K.R.RAMAKRISHNAN (RAMKI/Kumar)-Executive Coordinator - AIOS. CHANDAMAMA, DOLTON PUBLICATIONS குரூப்பில் 16 வருட அனுபவம். Written 300+ articles, interviews, shortstories, titbits, jokes etc. Organized National Conferences, Events, Functions, Press meets & active in PR activities. Mem: Kerala Cartoon Academy, Indian Penpals League. M: 9790684708. : wadalaramki@yahoo.co.in. Residing at Porur; working at Coimbatore The Eye Foundation
Thursday, December 24, 2009
அந்த 7 வார்த்தைகள் - வெற்றிக்கு ரகசியம்
அந்த 7 வார்த்தைகள்
1870ம் ஆண்டுகளில் நியூ ஜெர்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பலமுறை தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தபோதிலும் தோல்வி அடைந்தன அவரது முயற்சிகள். அப்போது அவரது தோல்வி பற்றி ஊரே பேசியது. 500 விதமான முயற்சிகளிலும் அவர் தோல்வியை தழுவினார். அப்போது ஒரு பத்திரிகையாளர், இத்தனை முறை தோல்வி கண்ட பிறகும், ஏன் இந்த ஆராய்ச்சி, பேசாமல் விட்டுவிடவேண்டியதுதானே? என எடிசனிடம் கேட்டார். அப்படி இல்லையம்மா..நான் 500 முறை தோற்கவில்லை. மாறாக 500 மாற்று வழிகளை கண்டுபிடித்தேன் ஆனால் அது பயன் அளிக்கவில்லை. ஆனால் விரைவில் வெற்றிபெறுவேன் என்று நம்பிக்கையோடு பதில் அளித்தார். அவரது நம்பிக்கை 1879ம் ஆண்டு பெற்றிபெற்று முதன்முதலில் மின்சார விளக்கை அமைத்து பின் உலகையே ஒளிமயமாக்கினார். அவர் மறையும்போது 1024 வித பேட்டன்கள் அவரது பெயரில் இருந்தது, மேலும் ஜென்ரல் எலெக்ட்ரிக் கம்பெனியும் உதயமானது. அவர் உலகைமட்டும் ஒளிமயமாக்கவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பது போல் தோல்விகளே வெற்றியின் படிகற்கள் என்று நமக்கு ஒரு படிப்பினை தந்ததை மறுக்க இயலுமா?
நாம் தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது. தோல்விகள் நமக்கு வாழ்வில் பல படிப்பினை சொல்லாமல் சொல்லித்தருகிறது. நாம் நமது இலக்கில் வெற்றிபெற வேண்டுமானால், தோல்விகள் இரட்டிப்பாக இருக்கவேண்டும், யாரையும் குறைசொல்லி பயன்இல்லை. உங்களது திறமையில் சந்தேகம் அடையவேண்டாம். செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. மீண்டும் நமது இலக்கில் கவனம் வைத்து முன்னேற வேண்டியதுதான்.
சிலசமயம் ஒருகாரியத்தில் இறங்கிவிட்டு நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையெனில் அப்படியே விட்டுவிடுகிறோம். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் நமது இலக்கை கட்டயம் எட்டியிருப்போம், உங்களது வெற்றி இன்னும் ஒரு கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது என யாரும் சொல்லமாட்டாகள். எத்தனையோ பேர் வெற்றி அருகில் வரும் சமயத்தில் நமக்கு கிடைக்காது என்று விட்டுவிடுகிறார்கள்.
ஒரு மரத்தை உடைக்க கோடாரியால் ஒருமுறை வெட்டினால் இரண்டாக பிளந்துவிடுமா? பலமுறை வெட்டிபிறகுதான் மரத்தில் ஒரு சிறிய கீரலே தெரியும், பிறகு மீண்டும் பலமுறை கொத்திய பின்பே மரம் இரண்டாக பிளக்கும். மரம் பிளந்த்து அந்த சிறய கீரலால் அல்ல..முன்பு பலமுறை கோடாரியால் உடைத்ததால், அது போல் தான் வெற்றியும்.
நம் குழந்தைகள் முதன்முதலில் நடக்க முற்படும்போது பலமுறை கீழே விழுந்து, விழுந்து எழுந்து பிறகு தான் நடக்க ஆரம்பிப்பார்கள். கீழே விழுவதை பற்றி குழந்தைகள் கலைப்படாமல் பல முறை மீண்டும், மீண்டும் முயற்சிசெய்வார்கள் விடாமுயற்சியோடு. குழந்தைகள் பெரியவர்கள்போன்று ஒரு சில முறைமட்டும் நடக்க முயற்சிசெய்துவிட்டு பிறகு விட்டுவிட்டால் அவர்களால் நடந்திருக்க முடியுமா என்று நாம் யோசிக்கவேண்டும்.
பெரியவர்களான நாம் அந்த பாடத்தை மறந்துவிட்டோம். நாம் முதல் அடி எடுத்தவைக்கவே பயப்படுகிறோம். காரணம் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ, எழமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சம். முதல் முயற்சியில் நாம் தோல்விகண்டால் அப்படி துவண்டுவிடுகிறோம். சர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் சில குழந்தைகள் அவரின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்கள். அவர் சொன்ன அந்த 7 வார்த்தை “NEVER GIVE UP, NEVER, NEVER GIVE UP!”
மேலும் ஒரு ஆங்கில பதம் உண்டு, அது WINNERS NEVER QUIT. AND QUITTERS NEVER WIN.
பல முறை தோல்வி அடைந்தாலும் நமது இலக்கிலிருந்து மனதை திசைதிருப்பக்கூடாது. தொலைவிலோ, அருகிலோ தொடந்து முயன்றால் வெற்றிக்கனி நிச்சம் நம் கையில். வாழ்த்துக்கள்.
ராம்கி
Subscribe to:
Post Comments (Atom)
Dear Kumar Anna
ReplyDeletei have gone thru the article of 7 words, it was a great article which motivates all of us to attain their goals..... we all seeing how a baby learns walking after overcomings all the hurdles, as parent we all wathcing the "live shows" during the real "treasure hunt" in life we all forget and start worrying without moving forward for attaing goals.... thanks forthe great artilcle it motivates me further for attaining goals without giving up....
regards
prasad