பாசமும், புகழும்
ஆர். சீதா
இரவு மணி பத்து. நிலவு ஒளியில் ஊரே அமைதியாக இருந்தது,. ஆட்டோவை விட்டு போரூர் ராம்கி மெல்ல நடந்து சந்திரன் எப்எம் வானொலி நிலையத்தின் உள்ளே நுழைகிறார். சார், உங்களைப் பார்ககத்தான் இந்த நடிகர் உட்கார்ந்திருக்கார். உங்களது பரம விசிறியாம். உங்களது நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் தினமும் கேட்பாராம். பேட்டி கொடுக்க வந்ததும் முதலில் இவர் உங்களைப்பற்றி விசாரித்தார், நீ்ங்கள் இரவு பத்து மணிக்குத் தான் வருவீர்கள் என்று சொன்னபிறகும் இரண்டு மணிநேரம் உங்களுக்காக காத்திருந்தார், என்று ஒரு சமஊழியர் அந்த நடிகரை ராம்கிக்கு அறிமுகம் செய்து வைத்தார், ராம்கி இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து, அந்த நடிகரின் கைகளை குலுக்கி, ரொம்ப சந்தோஷம் என்று மெல்ல புன்முறுவல் செய்தார். எனக்காக காத்திருந்தமைக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு மெல்ல அடிஎடுத்துவைக்க, சார் தினமும் இரவு உங்க நிகழ்ச்சியை ரேடியோவில் கேட்காம உறங்க மாட்டேன். உங்களது கவிதையும் அதற்கு ஏற்ப நீங்கள் போடும் பழைய சசினிமா பாட்டுக்களும் என் மனதிற்கு ரொம்ப நிம்மதி தருகிறது என்று அந்த நடிகர் அடிக்கிக்கொண்டே போக, ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம் என்ற மட்டுமே ராம்கி சொல்லி தன் அறையை நோக்கி நடந்தார். அங்கிருந்த ஊழியர்கள் என்ன இந்த ராம்கி எதுவுமே நடக்காத மாதிரி போறாறு, இந்த நடிகரை பார்போமான்னு ரசிகர்கள்கூட்டம் அலைஞசுகிட்டு இருக்கு என்னடா இந்த மனுஷன் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு தன் வேலையில் ஈடுபட்டார்கள். சரியாக இரவு பதினோரு மணிக்கு போரூர் ராம்கியின் அந்த நாள் என்ற நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் எப்போது பழைய பாடல்கள் ஒளிபரப்பப்படுவதால் ராம்கியின் கவிதையும் குரலும் தேனாக இனித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தைபிடித்துவிட்டது.
போரூர் ராம்கி பல ஆண்டுகளாக சந்திரன் வானெலியில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறார். இரவு நேர டூட்டியை கேட்டு வாங்கிக்கொண்டு தொடர்ந்து இரவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
மற்றொரு நாள் இசையமைப்பாளர் தேவா, சந்திரன் எப்எம் வானெலி நிலயத்திற்கு நுழைந்தும் அங்கு ஊழியகர்கள் அவரை சுற்றி நின்று கொண்டு மகிழ்ச்சியாக கைகுலுக்கினர். எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் தேவா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, இதுல போரூர் ராம்கி யாரு....அவரை பார்க்கலாம்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுக்க வந்தேன்...யார் அந்த ராம்கி என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஊழியர்கள் எல்லோரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க, நிலய நிர்வாகி சார் போரூர் ராம்கி தினமும் இரவு தான் வருவார், இப்போ அவரை நீங்க பார்க்க முடியாது சார் என்று மெல்ல சொல்ல, தேவாவின் முகம் மெல்ல வாடுகிறது. அவர் வந்தா நான் அவரை பார்க்க ரொம்ப ஆவலா வந்தேன்னு மறக்காம ராம்கிகிட்டே சொல்லுங்க, என்று பலரிடம் தேவா வேண்டுகோள் விடுத்து விடைபெற்றார்..
