Friday, December 11, 2009

LIFE IS CELEBRATION, BE HAPPY

LIFE IS CELEBRATION, BE HAPPY
PORUR ராம்கி

நாம் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். அப்படி நினைப்பது மனித இயற்கை. மகிழ்ச்சியாக இருக்க நாம் முதலில் நல்ல உடல் நலத்துடன் இருக்கவேண்டும். ஆனால் உலகமே மாயைபோல் உள்ளது, நிறைய பணம் மட்டும் கையில் இருந்துவிட்டால் அனைவராலும் மகிழ்ச்சியாக வாழமுடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும் தானே?

மகிழ்ச்சியாக இருப்பவன் யார் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்பவன் அல்ல என்கிறார் ஒரு ஞானி. துக்க நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பவனே உண்மையான மகிழ்ச்சியானவன். மகிழ்ச்சிக்கு எந்த தடைகற்களும் இல்லை. நம்மை நாமே எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். மகிழ்ச்சியில் இரண்டு வகை உண்டு, வெளியில் மகிழ்ச்சியை தேடுவது. மற்றொன்று நம் மனதி்ல் மகிழ்ச்சியை
தேடுவது, சாதாரண மனிதன் புற மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றான்.

இதோ ஒரு குட்டி கதை, ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். மகிழ்ச்சியாக இருக்க விரும்பினான், பலபேரைக் கேட்டான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று... பலர் ஒரு காட்டில் உள்ள ஒரு முனிவருக்கு கையைகாட்டிவிட்டார்கள். அடர்ந்த காட்டில் அந்த முனிவரை தேடி அலைந்து ஒருவழியாக அவரை கண்டுபிடித்தான். தன்
குதிரையை மரத்தில் கட்டிவிட்டு, ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்த முனிவர் முன் நின்றான். அவரிடம் தான் மகிழ்ச்சியாக இல்லை. அவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என கேட்டான். அதற்கு அந்த முனிவர் அந்தப் பணக்காரன் அணிந்து வந்த அனைத்து நகைகளையும் கேட்டார். அவனும் அவ்வாறே விலை உயர்ந்த மாலைகளையும் நகைகளையும் கழற்றி முனிவரிடம் கொடுத்ததும், அதை வாங்கிக்கொண்ட முனிவர் ஓட்டம் பி்டித்தார். திகைத்துப்போன அவன், அவர்பின்னால் ஓட அவரும் பல இடங்களில் ஓடி பின் மறைந்தார். அவனால் முனிவரை தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியாமல் அந்த முனிவர் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்ததும், ஒரே ஆச்சர்யம்....ஆம் அந்த முனிவர் அதே இடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார். அவரின் எதிரே அவனது நகைகள் மூட்டையாக அப்படியே இருந்தது,. அவற்றைக் கண்டதும் அவன் அதைக்கையில் எடுத்துப் பார்த்த போது எல்லாம் சரியாக இருந்தது. அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனுக்கு தலை கால் புரியாமல் சந்தோஷத்தில் மேலும் கீழும் குதித்தான். அதைக்கண்ட அந்த முனிவர் கண்திறந்து நகைகள் கிடைத்ததும் மகிழ்ச்சி கிடைத்தது அல்லவா? எனக் கேட்டதும் அவன் அந்த முனிவரின் காலில் விழந்து சரணாகதி ஆனான். அப்போது முனிவர், உனக்கு வலி என்பது என்ன என்று தெரிந்தால் தான், சுகம் தெரியும். துக்கம் தெரிந்தால் தான், மகிழ்ச்சி தெரியும் என்று புத்திமதி கூறி அனுப்பிவைத்தார். (நெத்தி அடி அல்லவா?)

துன்பம் வரும் வேளையி்லே சிரியுங்கள் என்றார் நம் வள்ளுவர். ஆகவே துக்கம், சந்தோஷம் என்ற இரண்டையும் ஒன்றாக பாவிக்க கற்றுக்கொள்ளவேண்டும். இன்பம் வரும்போது துள்ளவும் கூடாது. துன்பம் வந்த போது துவண்டுவிழவும் கூடாது. முதல் முடிவு, இரவு பகல், இன்பம் துன்பம், நல்லது கெட்டது, வாழ்வு தாழ்வு, உறவு பிரி்வு, துயர் சுகம, பிறப்பு இறப்பு, இப்படி எல்லாமே மாறிமாறித்தான் நம் வாழ்வில் வரும். இதையாரும் மறுப்பதிற்கில்லை. இதுதான் நியதி.

