments:

Post a Comment