Saturday, December 12, 2009

மலரும் நினைவுகள் டாக்டர் நடராஜன் அவர்களுடன்

அந்த நாளும் வந்திடாதோ டாக்டர் நடராஜன் அவர்களுடன்
PORUR RAMKI

மும்மையைவிட்டு வந்து ஒரு வருடம் நிறைய போகிறது என்பதை நினைக்கும் போது நாட்கள் எத்தனை வேகமாக ஓடுகிறது என நினைக்க துண்டுகிறது.

மாலையில் வீட்டுக்கு சென்றதும், தாங்கள் எனக்கு அளித்து வாழ்த்து மடல்களையும், கையில் இருக்கும் சில போட்டோக்களையும் எடுத்துவைத்துக்கொண்டு பார்த்து பார்த்து, அந்த நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.

என்னை வீட்டிற்கு அழைத்துச்சென்று நல்ல அமுது அளித்து, அதன்பிறகு
சின்ன கிண்ணத்திலே மிளகாய் முருக்குப்பொடி கொடுத்து சாப்பிடுங்க சார் சாப்பிடுங்க சார் என்று சொல்லும் போதே என் கண்களில் நீர் வரும், மிளகாயின் காரத்தை நினைத்து.......அதை மறக்க முடியுமா?

ஒருசமயம் தங்களக்கு கடுமையான வயி்ற்றுவலி, கொட்டும் மழை வெளியே. அலுவலகமோ விடுமுறை...டிவியில் ஒரு படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது தாங்கள் ரெஸ்ட் ரூமுக்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தீர்கள்....அந்த மழையில் காரை எடுத்துக்கொண்டு குயின் நெக்லஸ் பகுதிக்கு சென்று சில மணி நேரங்கள் மகிழ்ந்தோம், அதை மறக்கமுடியுமா?

தாங்கள் மதியம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் என்னை அழைத்து ஒரு தட்டை கொண்டு வரச்சொல்லி சாப்பிடச்சொல்வீர்கள்..சாப்பிட்டபின் ஓய் லட்டு கிதர் என்று கேட்டு அதையும் கொடுப்பீர்கள்....அந்த உபசாரத்தை மறக்க முடியுமா?

தாங்கள் அன்புடன் பிரிவு நினைவுச்சின்னமாகவும் என்பிறந்த நாள் நினைவு பரிசாகவும் அளித்த கைகடிகாரங்கள் நாம் இருவரும் பழகிய நிமிடங்களை ஒவ்வொரு வினாடியும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது,

சென்னை செல்லும் போதெல்லாம் நான் சீதாவிடம் கேட்கும் ஒரே கேள்வி, நான் பேசாமல் மும்பைக்கே போய் டாக்டருடன் சேர்ந்துவிட்டால் அவருக்கு பெரு உதவியாக இருக்கும், என்பது தான்.

டாக்டர் பாபு அவர்கள் என்னை அனுப்பும் போது, சொன்ன 3 வார்தைகள் எவரிதிங் பார் குட்.......நீங்கள் என்னை சொல்லி அழைத்த 3 வார்த்தைகள்,.....நம்பி வாங்க சார்........

என்னே தங்களின் அன்பு.......என்னே தங்களின் பாசம்..........என்னே தங்களின் கருணை.........என்னே தங்களது பண்பு,,,,,,,,,, என்னே தங்களது உயர்ந்த உள்ளம்,

தலைவணங்குகிறேன் சகோதரரே
என்றும் உங்கள் அன்பில்
ரா ரா ராம்கி

மலரும் நினைவுகள் 2

ஆலயமாகும் உங்கள் மனது

முதன் முதலில் நமது அப்ஸ்ட்ராக்ட் புக் வநததும் நாம் மூவரும் சித்தி விநாயாக் மற்றும் மகாலஷ்மி ஆலயங்களுக்கு சென்று பூஜைகள் சென்று வந்தது மறக்கமுடியாதது,,