மற்றவர்களை மகிழ்வித்து பார்த்தால், நாமும் மகிழ்ச்சியடைவோம். பிறருக்கு கொடுத்துப்பாருங்கள் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மலர்கள் எவ்வாறு நறுமணத்தை எல்லோருக்கும் கேட்காமலே கொடுத்து மகிழ்கிறது. அந்த மலர்களைப் போல், நாமும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். நம் வாழ்க்கையே நமக்கு கிடைத்த உயர்ந்த பரிசாகும். ஆகவே எது நடந்தாலும் நாம் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொண்டு, சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். நாமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மற்றவர்களையும் மகிழ்ச்சி கடலில் தள்ளவேண்டும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியே வாழ்வின் இலட்சியம் என்பதை உணர்த்தவேண்டும். மகிழ்ச்சியாக வாழ்பவன் புனிதமானவன. மகிழ்ச்சியாக இருப்பவனின் இடம் புனித இடமாகிறது. எனவே, மகிழ்ச்சியாக வாழ்பவரிடம் நட்பு கொள்ளுங்கள்... அன்பு செலுத்துங்கள்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்..... வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற பாடல் வரிகளில் எத்தனை அர்த்தங்கள். எனவே, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப்பழகிக் கொள்ளுங்கள். நீ்ங்கள் இருக்கும் இடத்தையும் எப்போது ஒரு புனித இடமாக மாற்றும் சக்தி உங்களிடம் தான் இருக்கிறது என்றால் உங்களுக்கு பெருமகிழ்ச்சி தானே? LIFE IS CELEBRATION, BE HAPPY.


HAPPY இன்று முதல் HAPPY. மகிழ்ச்சியாக வாழு...வாழவிடு

கடவுளிடம் பேசக் கற்றுக்கொள்வோமா?”

கடவுளிடம் பேசக் கற்றுக்கொள்வோமா?”
“முடியும் என்கிறார்” சுவாமி கிரியாநந்தா
PORUR RAMKI

“நம் வாழ்நாளில் இன்றைய தினம் தான் முதல் நாள்” என எந்த நாளையும், இனிய நாளாக நினைத்து நமது காரியத்தை துவங்கவேண்டும். FORGET THE PAST. முடிந்த நாட்களையும், சம்பவங்களையும் நினைத்து நினைத்து நம்மில் பலர் எந்த காரியத்தையும் சாதிக்கமுடியாமல் இருப்பதை காண்கிறோம். “நான்” மற்றும் “என்னால் தான் இது முடியும்” என்று கர்வம் கொள்ளக்கூடாது.

“நமது செயலின் பயனை கடவுளிடம் அர்ப்பணிக்க வேண்டும்” என்கிறது பகவத் கீதை. நமது தவறுகளை கடவுளிடம் கூறும் போது நிச்சயம் நாம் ஆசிர்வதிக்கப்படுகிறோம். எல்லாம் நன்மைக்கே........

கடவுள் உங்களுக்குள்ளே இருப்பதாக நினையுங்கள். எதை செய்தாலும், அவர் உங்களுடன் இருந்து செய்கிறார் என்று எண்ணுங்கள். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கடவுளிடம் பகிர்ந்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள். பெரிய லாரியின் ஒலி கேட்கிறதா...குயிலின் குரல் ஒலிக்கிறதா...........இவை அனைத்தையும் கடவுள் இருந்து இசைப்பதாக கருதுங்கள். கொஞசம் சொஞ்சமாக அனைத்திலும் இறைவன் இருப்பதாக நாம் நினைக்க பழகிக்கொள்ளவேண்டும். வீண் வதந்திகளில் ஆர்வம் காட்ட வேண்டாம். தர்மகாரியங்களில் ஈடுபட்டு எப்போதும், அமைதியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். நாம் முதலில் திருந்தி, சத்தியத்தின் பாதையில் பயணம் செய்யவே கடவுள் நம்மை படைத்து உள்ளார் என உணரவேண்டும். நாம் எங்கு, எந்த நிலையில் இருந்தாலும் நமது மனமும் செயலும் கடவுளைச் சார்ந்து இருக்க வேண்டும.

நம்மிடம் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்து பெற மற்றவர்கள் வரும்போது ஒதுங்காதீர்கள். “நான் சாமியார் இல்லை”.. “உங்களை ஆசிர்வதிக்கவோ அல்லது வாழ்த்தவோ எனக்கு எந்த தகுதியோ, சக்தியோ இல்லை” என்று அலட்டிக் கொள்ளக்கூடாது. நாம் மற்றவர்களை எப்போதும் வாழ்த்த வேண்டும்...ஆசிர்வதிக்க வேண்டும்.

