Friday, December 11, 2009

தமிழ்வாணன் என்றும் இங்கே


தமிழ்வாணன் என்றும் இங்கே........
[திரு ரவிதமிழ்வாணன் சொன்ன இரகசியம்]

சில நாட்களுக்கு முன்பு கோவையில் திரு லேனா தமிழ்வாணனை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. நேற்று அவரது சகோதரர் திரு ரவிதமிழ்வாணன் கோவைக்கு ஒரு ரேடியோ நிகழ்சசியில் பஙகேற்க கோவைக்கு வந்திருந்தார். அவ்விழாவிற்கு அழைப்புவிடுத்தும் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை. இருப்பினும் இம்முறை எப்படியாவது அவரை சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலுடன் இரவு எட்டு மணிக்குமேல் கோவை ரயில் நிலையத்தில் சந்திக்க இருவரும் முடிவுசெய்தோம்.
இதற்கு முன்பு நான் அவரை சந்தித்ததுகிடையாது. எப்படி கண்டுபிடிப்பது என்பதை அவரே சென்னார். ராம்கி நான் நீலவண்ணத்தில் சட்டை மற்றும் வெள்ளைநிறத்தில் பேன்ட் அணிந்திருப்பேன், தலை வழுக்கையாக இருக்கும் என்று சர்வசாதாரணமாக போனில் சொன்னார்.
நேற்று டிசம்பர் 6ம் தேதி ஆகையால் ரயில் நிலையத்தில் ஏகப்பட்ட கெடுபிடி, மெட்டல் டிடக்டரில் அவர் நுழைவதற்கு முன்பு என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டு கையசைத்தார் ரவி தமிழ்வாணன்.
பாதுகாப்பு காரணமாக பிளாட்பாரத்திற்கு பயணிகளை தவிர மற்றவர்கள் அனுமதிகிடையாது. பிளாட்பாரம் டிக்கெட்டும் கொடுப்பதை நிறுத்திவைத்திருந்தனர். ஆகவே ஒரு இடத்தில் இருவரும் நலம் விசாரித்துக்கொண்டோம்.
அப்பா.... எத்தனை ஆண்டுகளாக நாம் சந்திக்கவேண்டும் என்று இருந்தோம். அந்த திருநாள் இன்று தான் போலும் என்றார்.
தன்னுடன் வந்திருந்த நண்பரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
வானதி பதிப்பகம் பற்றி சிறிதுநேரம் பேசினார். புத்தகம் எழுத சில ஆலோசனைகளை வழங்கினார். என் குடும்பத்தாரை பற்றி கேட்டார் என் மகன் படிக்கும் அதே கல்லுரியில் தான் அவரது மகனும் படிப்பதாகச்சொன்னபோது இருவரும் மிக மகிழ்தோம். இருவரும் ஒரே ஐடி துறை படிக்கிறார்கள் என்றது மகிழ்ச்சி இரட்டிப்பானதுஇருவருக்கும்.
எனது மகன் 12ம் வகுப்பில் எடுத்த மார்க்கைகேட்டார். சொன்னபோது, ராம்கி உங்க பையன் உங்களுக்கு ஆறு லட்ச ரூபாய் சேமித்துக் கொடுத்திருக்கிறான்,. சந்தோஷப்படுங்க என்ற மகிழச்சியில் மீண்டும் கைகுலுக்கினார்.

பத்திரிகை ரத்தம் உடலில் ஓடுவதால், சார் நீங்களோ உங்கள் சகோதரரோ உங்கள் தந்தையைபோல் தொப்பி அணிவதில்லையே ஏன் என்று கேட்டுவிட்டேன். லேனா எப்போதும் அப்பா தமிழ்வாணன் போன்று கறுப்பு கண்ணாடி அணிவார். அப்ப நீங்க என்றதும் எந்த ஒரு சலனத்தில் முகத்தில் காட்டாது மெல்ல தன்சட்டை முதல் மேல்பட்டனை கிழற்றினார். எதற்காக கேட்டதற்கு பதில் சொல்லாமல் சட்டை பட்டனை கிழற்றுகிறார் என்று யோசிப்பதற்குள் தன் அடுத்த பட்டனையும் கிழற்றி அனுமன் தன் மார்பை கிழித்து காட்டியது போன்று தன் மார்பை காட்டினார், ஒருநிமிடம் வாய் அடைத்துபோனேன்.... அவரது மார்பில் ஒரு பெரிய வட்டத்தினுள் அவரது தந்தையில் ஞாபகமாக அவரது தொப்பியும், கறுப்பு கண்ணாடியும் பச்சை குதத்தப்பட்டிருந்தது. என் தந்தையின் சின்னத்தை என் நெஞ்சிலேயே வைத்திருக்கேன் ராம்கி என்று மெய்சிலிர்க்க நான் அவரது கைகளை பலமாக குலுக்கினேன்.

கிளம்பும் முன் தன்னுடன் வந்த நண்பரிடம ராம்கி இமெயில் அனுப்புவதில் ரொம்ப பிராம்ட், உடனுக்குடன் பதில் எழுதிவிடுவார். அது எனக்கு பிடித்தது. நாளை காலையில் பாருங்க நான் அலுவலகம் செல்லும் போது ராம்கியின் இமெயில் தான் முதலில் இருக்கும், அதுவும் என்னை சந்தித்ததில் ரொம்ப மிகிழ்ச்சி என்று இருக்கும் என்று என்னை பாராட்டினார்.
கிளம்பும் முன் சார் ஒரு போட்டோ என்றதும் டக்கென தன் தலையை வாரிக்கொண்டு இன்முகத்துடன் போஸ் கொடுத்து பின்பு விடைகொடுத்தார். சென்னைக்கு அடுத்த முறை வரும்போது கட்டாயம் மணிமேகலை பிரசரத்தின் அலுவலகத்திற்கு வந்து என்னை சந்திக்கவும் என்று அழைப்பு விடுத்தார் திரு ரவி தமிழ்வாணன். பல ஆண்டுகாலம் சந்திக்க காத்திருந்த நண்பரை சந்தித்த மகிழ்ச்சியில் பஸ் படிக்க நான் மெல்ல நடக்க, மூழ்காத ஷிப்பே பிரன்ட்ஷிப் தான் என்ற பாடல் ஒரு டீக்கடையில் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தது,
PORUR Ramki

No comments:

Post a Comment