தாங்கள் அவ்வப்போது நடத்திய பெரிய பெரிய பூஜைகளில் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது, எத்தனை லஷ்மிநாரயண பூஜைகள்,,சரஸ்வதி பூஜைகள், குறிப்பாக மகாலஷ்மி ஆலயத்திலும் சித்திவிநாயக் ஆலயத்தில் செய்த பெரிய யாகங்களில் கலந்து கொண்டபோது நல்ல மன நிறைவு ஏற்பட்டது, அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொருமுறையும் ஒரு புது பூசாரி இருப்பர்,.,ஒருமுறை மகாராஷ்ட்ரா பூசாரி,,,,அடுத்து முறை பார்த்தால் மலையாள நம்பூதிரி...அடுத்த முறை பார்த்தால் நம்ம ஊரு ஐயரு........மறுமுறை தெலுங்கு வாத்தியார்.....அதிலும் ஒரு வித்தியாசத்தை படைப்பதி்ல் வல்லவர் நீங்கள்....

இன்று தாங்கள் அறிமுகப்படுத்திய சித்திவிநாயகரும் மகாலஷ்மியும் எங்களின் இஷ்ட தெய்வங்களாகி நிதத்ம் பூஜை செய்து பலன் பெற்றுவருகிறோம். இந்த இரண்டு தெய்வங்களையும் நாங்கள் மறக்ககாத விநாடிகள் இல்லை எனலாம். இவர்களின் புகைப்படங்கள் இரு இடங்களிலும் வைத்து பூஜை செய்து வருகிறோம், அதுமட்டுமல்ல எனது நெருங்கிய உறவினர்களும் இப்படங்களை வாங்கிக்கொடுத்துள்ளோம்.
அடுத்து முறை நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது, இந்த மகாலஷ்மி படம் வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தபின் எங்களுக்கு பணக்கஷ்டம் எதுவும் இல்லை என்று சந்தோஷமாக சொல்வதை கேட்டு நிறைய மகாலஷ்மி படங்களை வாங்கி எனது நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறேன். அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லும் போது, மனம் தஙகளைத் தான் நினைக்க வைக்கிறது,

தங்களின் வீட்டில் நடந்த பல பூஜைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் தந்தீர்கள் ஐயா. ஒவ்வொன்றும் ஒரு விதமாக சிறப்பாக நடைபெற்றது. இது போன்ற பூஜைகளில் ஆதித்யா அடிக்கும் லுட்டிககளையும் கண்டு ரசித்ததுண்டு. இது போன்ற பூஜைகளுக்கு தங்களது நண்பர்கள் பலரை அழைக்கும் பொறுப்பினையும் எனக்கு பல முறை தந்துள்ளீர்கள். அவர்கள் அனைவரும் தங்களின் கடவுள் பக்தியினை கண்டு அதிசயப்படுவார்கள். சிலர் இவருக்கு இதுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்குது என என்னிடம் கேட்டவரும் உண்டு...

இன்னாறை அழைக்கவேண்டும் என ஒரு லிஸ்ட் போட்டுவிடுவீர்கள்.. “ஓய் தாத்தாவை கூப்பிட்டாச்சா...” “டாக்டர் ராதிகாவை கூப்பிட்டாச்சா” என மறவாமல் பூஜை நடக்கும் நேரத்திலும் நினனவு படுத்துவீர்கள்.
“நம்ம சிவா சாருக்கு தனியா பிரசாதங்களை கட்டவேண்டும் சார்” என்றும் சொல்வீர்கள். “சாப்பிடுங்க சார்.....எனக்கு கொஞ்சம் பொங்கல் மட்டும் இன்னும் போடுங்க சார்” என்ற அன்போடு ரசித்து சாப்பிடுவீர்கள்.. பனஸ்வாடி புளியோதரை என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்... நல்ல காரசாரமாகவும் அது இருக்கும், இச்சமயத்தில் தாகங்கள் என்னை பனஸ்வாடி ஆலயத்திற்கு பலமுறை அழைத்துச்சொன்றது நினைவுக்கு வருகிறது, . அவரை எப்படி மறக்க முடியும்....அவரும் எங்களது பிரார்த்தனையில் உள்ளார். இந்த மூன்று கோவில்களுக்கும் நான் பலமுறை தனியாகவும், குடும்பத்தினர் வரும் போது அவர்களோடும் சென்று சாமி தரிசனம் செய்ததுண்டு. நான் உங்கள் ஆள் என்பதால் சிறப்பாக கோவில்களில் எங்களை கவனிப்பர்.......நல்ல தரிசனமும் கிடைக்கும்..