“நான் ரொம்ப சிறியவன்” ..”ரொம்ப சிறியவள்” என்று நம்மை நாமே சிறுமைப் படுத்திக்கொள்ளக்கூடாது, அனைவராலும் சேவைசெய்ய முடியும்.....அன்பு செலுத்தமுடியும்....கடவுள் உங்களுக்குள் இருக்கிறான் என்று நினைக்கப் பழகிக்கொண்டால், நீங்கள் அந்த “வெள்ளை தேவதைகள்” போல வாழலாம்.

பார்ப்பவர்களை எல்லாம், கருணையோடு ஆசிர்வதியுங்கள்.. நம்மைச்சுற்றி எத்தனையோ சோகமாக முகங்கள் உள்ளன,, உற்சாகம் இன்றி தவிக்கும் பலரை நாம் காணும் போது, அவர்களை நம் புன்முறுவலுடன், அனபு செலுத்தி, பாசம் செலுத்தி ஊக்கப்படுத்தலாமே? பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் என்பது எவ்வளவு உண்மை.

தினமும் கடவுளை நினைக்க ஐந்து நிமிடங்களாவது ஒதுக்குங்கள். உங்களது உணர்வுகளையும், சிந்தனைகளையும் கடவுளிடம் மனம் திறந்து பகி்ர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு பழகிக்கொண்டால் ஒருசில நாட்களில், கடவுளிடம் நாம் நேரடியாக பேசுவது போன்ற உணர்வுக்கு ஆளாவோம்.

கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவன். எதிலும் இருப்பவன்....அவனுக்கு பல குரல்கள், முகங்கள் உண்டு... நம்மைக் கொண்டு பல நல்ல காரியங்கள் நடக்கவைப்பவன் அவன் ஒருவனே....கடவுளுக்கு என்னவேண்டும்? .நமக்குள்ளே இருந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும், சந்தோஷமாக... பயன் உள்ளதாக... மற்றவர்களுக்கு பயன் உடையதாக கழிக்கவிரும்புகிறான்...அந்த சந்தர்ப்பத்தையாவது முதலில் அவனுக்கு அளியுங்கள். பிறகு என்ன TODAY IS THE FIRST DAY OF THE REST OF YOUR LIFE!!!. Joy…..ENJOY…”என்” JOY LIFE!!
= ராம்கி
எழுத்தாளர் ஆகவேண்டுமா?
PORUR RAMKI

நாம் நிறைய பத்திரிக்கைகளைப் படிக்கிறோம், அவ்வப்போது அட இது நான் நேற்று சொன்ன ஜோக் போல இருக்கே....இந்த சமையல் குறிப்பு எனக்கு முன்னாடியே தெரியுமே..அடடே நாம் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கலாமே என்ற உச் கொட்டிவிட்டு அதுபற்றி மறந்துவிடுகிறோம்,

நீ்ங்களும் எழுத்தாளர் ஆகலாம் இப்படி?

முதலில் எந்த இதழில் எழுதவேண்டும் என்று முடிவு செய்து அந்த இதழ்கள் இரண்டு மூன்றை எடுத்து முழுவதுமாக அலச வேண்டும், எந்த மாதிரியான துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், ஜோக்குகள், எந்த மாதிரியான சமையல் குறிப்புகளை அந்த பத்திரிகை முன்உரிமை கொடு்க்கிறது என்று தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு வெள்ளைத்தாளில் மிகத்தெளிவாக இடம் விட்டு இடம் விட்டு நீ்ங்கள் எழுதவேண்டிதை எழுதவேண்டும், சமையல் குறிப்பு என்றால் அந்த தலைப்பை மேலே பெரிதாக எழுதவும் (அதுபோன்று உறையின் வெளியிலும் விலாசம் எழுதும்போது இவற்றையும் தெளிவாக எழுதினால் அது சம்பந்தப்பட்ட நபருக்கு கிடைக்கும்). தாளில் ஒருபுறம் மட்டுமே எழுதவேண்டும்.

சின்னச்சின்ன குறிப்புகளை சாதாரண போ்ஸ்ட் கார்டில் கூட எழுதிப்போடலாம், மாத இதழ்களுக்கு செய்தி அனுப்பவதாக இருந்தால் முதல் பத்து தேதிக்குள் அனுப்பவேண்டும். நீங்கள் அனுப்பும் துணுக்கு பற்றிய புகைப்படம் இருந்தால் அதையும் இணைத்து அனுப்பலாம்.

