Friday, December 11, 2009

கண்ணீரும் சுகமே
போரூர் ராம்கி

சிரித்தாலும் கண்ணீர் வரும், அழுதாலும் கண்ணீர் வரும் என்பது நம் அனைவருக்கம் தெரிந்தது தான். சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல் என்றும் மாறிமாறி நம் வாழ்க்கையில வரும். எப்போதும் சந்தோஷமா இருக்க முடியாது
அது போன்று எப்போதும் துக்கமாகவும் இருக்க முடியாது
இருளுக்குபின் வெளிச்சம், புயலுக்கு பின் அமைதி என்பது நான் உலக நியதி, துன்பம் வந்த வேளையில் அது கண்டு கலங்கி வருந்தாதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் விவைவிப்பார் என்து வள்ளுவன்வாக்கன்றோ???

கோடான கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காதது தாயின் பாசம். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் போது. முதல் மரியாதையை நம்மைப்பெற்ற அன்னைக்கு கொடுத்துள்ளார்கள் போலும். எத்தனையோ பாடல்கள் அன்னையைப் பற்றி வந்தபோதில் இப்பாடலை கேட்டும்போது கண்ணீர் சிந்தாதவர் மனிதர் இல்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடிதொழ மறுப்பவன் மனிதன் இல்லை

கணவன் மனைவியின் உறவு ஒரு புனிதமான உறவு. எத்தனை சந்தோஷம் எத்தனை துக்கம் வாழ்வில். இருவராக இருக்கம் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது தான். வயதான போது குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பு மட்டும் தான்.
அந்த அன்பு கிடைக்காத போது ஒரு தம்பதியரின் மனம் என்ன பாடுபடும் என்பதை சித்தரிக்கும் இப்பாடல் நம் கண்களை நிச்சயம் குளமாக்கும் என்பதில் சந்தேகம் உண்டோ?

உன் கண்ணில் நீர்வழிந்தால் =(வியட்நாம் வீடு)





சம்சார சாகரத்தில் சிக்கி தவிக்கும் போதும், பணம் இன்றி குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத நிலை வரும்போது
ஏற்படும் தவிப்பு யாருக்கும் வரக்கூடாது, வாழ்வில் எப்போதும் வெளிச்சமாகவே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் ஆண்டவன் விடுவானா. காலச்சக்கரம் சுழலம் போதும் சில காலம் காரிருளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது நம்மால் அவ்வளவு எளிதாக தப்பவா முடியவும், இப்பாடலை கேட்கும் போது விழும் கண்ணீர் துளிகளை யார் துடைப்பார்கள்.....?

காற்றினி்லே வெறும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும் =(துலாபாரம்)


அண்ணன்/தங்கை பாசம், இதனை வார்த்தைகளால் விவரிகக முடியாது, அனுபவித்தால் தான் தெரியும், இன்று ஒரு குழந்தையோடு வளரும் பி்ஞ்சுகளுக்கு எங்கே தெரியப்போகிறது அந்த பாசத்தைப்பற்றி, எத்தனை வயதான அண்ணன் தங்கையானாலும், பேசினாலும் பேசாவிட்டாலும், சந்தித்தாலும், சந்திக்க முடியாது தொலைவில் இருந்தாலும் அண்ணண் தங்கையின் பாசத்தை யாராலும அணைபோட்டுத் தடுக்க முடியாது, இந்த பாடலை கேட்டு உங்கள் கண்களில் கண்ணீர் வற்றிப்போகும் என்பதை யாராலும் மறுக்க முடியுமோ? அனணகட்டி தடுக்க முடியுமோ?

மலர்ந்தும் மலராத =(பாசமலர்)


ஒருவர் இருக்கும் போது தெரியாத அருமை, ஒருவர் மறைந்தபோது தெரியும். ஐயகோ அந்நாரது அன்புயை அடைய இப்போது வழியில்லையே, முடியவில்லையே என தவிக்கும் இரண்டு இதயங்களின் சோக தீதம் நம் கண்களையும் கடலாக்கிவி்டுகிறது என்பதை மறுக்க முடியுமோ?
அவள் பறந்து போனாளே
என்ன மறந்து போனாளே....


காதலியை காணமுடியாத போது ஒரு சோகம், அருகில் இருந்து விடைபெறும் போதும் ஒரு சோகம், அவளது குரலை கேட்கமுடியாத போது ஒரு சோகம். சோகத்தில் இத்தனை விதங்களா? என்னே சோகம், தன் காதலி மற்ற ஒருவனுக்கு கண் எதிரிலே மாலையிடும் போது நம் உள்ளம் அழுமே அதை யாராலும் காணமுடியுமோ?

