Saturday, December 12, 2009

மனித நேயத்திற்கு மறுபெயர் திரு கருண்


மனித நேயத்திற்கு மறுபெயர் திரு கருண்

PORUR ராம்கி


எனக்கு மும்பையில் கடந்த ஆறு வருடங்களாக டாக்டர் நடராஜன் (தலைவர், ஆதித்ய ஜோத் கண் மருத்துவ மனை) அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு மாதங்களில் ஒரு நாள் டாக்டர் நடராஜன் என்னை அவரது அறைக்கு அழைத்தார். அப்போது அவருக்கு எதிரே அமைதியாக உட்கார்ந்திருந்த ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். “சார், இவர் தான் திரு கருண். எனது நல்ல நண்பர். இவர் தான் அவ்வப்போது நமக்கு இந்தியன பேனாநண்பர் பேரவை அழைப்பிதழ்கள் மற்றும் சுற்றரிக்கைகள் அனுப்புபவர், இவரை பிடிச்சுக்கோங்க” என்று அறிமுகப்பத்தினார். நான் திரு. கருண் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி கை கொடுத்தேன். உடனே தன் பேக்கட்டிலிருந்து தனது விசிட்டிங்கார்டை எனக்கு கொடுத்து உரிமையுடன் “எப்ப வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்க ராம்கி...இனி நான் டாக்டரை தொந்தரவு செய்யவேண்டியிருக்காது,. நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்” என்று கூறியவர் எனது குடும்பத்தைப்பற்றியும், தங்கி இருக்கம் இடம் பற்றியும் நலம் விசாரித்தார். இது தான் எங்கள் முதல் சந்திப்பு. பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆவோம் என்று எங்களுக்கு அப்போது தெரியாது.

முன்பு இவரிடம் இருந்து அழைப்பிதழ்கள் வரும் போது, டாக்டர் என்னிடம் கொடுத்து பாருங்க சார்..இந்த அழைப்பிதழ்லே எவ்வளவு தமிழ்காரங்க பேர் போட்டு இருக்கு....எப்படித்தான் கருண்ரவரு பெரிய பெரிய நிகழ்ச்சிகளை அடிக்கடி செய்கிறோரே என்று சொல்லி, “முடிந்தா இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்க என் சார்பா போயிட்டு வாங்கசார்” என்றது நினைவுக்கு வந்தது .”ஓ... அந்த கருண் இவர்தானா?” என்ற ஆச்சரியப்பட்டேன்.

பிறகு திரு கருண் அவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்காமல் செல்ல மாட்டார். ஒவ்வொருமுறை வரும் போது ஒரு சிலர் அவரோடு இருப்பர். அவர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைப்பார். ஒருமுறை மும்பை பத்திரிக்கை நண்பர்களோடு வருவார். அடுத்து முறை ஏதாவது தமிழ் மன்ற தலைவருடன் வருவார். இப்படி யாராவது ஒரு விஐபி அவருடன் இருப்பர்.

இலவச கண் சிகிச்சை முகாம் அடிக்கடி ஏற்பாடு செய்வதில் வல்லவர் திரு கருண் அவர்கள். அது சம்பந்தமான மருந்துகளை இலவசமாக பெறவும். அதன் ஏற்பாடு விஷயமாகவும் என்னிடம் கலந்து ஆலோசனை செய்வார், அதுமட்டுமின்றி இந்த முகாமுக்கு “ராம்கி நீ்ங்க கட்டயாம் வரவேண்டும்.. மதிய உணவு எங்களுடன் சாப்பிட வேண்டும்” என்று அன்போடு அழைப்பார். தொடர்ந்து இது போன்று இலவச முகாம்களை மும்பையில் ஏற்பாடு செய்து, எம்ஜிஆர் போன்று பலதரப்பட்ட மக்களின் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவர் திரு கருண் அவர்கள்,