குறிப்பு = அதிக வாயப்பு உள்ளவை / சமையல் குறிப்பு போன்றவற்றை பெண்கள் இதழுக்கு அனுப்பலாம், தினமலர் வார இதழுக்கு ஜோக்குகள் அனுப்பலாம்,
JOKES
PORUR RAMKI

ஏன் இந்த படத்திலே கதாநாயகின் இடப்பை அடிக்கடி காட்டறாங்க?
அவுங்க இடைநிலை ஆசியரின்னு ரசிகர்களுக்கு புரியத்தான்



குடிபோதையில் தள்ளாடி வருபவரை காட்டி
இந்த ஆள் பெரிய குடிகாரன்
அப்போ கள் நெஞ்சக்காரன்னு சொல்லு



ஏன் உடம்பு முழுவதும் கட்டுபோட்டிருக்கு
எதிரிவீட்டு பெண்னை கட்டுடல் அழகியேனு கூப்பிட்டேன், பின்னி எடுத்துட்டா பின்னி


எப்போ உன் காதலனை கைகழுவினே?
உலக கைகள் கழுவும் நாள் அன்று


இறுதிவரை துணையிருப்பேன்னு சொன்ன உன் காதலன் என்ன சொன்னான்?
எந்த ஆண்டு இறுதிவரைனு கேட்கிறான்,

ஏன் இந்த மண்டபத்திலே எல்லோரும் மெழுகுவத்தியை வைச்சுகிட்டு நிக்கறாங்க
சம்பந்தி கரண்டு இல்லாத தாலே எல்லோருக்கம் இரண்டுஇரண்டு மெழுகுவத்தியை கொடுத்துட்டாராம்

காதல் வருவது எதுவரைன்ற பாட்டுமாதிரி ஒரு தற்போதய காலத்துக்கு ஏத்தாமாதிரி ஒரு பாட்டு எழுதுங்களேன்
பாடல் ஆசிரியர். மின்சாரத் தட்டுப்பாடு எதுவரை




ஏன் தலைவர் தன் திடீர்னு பிரின்டிங் பிர்ஸ் ஆரம்பிச்சிருக்கார்
தன் கட்சி லெட்ட்ர் பேடு கட்சினு எல்லோருக்கும் தெரியனுமாம்

ஏன் தலைவர் ரெயின்கோட்டு குடை எல்லாம் எடுத்துகிட்டு பார்லிமென்டுக்கு போறாரு
நேற்று எதிர்கட்சியினர் இன்று பார்லிமென்டில் புயலை உண்டாக்க போகிறோம்னு அறிக்கை விட்டிருக்காங்கலாம்

என் தலைவர் எல்லா டாக்டர்கிட்டேயும் போய்வந்துகிட்டு இருக்காறு
பணவீக்கத்தை எப்படி கட்டுபடுத்துவது என்று கேட்கத்தான்,


என் தலைவர் பணத்தை தட்டிதட்டி வாங்கறாறு
அது மணல் மாமுல்ல வாங்கிய பணமாச்சே


எப்பட கல்யாணம்
எல்லே கல்யாண வேலையையும் அவிட் சோர்சிங் முறையி்லே என் அம்மாகிட்டே விட்டுட்டேன்


யார் இவரு இவ்ளோ குழந்தைகளை பெத்துகிட்டு இருக்கார்
அவர் தான் இந்த ஏரியா ஜனரேட்டர் ஆப்ரேட்டர்

டாக்டர் தலைவரிடம்
மின்வெட்டுக்கெல்லாம் இங்கே மருத்துவம் கிடையாது தலைவரே

ஏன் இந்த அரசாங்கம் ரொம்ப மோசம்னு செல்றே
ஆறாவது சம்பள கமிஷன்னு பப்ளிக்கா சொல்லிகிட்டு இருக்காங்களே
நடராஜனும் நடிகர் வடிவேலுவும் சந்தித்தால்

கற்பனை:- ராம்கி

(ஒரு மாலைப் பொழுதில் மும்பை விமான நிலயத்தில் இருவரும் சந்திக்கிறார்கள்)