அன்று இரவு போருர் ராம்கி பத்து மணிக்கு வந்ததும் நிலைய அதிகாரி முதல் பலஊழியர்கள் ராம்கி சார் இன்னைக்கு தேவா நம்ப அலுவலகத்திற்கு வந்திந்தார் போரூர் ராம்கி யாரு,,,எங்கே அவரு, அவரை பார்த்தே ஆகனும்னு ரொம்ப ஆசைப்பட்டார். நீங்க அவரை மிஸ் பண்ணி்ட்டீங்க சார். அப்படியா, ரொம்ப சந்தோஷம் என்ற படி தன் அறைக்குள் நுழைந்து அன்றைய நிகழ்ச்சியில், என்னென்ன பாடல்கள் ஒலிபரப்பவேண்டும் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். நாம இவ்வளவு குஷியா சொல்றோம், ராம்கி எந்த உணர்ச்சியும் காட்டாம இவ்வளவு அடக்கமா இருக்காரே என்று தலைகால் புரியாமல் சகஊழியர்கள் குழம்பியது ராம்கிக்கு புரிந்தது.
அந்த வானெலி நிலயத்திற்கு எப்போதும் ராம்கியின் நிகழ்ச்சியையும், அவரது கவிதை திறனை பாராட்டியும் எகப்பட கடிதம் வரும். நிலைய இயக்குநர் அவற்றை படித்துவிட்டு ராம்கியின் பார்வைக்கு அனுப்புவார். ராம்கியும் எல்லாவற்றையும் விடாமல் படித்து புன்முறுவல் செய்துவிட்டு தன் காரியத்தில் ஈடுபட்டுவிடுவார். எல்லோரும் ஜாலியாக இருக்கும் போது ஏன் இந்த ராம்கி மட்டும் பட்டும் படாமல் சக ஊழியர்களுடன் பழகுகிறார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
மெல்ல அந்த நாள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் இவர்தான் என்று அவர் வாழும் போரூர் ஏரியாவில் தெரியவர பால்காரர் முதல் ஆட்டோ டிரைவர் வரை சார் நேத்து ராத்திரி போட்ட எல்லா பாட்டும் சுபபர் சார்... முந்தாநாள் போட்டயே அப்படியே அழுதுட்டேன் சார்... என்று பாராட்டும் போதெல்லாம் புழுபோல் மெல்ல நெளிவார். ரொம்ப சந்தோஷம் என்று தான் ராம்கியின் பதில் இருக்கும்.
காலையில் எப்போது போன் செயதாலும் ராம்கியின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருக்கும். அது எப்போது ஆன் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் ராம்கியுடன் போனில் பேசமுடியும்.
ஒரு மாதப் பத்திரிக்கையி்ல் ஆசிரியராக இருந்து ராம்கிக்கு பல ஆண்டுகளாக ரேடியோ அறிவிப்பாளராக வேண்டும் என்ற ஆசைமனதி்ல் இருந்தது. அவரது நண்பர் சங்கர் அவரது அடக்கத்தையும் கூச்சசுபாவத்தையும் பார்த்து பல தனியார் வானெலி நிலயத்திற்கு போன் செய்து ராம்கியை பற்றி எடுத்துக்கூறி வாய்ப்பு கேட்க, சந்திரன் வானொலி இயக்குநர் உடனே அவரை வரச்சொன்னார். அவரது குரலை கேட்டதுமே அந்த இயக்குநருக்கு பிடித்து போக இன்னைக்கு வந்திருக்கீங்க...ஒரு ஒருமணி நேர நிகழ்ச்சியை தொகுத்து கொடுக்க முடியுமா என்று கேட்க ரொம்ப சந்தோஷம் இப்பவே நான் தயார் என்று சொல்ல ஸ்கிரிப்ட் எழுதிக்கொள்ள வேண்டோமா என்ற கேட்க, தேவையில்லை சார் நேரடியாக பதிவு கூடத்திற்கு செல்லலாம் என்று தயாராகிவிட்டபோது இயக்குநருக்கு சற்று தயக்கமாக இருந்தது, ஒரு மணிநேரத்தில் இருபது கவிதைகளுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்துகொடுத்துவிட்டு ஒலிபதிவுக்கூடத்திலிருந்து வெளியே வந்தது, சார் ரொம்ப நல்ல நிகழ்ச்சி வந்திருக்கு, எந்தவிதமான முன் ஏற்பாடு செய்யாமல் நீங்கள் தங்கு தடையின்றி உங்கள் கவிதையை பாடலுக்கு ஏற்ப உடனுக்குடன் சொல்லியதைக் கண்டு நான் மிகவும் திகைத்துவிட்டேன். நாளையே நீங்கள் அறிவிப்பாளராக சேரலாம் என்று இயக்குநர் ராம்கியின் கையை பிடித்து குலுக்கியதும். ரொம்ப சந்தோஷம். அன்றிலிருந்து இவரது நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இரவே வேலையில் பழையபாடல்களை கேட்பது பலருக்கு சுகம் தரும் தாலாட்டாகும்.
