LIFE IS CELEBRATION, BE HAPPY
PORUR ராம்கி
நாம் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். அப்படி நினைப்பது மனித இயற்கை. மகிழ்ச்சியாக இருக்க நாம் முதலில் நல்ல உடல் நலத்துடன் இருக்கவேண்டும். ஆனால் உலகமே மாயைபோல் உள்ளது, நிறைய பணம் மட்டும் கையில் இருந்துவிட்டால் அனைவராலும் மகிழ்ச்சியாக வாழமுடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும் தானே?
மகிழ்ச்சியாக இருப்பவன் யார் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்பவன் அல்ல என்கிறார் ஒரு ஞானி. துக்க நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பவனே உண்மையான மகிழ்ச்சியானவன். மகிழ்ச்சிக்கு எந்த தடைகற்களும் இல்லை. நம்மை நாமே எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். மகிழ்ச்சியில் இரண்டு வகை உண்டு, வெளியில் மகிழ்ச்சியை தேடுவது. மற்றொன்று நம் மனதி்ல் மகிழ்ச்சியை
தேடுவது, சாதாரண மனிதன் புற மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றான்.
இதோ ஒரு குட்டி கதை, ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். மகிழ்ச்சியாக இருக்க விரும்பினான், பலபேரைக் கேட்டான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று... பலர் ஒரு காட்டில் உள்ள ஒரு முனிவருக்கு கையைகாட்டிவிட்டார்கள். அடர்ந்த காட்டில் அந்த முனிவரை தேடி அலைந்து ஒருவழியாக அவரை கண்டுபிடித்தான். தன்
குதிரையை மரத்தில் கட்டிவிட்டு, ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்த முனிவர் முன் நின்றான். அவரிடம் தான் மகிழ்ச்சியாக இல்லை. அவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என கேட்டான். அதற்கு அந்த முனிவர் அந்தப் பணக்காரன் அணிந்து வந்த அனைத்து நகைகளையும் கேட்டார். அவனும் அவ்வாறே விலை உயர்ந்த மாலைகளையும் நகைகளையும் கழற்றி முனிவரிடம் கொடுத்ததும், அதை வாங்கிக்கொண்ட முனிவர் ஓட்டம் பி்டித்தார். திகைத்துப்போன அவன், அவர்பின்னால் ஓட அவரும் பல இடங்களில் ஓடி பின் மறைந்தார். அவனால் முனிவரை தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியாமல் அந்த முனிவர் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்ததும், ஒரே ஆச்சர்யம்....ஆம் அந்த முனிவர் அதே இடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார். அவரின் எதிரே அவனது நகைகள் மூட்டையாக அப்படியே இருந்தது,. அவற்றைக் கண்டதும் அவன் அதைக்கையில் எடுத்துப் பார்த்த போது எல்லாம் சரியாக இருந்தது. அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனுக்கு தலை கால் புரியாமல் சந்தோஷத்தில் மேலும் கீழும் குதித்தான். அதைக்கண்ட அந்த முனிவர் கண்திறந்து நகைகள் கிடைத்ததும் மகிழ்ச்சி கிடைத்தது அல்லவா? எனக் கேட்டதும் அவன் அந்த முனிவரின் காலில் விழந்து சரணாகதி ஆனான். அப்போது முனிவர், உனக்கு வலி என்பது என்ன என்று தெரிந்தால் தான், சுகம் தெரியும். துக்கம் தெரிந்தால் தான், மகிழ்ச்சி தெரியும் என்று புத்திமதி கூறி அனுப்பிவைத்தார். (நெத்தி அடி அல்லவா?)
துன்பம் வரும் வேளையி்லே சிரியுங்கள் என்றார் நம் வள்ளுவர். ஆகவே துக்கம், சந்தோஷம் என்ற இரண்டையும் ஒன்றாக பாவிக்க கற்றுக்கொள்ளவேண்டும். இன்பம் வரும்போது துள்ளவும் கூடாது. துன்பம் வந்த போது துவண்டுவிழவும் கூடாது. முதல் முடிவு, இரவு பகல், இன்பம் துன்பம், நல்லது கெட்டது, வாழ்வு தாழ்வு, உறவு பிரி்வு, துயர் சுகம, பிறப்பு இறப்பு, இப்படி எல்லாமே மாறிமாறித்தான் நம் வாழ்வில் வரும். இதையாரும் மறுப்பதிற்கில்லை. இதுதான் நியதி.
மற்றவர்களை மகிழ்வித்து பார்த்தால், நாமும் மகிழ்ச்சியடைவோம். பிறருக்கு கொடுத்துப்பாருங்கள் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மலர்கள் எவ்வாறு நறுமணத்தை எல்லோருக்கும் கேட்காமலே கொடுத்து மகிழ்கிறது. அந்த மலர்களைப் போல், நாமும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். நம் வாழ்க்கையே நமக்கு கிடைத்த உயர்ந்த பரிசாகும். ஆகவே எது நடந்தாலும் நாம் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொண்டு, சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். நாமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மற்றவர்களையும் மகிழ்ச்சி கடலில் தள்ளவேண்டும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியே வாழ்வின் இலட்சியம் என்பதை உணர்த்தவேண்டும். மகிழ்ச்சியாக வாழ்பவன் புனிதமானவன. மகிழ்ச்சியாக இருப்பவனின் இடம் புனித இடமாகிறது. எனவே, மகிழ்ச்சியாக வாழ்பவரிடம் நட்பு கொள்ளுங்கள்... அன்பு செலுத்துங்கள்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்..... வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற பாடல் வரிகளில் எத்தனை அர்த்தங்கள். எனவே, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப்பழகிக் கொள்ளுங்கள். நீ்ங்கள் இருக்கும் இடத்தையும் எப்போது ஒரு புனித இடமாக மாற்றும் சக்தி உங்களிடம் தான் இருக்கிறது என்றால் உங்களுக்கு பெருமகிழ்ச்சி தானே? LIFE IS CELEBRATION, BE HAPPY.
HAPPY இன்று முதல் HAPPY. மகிழ்ச்சியாக வாழு...வாழவிடு
No comments:
Post a Comment