வடிவேலு: அட டாக்டர் சாரா எப்படி இருக்கீங்ககக, என் ராசா
நட்டி: நான் நல்லா இருக்கேன் வல்ஸ் . கிரேட்
வடிவேலு: ஆமா, எங்க தம்மாத்தூண்டு பெட்டிய எடுத்துகிட்டு கிளம்பிடீஹ
நட்டி: (ரஜினி ஸ்டைலில்) அமெரிக்கா
வடிவேலு: அமா, போனவாரம் தானே ஆங்காங்க்கு போய் வந்தா மாதிரி இருக்கு
நட்டி: போய் வந்தா மாதிரியா….. சத்தியமா போனேய்யா,,அதுக்கு முந்தய வாரம் உர்ஸ்பர்க் போனேன்
வடிவேலு: என்னது, என்னது, அதுக்கு முந்தய வாரம் உர்ஸ்பர்க் கா....
நட்டி: என்னய்யா இதுக்கே ஆடிபோயிட்டே.... அதுக்கு முந்தய வாரம் டர்க்கி போனேன்,,அதுக்கும் முன்னாடி வாரம் வயிநா
வடிவேலு: என்னங்க இது?? நாங்க என்னமோ டீக்கடைக்கு நாலுதபா போய்வந்தா மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீங்க
நட்டி: அட ஆமாயா இந்த வருஷம் அப்படித்தான் போய்வந்துகிட்டு இருக்கேன்
வடிவேலு: அப்போ நாடுநாடோ சுத்தரேன்னு சொல்லுங்க
நட்டி: நாடு நாடாவா, கண்டம் கண்டமா போய் வந்துகிட்டு இருக்கேய்யா
வடிவேலு:: அட என்னங்க சொல்றீங்க, எனக்கு தலைய சுத்துதே சாமி, என்ன வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலயே?
நட்டி: அட இல்லயா....கேட்ட உனக்கே தலையை சுத்துதுன்னா, பறந்து பறந்து போய் வர எனக்கு எப்படி இருக்கும் பாத்துக்கோ....
வடிவேலு:: அப்போ மும்பையிலே இருக்கிறதே இல்லயா?
நட்டி:: எவன் சொன்னது அப்பப்போ மும்பையிலே என் பேஷன்டை பார்த்துகிட்டுதானே இருக்கேன்
வடிவேலு:: அட என்னங்க சொல்றீங்க, எல்லா நாடுக்கும் வாராவாரம் கிளம்பிடறீங்க, வாயிலே நுழையாத நாட்டுக்கெல்லாம் போய்வந்துகிட்டு இருக்கீங்களே சாமி
நட்டி:: ஆமாய்யா
வடிவேலு: அதனாலதான் அந்த ராம்கி உலகம் சுற்றும் வாலிபர் யார்னு நான் கேட்டப்போ உங்க பேரை சொன்னாரா...அடடா இப்பதானே அவர் சொன்னது புரியுது இந்த முட்டாபயலுக்கு
நட்டி: அவருக்கு தெரியாமயா,,,
வடிவேலு:: ஆமாமா எப்பபாத்தாலும் இரண்டு பேரும் சத்தம் போடாமா கம்யூட்டர்லே மேட்டரை ரவுண்டுஸ் விட்டுகிட்டு இருக்கீங்களா??
(நட்டிக்கு எஸ் எம் எஸ் வருகிறது)
வடிவேலு:: (தலையை எட்டி பார்த்த வாரே) யார்கிட்டேந்து எஸ்எம்எஸ்ஸு....அடுத்த வாரம் வெளிநாட்டு்க்கு கீட்டுக்கு ஏதாவது,,,,
நட்டி:: அட ஆமாய்யா
வடிவேலு: ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரய்யா,, இவரு விடர டலயாக்கை கேட்க ஆள் இல்லையா,,, இப்பவே கண்ணை கட்டுதே சாமி அப்பப்பா என்னா நக்கலு, தாங்கமுடியலயே சாமி (மூச்சு வாங்குகிறார்)