ராம்கிக்கு சங்கரை தவிர நெருங்கிய நண்பர் அதிகம் இல்லை. சங்கரும் வேலைநிமித்தம் சென்னையைவிட்டு மும்பைக்கு சென்றுவிட்டதால் ராம்கி சங்கர் தொடர்பும் வெகு தொலைவில் இருந்தது. சங்கர் பல முறை சங்கரை தொடர்பு கொள்ள முயற்சித்தான். சங்கர் சென்னை வரும்போதெல்லாம் அருகில் மனைவி படுத்திருந்தாலும் காதருகே ராம்கியின் அந்த நாள் நிகழ்ச்சியை கேட்காமல் இருக்கமாட்டான், ஏய்,,சும்மா இரு நம்ப ராம்கி ரேடியோவில் புரோகிராம் கொடுத்துகிட்டு இருக்காரு பத்தநிமிடத்தில் முடிந்துவி்டும் என்று மனைவியின் கையை தட்டுவான் சங்கர். அந்த அளவுக்கு ராம்கியின் பரம விசிறி சங்கர்.
பல ஆண்டுகள் ஓடின. சங்கர் கம்யூட்டரில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது கூகுல் சர்ச்சில் போரூர் ராம்கி என்று நம்பிக்கையின்றி தட்டிவிட்டான், என்ன ஆச்சர்யம் அதில் போரூர் ராம்கியின் ப்ளாக் இருந்தது. அதில் ராம்கயின் பலவித கவிதைகள் இருந்தன. கட்டுரைகள் இருந்தன, எல்லாவற்றிற்கும் மேலாக ராம்கியின் செல்போன் எண்ணும் இமெயில் முகவரியும் இருந்தது. உடனே ராம்கியின் செல்போனுக்கு அழைத்தான். .எதிர்முனையில் ஓரிரு ரிங்க்கு பிறகு அலோ வணக்கம், நான் ராம்கி பேசுகிறேன் என்று குரல் ஒலிக்க சங்கரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....சார் நான் சங்கர் மும்பையிலிருந்து பேசகிறேன். எப்படி இருக்கீங்க என்று சந்தோஷத்தில் சங்கர் சொல்ல, ரொம்ப சந்தோஷம் சங்கர். நீங்க எப்படி இருக்கீங்க என்றார் ராம்கி. சார் என்னசார் என்னை மறந்துட்டீங்களா..நான் சென்னைக்கு எப்போ வந்தாலும் உங்க நிகழ்ச்சியை தவறாமல் கேட்பேன். பலமுறை உங்களிடம் பேசமுயற்சிசெய்தேன் பிடிக்க முடியலே, அலுவலுகத்தில் ஒருமுறை போன் செய்த போது நீங்க அன்றைக்கு விடுமுறைன்னு சொல்லி போனை வச்சிட்டாங்க...வீட்டுலே எப்படி இருக்காங்க மனைவி மற்றும் அம்மா எல்லலாம் என் மடைதிறந்து வெள்ளம் போல் சங்கர் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்த ராம்கி, மௌனம் கலைத்து என்ன ராம்கி நான் சொல்றது. நீங்க அறிமுகம் செய்து வைத்ததாலே, இன்னைக்கு நான் பெரிய அறிவிப்பாளாரக இருக்கேன். என் முகத்தை கூட பார்க்காமல் எனக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இருக்காங்க. கிராமத்திலே இருக்கிறவங்க வீட்டிலே கூட என் பெயர் அடிபடாம இருக்காது. அந்த அளவுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைச்சுறுக்கு. பணத்திற்கு தட்டுபாடு இல்லாம ஏதோ வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா என்று ராம்கி நிறுத்த, என்ன ஆனா,,சொல்ங்க ராம்கி சார்... என்ன ஆனா என்று சங்கர் பதட்டப்பட என் அம்மா தனியாத்தான் இருக்காங்க,. மேலும் வயதாகிவிட்டது.. கண்பார்வையும் இழந்துவிட்டார்கள். எழுந்து எந்த வேலையும் நம்மைப்போல செய்ய முடியாது. வேலைக்காரி வைச்சாலும் ஒத்து வரதில்லே. ஒரு நாள் கால்மீது கத்தியை போட்டீகிட்டு ரத்தம் கொட்டரது கூட அவுங்களுக்கு தெரியலே....