Friday, December 11, 2009

கடவுளிடம் பேசக் கற்றுக்கொள்வோமா?”

கடவுளிடம் பேசக் கற்றுக்கொள்வோமா?”
“முடியும் என்கிறார்” சுவாமி கிரியாநந்தா
PORUR RAMKI

“நம் வாழ்நாளில் இன்றைய தினம் தான் முதல் நாள்” என எந்த நாளையும், இனிய நாளாக நினைத்து நமது காரியத்தை துவங்கவேண்டும். FORGET THE PAST. முடிந்த நாட்களையும், சம்பவங்களையும் நினைத்து நினைத்து நம்மில் பலர் எந்த காரியத்தையும் சாதிக்கமுடியாமல் இருப்பதை காண்கிறோம். “நான்” மற்றும் “என்னால் தான் இது முடியும்” என்று கர்வம் கொள்ளக்கூடாது.

“நமது செயலின் பயனை கடவுளிடம் அர்ப்பணிக்க வேண்டும்” என்கிறது பகவத் கீதை. நமது தவறுகளை கடவுளிடம் கூறும் போது நிச்சயம் நாம் ஆசிர்வதிக்கப்படுகிறோம். எல்லாம் நன்மைக்கே........

கடவுள் உங்களுக்குள்ளே இருப்பதாக நினையுங்கள். எதை செய்தாலும், அவர் உங்களுடன் இருந்து செய்கிறார் என்று எண்ணுங்கள். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கடவுளிடம் பகிர்ந்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள். பெரிய லாரியின் ஒலி கேட்கிறதா...குயிலின் குரல் ஒலிக்கிறதா...........இவை அனைத்தையும் கடவுள் இருந்து இசைப்பதாக கருதுங்கள். கொஞசம் சொஞ்சமாக அனைத்திலும் இறைவன் இருப்பதாக நாம் நினைக்க பழகிக்கொள்ளவேண்டும். வீண் வதந்திகளில் ஆர்வம் காட்ட வேண்டாம். தர்மகாரியங்களில் ஈடுபட்டு எப்போதும், அமைதியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். நாம் முதலில் திருந்தி, சத்தியத்தின் பாதையில் பயணம் செய்யவே கடவுள் நம்மை படைத்து உள்ளார் என உணரவேண்டும். நாம் எங்கு, எந்த நிலையில் இருந்தாலும் நமது மனமும் செயலும் கடவுளைச் சார்ந்து இருக்க வேண்டும.

நம்மிடம் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்து பெற மற்றவர்கள் வரும்போது ஒதுங்காதீர்கள். “நான் சாமியார் இல்லை”.. “உங்களை ஆசிர்வதிக்கவோ அல்லது வாழ்த்தவோ எனக்கு எந்த தகுதியோ, சக்தியோ இல்லை” என்று அலட்டிக் கொள்ளக்கூடாது. நாம் மற்றவர்களை எப்போதும் வாழ்த்த வேண்டும்...ஆசிர்வதிக்க வேண்டும்.

“நான் ரொம்ப சிறியவன்” ..”ரொம்ப சிறியவள்” என்று நம்மை நாமே சிறுமைப் படுத்திக்கொள்ளக்கூடாது, அனைவராலும் சேவைசெய்ய முடியும்.....அன்பு செலுத்தமுடியும்....கடவுள் உங்களுக்குள் இருக்கிறான் என்று நினைக்கப் பழகிக்கொண்டால், நீங்கள் அந்த “வெள்ளை தேவதைகள்” போல வாழலாம்.

பார்ப்பவர்களை எல்லாம், கருணையோடு ஆசிர்வதியுங்கள்.. நம்மைச்சுற்றி எத்தனையோ சோகமாக முகங்கள் உள்ளன,, உற்சாகம் இன்றி தவிக்கும் பலரை நாம் காணும் போது, அவர்களை நம் புன்முறுவலுடன், அனபு செலுத்தி, பாசம் செலுத்தி ஊக்கப்படுத்தலாமே? பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் என்பது எவ்வளவு உண்மை.

தினமும் கடவுளை நினைக்க ஐந்து நிமிடங்களாவது ஒதுக்குங்கள். உங்களது உணர்வுகளையும், சிந்தனைகளையும் கடவுளிடம் மனம் திறந்து பகி்ர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு பழகிக்கொண்டால் ஒருசில நாட்களில், கடவுளிடம் நாம் நேரடியாக பேசுவது போன்ற உணர்வுக்கு ஆளாவோம்.

கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவன். எதிலும் இருப்பவன்....அவனுக்கு பல குரல்கள், முகங்கள் உண்டு... நம்மைக் கொண்டு பல நல்ல காரியங்கள் நடக்கவைப்பவன் அவன் ஒருவனே....கடவுளுக்கு என்னவேண்டும்? .நமக்குள்ளே இருந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும், சந்தோஷமாக... பயன் உள்ளதாக... மற்றவர்களுக்கு பயன் உடையதாக கழிக்கவிரும்புகிறான்...அந்த சந்தர்ப்பத்தையாவது முதலில் அவனுக்கு அளியுங்கள். பிறகு என்ன TODAY IS THE FIRST DAY OF THE REST OF YOUR LIFE!!!. Joy…..ENJOY…”என்” JOY LIFE!!
= ராம்கி

No comments:

Post a Comment