நட்டி::: எங்கே போறீங்கன்னு கேக்கலயே
வடிவேலு:: அதைவேற நான் கேட்கனுமா..... ஜப்பானு கிப்பானு , ஜெர்மணி ஜெமினின்னு எதையாச்சம் சொல்லி எங்களை கவுப்பீங்க,,,
நட்டி:: அட அதலாம் இல்லய்யா
வடிவேலு: அப்ப ஹி ஹி ,,ஐய்யோ ஐய்யோ,,,, அப்ப லோக்கல்லே தானே அடுத்து போகப்போறீங்க....
நட்டி:: கீழ் லோக்கல் இல்லே, மேல் லோக்கல்
வடிவேலு:: என்னாது மேல் லோக்கல்னா,,, சொல்றதை சொஞ்சம் விவரமா சொல்றதுதுதுது....
நட்டி:: ஆமாய்யா, நாடு நாடா...கண்டம் கண்டமா போயிட்டு போர் அடிச்சிடுச்சு…..அடுத்த நான் டிக்கெட் போட்டிருப்பது (என்று மேலே கையை காட்டுகிறார்)
வடிவேலு: அட என்னங்க நீ்ங்க அறிஞர் அண்ணா மாதரி, எம்ஜியார் மாதிரி என்னமோ மேலே கையை காட்டீறீங்க, ஒன்னுமே புரியலயே,, ஆத்தா, என்ன பெத்த ஆத்....தா
நட்டி:: யோவ் மேலே என்னா தெரியுது?
வடிவேலு: அங்கிட்டு காக்கா தெரியுது, அப்பால வானம் தெரியுது
நட்டி:: அதுக்கும் மேல
வடிவேலு:: அதுக்கும் மேலயா? என்னா தெரியுதுதுதுதுதுது,,?,
நட்டி:: ஆம்மாய்யா வானத்திலே என்ன தெரியுது, நல்லா கண்ணை தொரந்துபாரு.....
வடிவேலு: என்னங்க குழப்பறீங்க, வானத்திலே இப்ப சந்திரன் தான் தெரியுது, அதுக்க என்ன இப்போ?
நட்டி:: அட அங்கத்தாய்யா அடுத்து வாரம் போகப்போறேன்
வடிவேலு: ஐயா ஐயா,,, என்னய்யா சொல்றீங்க.....நிசமாத்தா சொல்றீங்களா,,,,,ராசா என் ராசா ம்..... நீங்க போவீங்க நீங்க போவீங்கய்யா, உங்க மச்சம் அப்படி

(யப்பா,...யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே என்றவாரே வடிவேலு தலைசுற்றி கீழே சாய, தன் பெட்டியோடு, நட்டி “உலகம் பிறந்தது எனக்காக…:” என்று பாடிக்கொண்டே “ஜல்சாரிக்கா” கண்டத்துக்கு “பஜன்ஜெட்” விமானத்தில் கால் வைக்க, விமானம் மேல் எழும்பும் சப்தத்தில் வடிவேலு துண்டைகானோம் துணியை கானோம் என்று தலைதெரிக்க அங்கும் இங்கும் ஓடி வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து “கிளம்பிடுச்சுப்பா.....கிளப்பிடுச்சு” என்றவாரே “புர் புர்…..அப்பா கிருகிருன்னு மேலே சுத்தி்கிட்டே இருக்காய்யா இந்த அளு” என்று தலை சாய்கிறார் மயக்கத்தில்),

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள= ராம்கி

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தனன்ம்பி்க்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்டமுடியும்.

ஆடை
உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பலவாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சுழ்நிலைக்கு எற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அனை எளிதில் கிழியாது, பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கைகை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

வேக நடை
அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்துவிடமுடியும், சற்று வேகமான நடையை பார்த்துமே எதிரே இருப்பருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்து நிலை
எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும், தோள்களை தொங்கியபடியே வந்தால் அவரால் தனனம்பி்க்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பர் எண்ணிவிடுவர்,. நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல்இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும், பார்ப்பவருகும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிர்ப்பது நல்லது.

கேட்பது
கேளுங்க கேளுங்க நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சைஅடிக்கடி கேட்கவும், 30=60 நொடிக்குள் உங்களது லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன்நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள், அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப்பார்க்கவும்.

நன்றி
உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள் அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடவை விஷயங்கள் நடந்து உள்ளது என்பது தெரியும், இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.
= ராம்கி
கண்ணீரும் சுகமே
போரூர் ராம்கி

சிரித்தாலும் கண்ணீர் வரும், அழுதாலும் கண்ணீர் வரும் என்பது நம் அனைவருக்கம் தெரிந்தது தான். சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல் என்றும் மாறிமாறி நம் வாழ்க்கையில வரும். எப்போதும் சந்தோஷமா இருக்க முடியாது
அது போன்று எப்போதும் துக்கமாகவும் இருக்க முடியாது
இருளுக்குபின் வெளிச்சம், புயலுக்கு பின் அமைதி என்பது நான் உலக நியதி, துன்பம் வந்த வேளையில் அது கண்டு கலங்கி வருந்தாதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் விவைவிப்பார் என்து வள்ளுவன்வாக்கன்றோ???

