Friday, December 11, 2009

செல்வமும் மாயையும்


செல்வமும் மாயையும்
PORUR RAMKI
‘பணம்’ என்ற மூன்றெழுத்து நம்மை என்னமாய் படுத்துகிறது. செல்வம் நமக்கு சுதந்திரத்தையும், எதுவும் நமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடச்செய்கிறது. ‘செல்வம் மட்டும் கையில் இருந்தால், நம்மால் எல்லாவற்றையும் சாதித்துவிடமுடியும்’ என்ற தைரியத்தை தருகிறது என்று நாம் நினைக்கிறோம்.

ஒன்றின் மீது நாம் சொந்தம் கொண்டாடும் போது ஆதி முதல் அந்தம் வரை அதன் மீது நமக்கு உரிமையுள்ளதாக நினைக்கிறோம். ஒரு நிலத்தை சொந்தமாக வாங்குகிறோம், ஆனால் அந்த நிலமானது அதன் சொந்தக்காரர் சென்றபிறகும் அங்கே தான் உள்ளது. அப்படி இருக்க எப்படி அந்த நிலம் நமக்கே எப்போதும் சொந்தம் என்று நினைக்கமுடியும்?

நிறைய செல்வம் இருந்துவிட்டால் நாம் தான் எல்லாம் என்றும்...பணத்தால் எனக்கு முழுசுதந்திரமும் உள்ளது என்று எண்ணி தலைகால் புரியாமல் பலர் ஆடுவதை காண்கிறோம். அவர் ஏதோ சுசந்ததிரஉலகத்தில் வாழ்வது போல துள்ளிகுதிப்பதை பார்க்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போல் விவசாயி, சமையல்காரன்,. கார் ஓட்டுனர், மற்ற வேலைகளை செய்ய எடுபிடி ஆள் என பலபேரை சார்ந்துதான் இருக்கவேண்டியுள்ளது என்பதை மறக்கக்கூடாது, பெரிய இருதய அறுவைசிகிச்சை செய்பவர்கள் கூட மற்ற மருத்துவர்களையும சக ஊழியர்ககளின் உதவியும் சார்ந்து தான் தன் பணியினை சரியாக வெற்றிகரமாக முடிக்கமுடிகிறது.

பெரும் செல்வந்தர்கள் ஏன அரகககுணமாக நடந்து கொள்கிறார்கள்? ‘செல்வத்தால் சுதந்திரமாக இருக்கிறோம்’ என்ற இருமாப்பால் தான். மற்றவர்களை சார்ந்துதான் நம்மால் எதையும் செய்யமுடியம் என்று நினைக்கும் பணக்காரர்கள், மற்றவர்களிடம் மிக பணிவாக அன்புடன் நடந்துகொள்வர், ஆகவே, அதிசெல்வத்தில் மிதப்பவர்கள் மனிதாப குணம இன்றி வாழகிறார்கள் என்பதை மறுக்கமுடியவில்லை.

இப்போதெல்லாம நாம் மனிதர்களை அவர்கள் வைத்திருக்கும் செல்வத்தை வைத்து எடைபோடுகிறோம்.. ‘அவர் இவ்வளவு மில்லியனுக்கு சொந்தக்காரர்’....’அவனின் மதிப்பு இப்போ இவ்வளவு டாலர்’ என்று பேசுவதை காண்கிறோம். பணத்தை கொண்டு மனிதனை, மனித வாழ்க்கையை எடைபோடலாமா? ‘பில்லினர்’ என்றும் ‘மில்லினர்’ என்று அழைப்பது ஒரு பெரிய பாராட்டாகாது, . ..........(தொடர்கிறது)

தன்னம்பிக்கையின்றி கடவுள் மீது நம்பிக்கையில்லாதவன் தான் ‘பாதுகாப்பு அற்றவன்’. அப்படி இருப்பனுக்கு செல்வம் ஒரு பாதுகாப்பு கவசமாகிறது, பெரும் பணக்காரர்கள் தன்னுடன் படைசுழ இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் மீதே சந்தேகம் வருகிறது,. அவர்களது நட்பு உண்மையான நட்பா என்று குழப்பம் உண்டாகிறது. சொந்தங்களையும் அவ்வாறே சநதேகிக்க வைக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்த பணம தங்களுக்கு ஒரு ‘மாய பாதுகாப்புதான்’ என்ற முடிவுக்கு வரவைத்துவிடுவதாக செல்வந்தர்கள் எண்ணுகிறார்கள.

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்கிறார் வள்ளுவர். அளவோடு செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை சுகமானதாக இருக்கம். ‘ஆசையே அழிவி்ற்கு காரணம்’ என்றார் புத்தர். ‘வாழ்வே மாயம்’ என்றார் சான்றோர், ஆகவே செல்வமும் ஒருவித மாயை தான். அனபு. பாசம், உண்மை, நேர்மை போன்றவிற்கு விலைமதிப்பே இல்லை என்பது நாம் அறிந்ததுதானே. பணத்தை விமர்சனம் செய்து உலகை பழிப்பவர்களும் உண்டு. சிலர் பணத்தை பேயாக பாவிப்பதுண்டு (அதனால் தான் அவன் ஒரு ‘பணப்பேய்’ என்கிறார்களோ?) சிலர் ‘காசேதான் கடவுள்’ என்பார்கள். முனிவர்கள் பணத்தையும், மாயைகளையும் மதிக்கமாட்டர்கள். காரணம் பணத்தை கடவுளாக போற்றினர். செல்வத்தை மகாலட்சுமியாக பாவித்தனர். பூஜித்தனர். யோகாவால் பிறந்தவள் அல்லவா அந்த ‘மகாலட்சுமி’. யோகாதான் நமது கெட்ட கர்மாக்களை அழித்து, நமக்கு வல்லமையும் திறமையையும் அளிக்கிறது. அதுவே நமக்கு அஷ்டசித்திகளையும், நவ நிதிகளையும் அளிக்கிறது.

அரக்ககுணத்திலிருந்து நம்மை விடுவித்து, தன்னம்பிக்கை தரும் குணம் அந்த யோகாவிற்கு உள்ளது. ‘நமக்கு மட்டும் சொந்தம்’ என்ற நினைப்பை மாற்றி, ‘அனைவருக்கம் சொந்தம்’ என்ற பரந்த மனப்பாண்பை வளர்க்கும் சக்தியும் யோகாவிற்கு உள்ளது என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள்.

No comments:

Post a Comment