உன்னை நினைச்சேன் பாட்டூப்படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே


எதுவுமே மனிதன் கையில் இல்லை, நமக்கும் மேல் ஒருவன் இருக்கின்றான், அவன் ஆட்டுவிப்பது போல் நாம் ஆடவேண்டியது, வா என இருகரன் நீட்டி அழைக்கும் போதும் அவன் கைகோர்த்து செல்லவேண்டியது தான். இங்கே கடவுளிடம் ஒருவன் கேட்பது என்ன தெரியுமா? பணமோ பொருளோ அல்ல....இன்னும் நன்மை செய்து, துன்பம் கேட்கின்றான் இவன். இவன் நல்லவனா கெட்டவனா???..அமைதியாக இந்த பாடலை உள்வாங்கிப்பாரும்.....அந்த கீதை புகழ் கண்ணன் சொல்வது கொஞ்சமாவது புரியும்,,,,,

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும்என்று
கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதன்என்று
=(அவன் ஒரு சரித்திரம்)

விதியை வெல்லமுடியமா? எல்லாம் முன்னமே எழுதப்பட்டுவிட்டது. வருவதை எதிர்கொள்வதுதான் நமது கடமை,
இங்கே அப்படி ஒரு நல்ல உள்ளத்தில் மீது அம்பு எரியப்படுகிறது, அந்த அம்பே, அன்பாக மாறி மாலையாக உறுவெடுத்து அவன் இருக்கும் இடத்திற்கே கண்ணனை யாரால் வரவைக்கமுடியும் என்றால் அந்த கர்ணனை தவிற வேறு யாரால் முடியும்??
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது
வள்ளவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
=(கர்ணன்)

மயில் இறகில் வீசுவது போன்ற மெல்லிய குரலாலும் பாடி அழவைக்க முடியுமா என்பது பலரது சந்தேகம்,
எத்தனையோ பாடகர்கள் இபபாடலை பாடும் போது பாடலோடு ஒன்றிப்போய் மேடையிலே அழுதுவிடுவதுண்டு, அந்த அளவிற்கு சோகத்தை அழுத்தி, அமுத்தி இப்பாடலுக்கு உயிர் கொடுத்தாளர் ஒரு ஞானி, பொங்கிவரும் அழுகையை கொஞ்சம் அடக்கித்தான் பாருங்களேன் அது முடியாது......

தென்பான்டி சீமையில்
தேரோடும் வீதியில்,,யார் அடிச்சாரோ,, (நாயகன்)


சோகம் என்பது ஒரு குறிப்பிட்டவரின் சொத்து அல்ல, கீழ்மட்டத்திலருந்து மேல் மட்டம் வரை கண்ணீர் சொந்தம் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கும். உயிரை பணயம் வைத்து கடல் வாழ் மீனை பிடிக்க சென்றவனுக்கு வானத்தில் மேற்பார்வையி்டும் சந்திரனை தவிற வேறு யாரால் துணைபோகமுடியும், பெண்களை மட்டுமல்ல நம்மையும் கண்ணீரில் மிதக்க வைக்கும் வாலியின் வலிய இப்பாடலை கேட்க உங்கள் இதய வாசலை சற்றே திறந்து வையுங்களேன்

கடல் மேல் பிறக்கவைத்தான்
பெண்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்
=(படகோட்டி)

பேசமுடியாத தருணத்தில் நமது மனதை காட்டும் கண்ணாடியாகிவிடும் சக்தி இந்த கண்ணீருக்கு மட்டும் தான் உண்டு. பிறக்கும் போதும் அழுகை, உயிரை, விடப்போகும் போதும் தவிப்பு ஒரு அழுகை. உயிரை விட்டபோதும் ஒரு அழுமை, இப்படி சதா அழுதுகொண்டு இருந்தால் நாம் சிரிப்பது எப்போது என்று நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சோக கீதம் தான் இப்பாடல்.....
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய் (சந்திரபாபு பாடியது)



ஒருவன் இறந்த போது அவனை அடக்கம் செய்ய உறவினரும், நண்பர்கள் நாலு பேர் இருந்தால் தான் அமைதியாக மேலே செல்லமுடியும், கொள்ளி போடக்கூட கொடுத்து வைக்கவில்லேயே என எத்தனையோ பேர் தவிப்பதை காண்கின்றோம், கேட்கின்றோம். அந்த காலகட்டத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நமமைததூக்கிச்செல்லும் அந்த நாலுபேருக்கு நன்றியை மௌனத்தினால் சொல்வது தான் முதல் மரியாதை

அந்த நாலுபேருக்கு நன்றி
ஆள் இல்லாத அனாதைக்கெல்லாம
தோள் கொடுத்து துக்கிச்செல்லும்
அந்த நாலுபேருக்கு நன்றி

இப்படி சோக கீதத்தை கேட்டபின் எப்படி உங்களது மனது லேசாகி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதல்லவா?,. இனி என்ன கண்ணீர் தான்....ஐ மீன் ஆனந்த கண்ணீர்தானே, கண்ணீரும் ஒரு சுகம் தானே....

No comments:

Post a Comment