கோடான கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காதது தாயின் பாசம். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் போது. முதல் மரியாதையை நம்மைப்பெற்ற அன்னைக்கு கொடுத்துள்ளார்கள் போலும். எத்தனையோ பாடல்கள் அன்னையைப் பற்றி வந்தபோதில் இப்பாடலை கேட்டும்போது கண்ணீர் சிந்தாதவர் மனிதர் இல்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடிதொழ மறுப்பவன் மனிதன் இல்லை

கணவன் மனைவியின் உறவு ஒரு புனிதமான உறவு. எத்தனை சந்தோஷம் எத்தனை துக்கம் வாழ்வில். இருவராக இருக்கம் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது தான். வயதான போது குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பு மட்டும் தான்.
அந்த அன்பு கிடைக்காத போது ஒரு தம்பதியரின் மனம் என்ன பாடுபடும் என்பதை சித்தரிக்கும் இப்பாடல் நம் கண்களை நிச்சயம் குளமாக்கும் என்பதில் சந்தேகம் உண்டோ?

உன் கண்ணில் நீர்வழிந்தால் =(வியட்நாம் வீடு)





சம்சார சாகரத்தில் சிக்கி தவிக்கும் போதும், பணம் இன்றி குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத நிலை வரும்போது
ஏற்படும் தவிப்பு யாருக்கும் வரக்கூடாது, வாழ்வில் எப்போதும் வெளிச்சமாகவே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் ஆண்டவன் விடுவானா. காலச்சக்கரம் சுழலம் போதும் சில காலம் காரிருளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது நம்மால் அவ்வளவு எளிதாக தப்பவா முடியவும், இப்பாடலை கேட்கும் போது விழும் கண்ணீர் துளிகளை யார் துடைப்பார்கள்.....?

காற்றினி்லே வெறும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும் =(துலாபாரம்)


அண்ணன்/தங்கை பாசம், இதனை வார்த்தைகளால் விவரிகக முடியாது, அனுபவித்தால் தான் தெரியும், இன்று ஒரு குழந்தையோடு வளரும் பி்ஞ்சுகளுக்கு எங்கே தெரியப்போகிறது அந்த பாசத்தைப்பற்றி, எத்தனை வயதான அண்ணன் தங்கையானாலும், பேசினாலும் பேசாவிட்டாலும், சந்தித்தாலும், சந்திக்க முடியாது தொலைவில் இருந்தாலும் அண்ணண் தங்கையின் பாசத்தை யாராலும அணைபோட்டுத் தடுக்க முடியாது, இந்த பாடலை கேட்டு உங்கள் கண்களில் கண்ணீர் வற்றிப்போகும் என்பதை யாராலும் மறுக்க முடியுமோ? அனணகட்டி தடுக்க முடியுமோ?

மலர்ந்தும் மலராத =(பாசமலர்)


ஒருவர் இருக்கும் போது தெரியாத அருமை, ஒருவர் மறைந்தபோது தெரியும். ஐயகோ அந்நாரது அன்புயை அடைய இப்போது வழியில்லையே, முடியவில்லையே என தவிக்கும் இரண்டு இதயங்களின் சோக தீதம் நம் கண்களையும் கடலாக்கிவி்டுகிறது என்பதை மறுக்க முடியுமோ?
அவள் பறந்து போனாளே
என்ன மறந்து போனாளே....


காதலியை காணமுடியாத போது ஒரு சோகம், அருகில் இருந்து விடைபெறும் போதும் ஒரு சோகம், அவளது குரலை கேட்கமுடியாத போது ஒரு சோகம். சோகத்தில் இத்தனை விதங்களா? என்னே சோகம், தன் காதலி மற்ற ஒருவனுக்கு கண் எதிரிலே மாலையிடும் போது நம் உள்ளம் அழுமே அதை யாராலும் காணமுடியுமோ?