ஒரு முறை என்னை சந்திக்க வந்தவுடன் இங்கு பக்கத்தில் சில பள்ளிகுழந்தைகள் தங்க ஏதுவாக இடம் கிடைக்குமா...வெளியூரிலிருந்து மும்பைக்கு வராங்க... என்றார்,. பேசிக்கொண்டு இருக்கும் போதே பத்து பதினைந்து பேருக்கு போன் செய்து குழந்தைகள் தங்க ஏற்பாது செய்வது, அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது போன்றவற்றில் முழுகவனம் செலுத்துவதை கண்டு நான் ஆச்சரியப்பட்டதுண்டு. “நாளைக்கு பாக்கலாம் ராம்கி, நான் இப்போ கிளம்பினாதான் அங்கே போய் அந்நாரை சந்தித்து குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யமுடியும்” என்று சொல்லிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் பறந்துவிடுவார் திரு, கருண் அவர்கள்,

எதிலும் முழுமூச்சுடன் செயல்படுவார். ஒரு முறை டாக்டர் நடராஜன் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான குஷி விருது கிடைத்ததும், நாங்கள் இருவரும் டாக்டருக்கு ஒரு பாராட்டு விழா இந்திய பேனாநண்பர் பேரவை மூலம் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு அப்போதைய மகாராஷ்ட்ரா கவர்னர் திரு எஸ் எம் கிருஷ்ணா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். மேலும் திரு த. சிவானந்தன் ஐபிஎஸ் மற்றும் பல விஐபிக்கள் கலந்து கொண்டனர். விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இவ்விழா ஏற்பாடுகளை நாங்கள் இருவரும்முன் நின்று, மண்டபம் ஏற்பாடு செய்வது முதல், இரவு விருந்து வரை நேரே பலரை சந்தித்து ஒரு குறையும் இல்லாமல் நிகழ்ச்சி சிறப்பாக வரவேண்டும் என்று கவனமாக செயல்பட்டோம். பேரவை நண்பர்கள் அடிக்கடி மேடையில் “திரு கருண்-திரு ராம்கி” பெயர் வருவதை கண்டு, “யார் இந்த ராம்கி?” என்று கேட்க ஆராம்பித்துவிட்டார்கள். டாக்டர் முதல் அவனவரும் எங்கள் இருவரின் ஏற்பாடுகளை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார்கள். இச்சம்பவத்திற்கு பின் “கருண்-ராம்கி” என்ற காம்பினேஷன் மும்பை எங்கும் பரவ ஆராம்பித்தது, இதற்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நிலைமாறி சகோதரர்கள் ஆகி் மும்பையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது போனில் பேச வேண்டும் என்று நிலைக்கு இருவரும் சகோதர பாசத்தில் திளைத்தோம்.

ஒருநாள் தன் வீட்டிற்கு அழைத்து எனக்காக தடபுடலான விருந்தினை கொடுத்தார் திரு கருண் அவர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு என்னை அறிமுகப்படுத்தி தன் கைகளாலேயே உணவு பரிமாறினார். எந்த விழாவானாலும் “ராம்கி நீங்க கட்டாயம் வந்திடனும். அந்த மீட்டிங்க இருக்கு. இங்க மீட்டிங் இருக்குனு வராம இருக்கக்கூடாது” என்பார். மும்பையில் இவர் சன் டிவிக்கு பட்டிமன்றம் ஏற்பாது செய்தபோது எனக்கு மறவாமல் அழைப்பிதழ் அனுப்பினார்,. நேரே சந்தித்தபோது அனைவருக்கும் என்னை அறிமுகப்படுத்தினார்.

திடீரென அலுவலகம் வருவார், “ராம்கி நாளை மருத்துவமுகாம் இருக்கு.... இந்த மருந்து இருந்தா நல்லா இருக்கும் உங்களுக்கு யார்யார் கிட்டே பழக்கம் இருக்கு அவர்களுக்கு போன் போட்டு உடனே கேளுங்க” என்று உரிமையோடு கேட்பார். அடுத்த முறை பார்க்கும் போது “ராம்கி இன்னும் நமது ஆண்டு மலரில் கடைசி பக்கம் விளம்பரம் புக் ஆகவில்லையே...கொஞ்சம் டாக்டர் கிட்ட பேசி முடிச்சு கொடுத்திடேங்கன்னா நல்லா இருக்கும்” என்பார். அவர் நினைப்பது நல்லபடியாக நடக்கும்.