அதனால நான் பகல் முழுவதும் அப்பப்ப வந்து அவுங்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறேன்...என்று சொல்லும் போது ராம்கியின் குரல் மெல்ல திக்குகிறது. அடப்பாவமே. உங்க மனைவியை பார்த்துக்கொள்ள சொல்லலாமே என்று சங்கர் இழுக்க, அவளாளையும் முடியாது ஏன்னா எங்களுக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்து பத்தே நாளில் இறந்துவிட்டது, அந்த அதிர்ச்சிலே என்று நிற்க. என்ன ஆச்சுசார் அவங்களுக்கு என்று சங்கர் பதற, அந்த அதிர்ச்சியிலிருந்து அவளும் புத்திசுவாதினம் ஆகிட்டா. அவளே இப்போ ஒரு குழந்தை மாதிரி ஆகிட்டா. எப்போ நல்லா இருப்பா எப்போ அவளுக்கு குழப்பம் வரும என்பது யாருக்குமே தெரியாது. பல டாக்டர்களை பார்த்தாச்சு. எந்த பயனும் இல்லே. அதனால தான் எப்போதும் இரவுநேரத்திலேயே வேலைக்கு போகிறேன்,. அதனால் பகல் நேரத்தில் ஒரு பக்கம் அம்மாவையும், ஒரு பக்கம் மனைவியையும் பார்த்துக்க முடியுது. நான் நன்றாக தூங்கி பல வருடங்கள் ஆகிறது என்று ராம்கி முடித்தார். முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு அப்பப்போ வந்துகிட்டு இருந்தீங்க...இப்ப வரதேயில்லை என்று சங்கர் சொல்ல ஆமாம் ராம்கி என் வீட்டுப்பிரச்சனையாலே எந்த தொடர்பு இல்லாம இருக்கேன் அதனால் தான் உங்களைகூட தொடர்பு கொள்ள முடியாம மனதளவில் ரொம்ப நொன்துபோயிட்டேன். உடல்ல முன்பு தெம்பு இருந்தது. இப்போ அப்படியில்லே. முன்புபோல் என் மனனைவியை வெளியே கூட்டிகிட்டுகூட போறதேயில்லை. வாசல்ல இருக்கிற பெட்டிக்கடைக்காரன் முதல் ஆட்டோஸ்டேன்ட் வரை இப்போ நான் யார் என்பதுதெரிந்துவிட்டது. என் மனைவியின் நிலமை வெளி உலகுக்கு தெரிஞசா எல்லாரும் என்னைப்பற்றி பின்னால நிறையபேசுவாங்க... என் புகழ் இப்போ குறுக்கு நிக்குது. முன்பு நான் எல்லோரையும் போல சாதாரண மனிதனாக இருந்தேன், சுதந்திரமா வெளியை நடமாடினேன், இப்போ எப்போவாவது வெளியை என் மனைவியை அழைஞ்ச்சுகிட்டு போனா ஒரு முகமூடியை போட்டுகிட்டு போறேன், இல்லைனா என்னை எல்லோரும் அடையாளம் கண்டுபிடிச்சு என் மேலே பரிதாபப் படஆரம்பிச்சிடுவாங்க...ஒரு சில சொந்தங்களும் ஏன் நீங்க இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாதுன்னு என்னிடமே கேட்கிறாங்க.. என் நிலமையை எப்படி யார்கிட்ட சொல்றது. இன்னும் ஒருவிஷயம் என் மனைவி தன் அண்ணனுக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்துவிட்டதாலே ஒரு கிட்னியை தானம் செஞ்ச்சுட்டாங்க என்று சொல்ல, சங்கர் பதில் எதுவும் சொல்லமுடியாமல் அமைதியாக ராம்கியின் நிலையை நினைத்து அழுதுகொண்டு இருந்தான், அடுத்த முறை சென்னைவரும் போது நாம கட்டாயம் சந்திப்போம், ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி போனை வைத்தார் போரூர் ராம்கி. அப்போது உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு..மயக்கமா கலக்கமா என்ற பாடல் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்து.
No comments:
Post a Comment