உன்னை நினைச்சேன் பாட்டூப்படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே


எதுவுமே மனிதன் கையில் இல்லை, நமக்கும் மேல் ஒருவன் இருக்கின்றான், அவன் ஆட்டுவிப்பது போல் நாம் ஆடவேண்டியது, வா என இருகரன் நீட்டி அழைக்கும் போதும் அவன் கைகோர்த்து செல்லவேண்டியது தான். இங்கே கடவுளிடம் ஒருவன் கேட்பது என்ன தெரியுமா? பணமோ பொருளோ அல்ல....இன்னும் நன்மை செய்து, துன்பம் கேட்கின்றான் இவன். இவன் நல்லவனா கெட்டவனா???..அமைதியாக இந்த பாடலை உள்வாங்கிப்பாரும்.....அந்த கீதை புகழ் கண்ணன் சொல்வது கொஞ்சமாவது புரியும்,,,,,

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும்என்று
கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதன்என்று
=(அவன் ஒரு சரித்திரம்)

விதியை வெல்லமுடியமா? எல்லாம் முன்னமே எழுதப்பட்டுவிட்டது. வருவதை எதிர்கொள்வதுதான் நமது கடமை,
இங்கே அப்படி ஒரு நல்ல உள்ளத்தில் மீது அம்பு எரியப்படுகிறது, அந்த அம்பே, அன்பாக மாறி மாலையாக உறுவெடுத்து அவன் இருக்கும் இடத்திற்கே கண்ணனை யாரால் வரவைக்கமுடியும் என்றால் அந்த கர்ணனை தவிற வேறு யாரால் முடியும்??
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது
வள்ளவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
=(கர்ணன்)

மயில் இறகில் வீசுவது போன்ற மெல்லிய குரலாலும் பாடி அழவைக்க முடியுமா என்பது பலரது சந்தேகம்,
எத்தனையோ பாடகர்கள் இபபாடலை பாடும் போது பாடலோடு ஒன்றிப்போய் மேடையிலே அழுதுவிடுவதுண்டு, அந்த அளவிற்கு சோகத்தை அழுத்தி, அமுத்தி இப்பாடலுக்கு உயிர் கொடுத்தாளர் ஒரு ஞானி, பொங்கிவரும் அழுகையை கொஞ்சம் அடக்கித்தான் பாருங்களேன் அது முடியாது......

தென்பான்டி சீமையில்
தேரோடும் வீதியில்,,யார் அடிச்சாரோ,, (நாயகன்)


சோகம் என்பது ஒரு குறிப்பிட்டவரின் சொத்து அல்ல, கீழ்மட்டத்திலருந்து மேல் மட்டம் வரை கண்ணீர் சொந்தம் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கும். உயிரை பணயம் வைத்து கடல் வாழ் மீனை பிடிக்க சென்றவனுக்கு வானத்தில் மேற்பார்வையி்டும் சந்திரனை தவிற வேறு யாரால் துணைபோகமுடியும், பெண்களை மட்டுமல்ல நம்மையும் கண்ணீரில் மிதக்க வைக்கும் வாலியின் வலிய இப்பாடலை கேட்க உங்கள் இதய வாசலை சற்றே திறந்து வையுங்களேன்

கடல் மேல் பிறக்கவைத்தான்
பெண்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்
=(படகோட்டி)

பேசமுடியாத தருணத்தில் நமது மனதை காட்டும் கண்ணாடியாகிவிடும் சக்தி இந்த கண்ணீருக்கு மட்டும் தான் உண்டு. பிறக்கும் போதும் அழுகை, உயிரை, விடப்போகும் போதும் தவிப்பு ஒரு அழுகை. உயிரை விட்டபோதும் ஒரு அழுமை, இப்படி சதா அழுதுகொண்டு இருந்தால் நாம் சிரிப்பது எப்போது என்று நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சோக கீதம் தான் இப்பாடல்.....
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய் (சந்திரபாபு பாடியது)



ஒருவன் இறந்த போது அவனை அடக்கம் செய்ய உறவினரும், நண்பர்கள் நாலு பேர் இருந்தால் தான் அமைதியாக மேலே செல்லமுடியும், கொள்ளி போடக்கூட கொடுத்து வைக்கவில்லேயே என எத்தனையோ பேர் தவிப்பதை காண்கின்றோம், கேட்கின்றோம். அந்த காலகட்டத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நமமைததூக்கிச்செல்லும் அந்த நாலுபேருக்கு நன்றியை மௌனத்தினால் சொல்வது தான் முதல் மரியாதை

அந்த நாலுபேருக்கு நன்றி
ஆள் இல்லாத அனாதைக்கெல்லாம
தோள் கொடுத்து துக்கிச்செல்லும்
அந்த நாலுபேருக்கு நன்றி

இப்படி சோக கீதத்தை கேட்டபின் எப்படி உங்களது மனது லேசாகி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதல்லவா?,. இனி என்ன கண்ணீர் தான்....ஐ மீன் ஆனந்த கண்ணீர்தானே, கண்ணீரும் ஒரு சுகம் தானே....