பொது வாழ்வில் இவர் சமூக சேவைக்குத் தான் முதல் இடம் கொடுப்பார், மனைவி மக்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். வீட்டில் சாப்பிட இரவு 11 மணி்க்கு அழைப்பு வந்தாலும், “நீங்க எல்லோரும் சாப்பிடுங்க நான் மாராத்திய முரசு பத்திரிக்கை ஆபீ்ஸ்க்கு இப்போ போயிட்டு 1 மணி வந்துவிடுகிறேன்” என்பார்.

தன் உடல் நலம் பற்றி கவலைப்பட மாட்டார். சமூக சேவைதான் இவரது உயிர். ஒருமுறை வந்து போது முகம் சற்று வீங்கி இருந்தது. “என்ன சார் விஷயம்?” என்ற போது “ஒன்னும் இல்லே…சுகர் ரொம்ப தாஸ்தி ஆயிடுச்சு. டாக்டர் என்னை உடனே அட்மிட் ஆகவேண்டும்னு சொல்லி்ட்டாரு. நாளைக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருக்கேன்,. அதை எல்லாம் முடிச்சட்டுதான் அட்மிட் ஆகனும்” என்றார். இதை கேட்டு நானும் டாக்டர் நடராஜனும் அதிர்ச்சி அடைந்து “ஐயா மொதல்ல உங்க உடம்பை பார்த்துக்கோங்க சார்” என்று அன்பு கட்டடளையிட்ட பின்னும் சமூக சேவையில் தான் இவரது மனம் செல்வதை கண்டு வியந்ததுண்டு, அந்த அளவுக்கு பொது வாழ்வில் ஈடுபாடு இவருக்கு. ஒரு முறை நடிகர் விஜயகாந்த் மும்பை வந்தபோது விமானநிலையத்திலிருந்து அழைத்துவருவது முதல் அவர் செல்லும் வரை அவருடன் இருந்தார். என்னை கண்டதும் என்னை நடிகர் விஜயகாந்த்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மனித நேய மாமணி பட்டம் இவருக்கு மிகப் பொருத்தமான பட்டம், அதற்கு எற்ற சரியான நபர் என்பது என்னை போனறு அவருடன் நெருங்கி பழகினால் தான் தெரியும். ஒரு முறை நான் சென்னைக்கு கிளம்பு விமான நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன், அப்போது அவர் போன் வர “இப்ப நீங்க எங்கே இருக்கீங்க என்று கேட்டு ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கே நில்லுங்க. நான் இன்னும் 10 நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்றார். சொன்னது போல் கையில் என் மகனுக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக வழி அனுப்பினார். எப்போதும் கலகலப்பாக இருப்பார், ஜோக் அடித்துக்கொண்டு தன்னுடன் இருப்பரை சிரிக்கவைப்பவர், அதனால் இவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது எனக்கு. பழைய பாடல்கள் என்றால் எங்கள் இருவருக்கும் உயிர்.

மும்பையிலிருந்து கடைசியாக நான் கிளம்பும் நாள் அன்று என் இல்லத்திற்கு வந்து எனக்கு பிடித்த கலரில் சட்டைகள் மற்றும் நிறைய இனிப்பு காரவகைகள் கொடுத்து விமான நிலயம் வரை வந்து வழி அனுப்பிவைத்தார். இன்றும் போனில் பேசும் போது எனது மனைவி மகன் பற்றி அன்புடன் விசாரிப்பார். அந்த மனித நேய மாமணியுடன் பழகிய நாட்கள் என்றும் நெஞ்சில் பசுமையாக காட்சியளிக்கிறது மேலும், ஒரு சகோதரரை விட்டு பிறிந்து வந்துபோல் உள்ளது, அவரை சந்திக்கும் நாட்கள் என்றும் எனக்கு திருநாளே,....வாழ்க அவரது தன்னலமற்ற சேவை குணம்..வாழ்க அவரது மனித நேயம்........வாழ்க பல்லாண்டு.
விரைவில் பத்மஸ்ரீ பட்டம் பெற வாழ்த்தோம், அனைவரும் வாருங்கள் என்னுடன்.......

ராம்கி

No comments:

Post a Comment