தினமும் பலமணிநேரம் கடவுளுக்கு அர்ச்சனைசெய்வது, மாலையிடுவது. ஊதுவத்தி ஏற்றுவது, கற்பூரம் காட்டுவது. பிரசாதம் படைப்பது என நித்திய பூஜைகளில் தங்களது ஈடுபாடு என்னை மிகவும கவர்ந்தது. எத்தனை கூட்டம் மருத்துவ மனையில் இருந்தாலும் தாங்கள் இந்த நித்ய கர்மாக்களை செய்ய தவறியது கிடையாது, முன்பு காரைவிட்டு இறங்கும் முன் மனமார பிரார்த்தனை மற்றும் மந்திரங்கள் பல ஓதிவிட்டுததான் காரைவிட்டு இறங்குவீர்கள்.

ஒரு முறை நான், தாங்கள் மற்றும் லஷ்மி இங்கு பூஜை முடிந்து மாட்டுங்கா ராமர் கோவிலுக்கு சென்றோம். பிறகு அதிரடியாக ஒரு ஓட்டலுக்கு சென்றீர்கள்.. அப்போதுதான் பூஜை முடித்திருந்ததால் தாங்கள் மேல் சட்டை கூட போடவில்லை...அப்படியே திறந்த மார்போடு ஒட்டலுக்கு நுழைந்ததும் ஏதோ ஒரு பெரிய சாமிஜி வந்துவிட்டதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினீர்கள்....இதுபோன்ற தைரியம் த்ங்களுக்குமட்டும் தான் வரும்,

அவ்வப்போது பட்டை போட்டுக்கொண்டு நோயாளிகளை பார்ப்பீர்கள்...
திருநீ்ற்றை அப்படியே கையில் எடுத்து உடல் முழுவதும் சிவனை நினைத்து போட்டுக்கொள்வீர்கள்.........எத்தனை பிரசாதங்கள் எத்தனை பிரசாதங்கள் தங்களுக்கு வரும்........

மனதை ஆலயமாக வைத்திருப்பதில் வல்லவர் நீ்ங்கள்,
அப்பா இதை படித்தால் ராம்கி ஏன் இவ்வளவு BIT ராஜக்கு போடுகிறான்...இங்கே வரலாம் என நினைக்கிறானோ என்று சிந்திக்க துவங்கிவிடுவார்.
நமது நட்பினையும். நமது அன்பையும், நமது சகோதர பாசத்தையும், யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நம் இருவரை தவிர,., என்ன சரிதானா??? (அப்பாவும், அம்மாவும் இக்கடிதங்களை கட்டாயம் படிக்க வேணடும் என்பது தான் என் வேண்டுகோள்), ஆகவே ஆலயமாகும் உங்கள் மனது,


மலரும் நினைவுகள் 3

பார்ட்டிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

வேர் இஸ் தி பார்ட்டி டு னைட்

நான் மும்பை வந்த சமத்தில் ஒரு நாள் தாங்கள் தங்கி இருக்கும் லாயட்ஸ் கார்டனில் ஒரு பார்ட்டி இருப்பதாகவும் “சவுத் இந்தியன் முத்துசாமி சமையல் சார் வாங்க..” என்று என்னையும் அழைத்துச்சென்றீர்கள்.
அது டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் இல்லத்துப் பார்ட்டி என நினைக்கிறேன்.. என்னை அங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தினீர்கள். அந்த பார்ட்டி ஏற்பாது செய்த திரு,முத்துசாமி அவர்களையும் எனக்கு தனியாக அறிமுகப்படுத்தினீர்கள். (பின்பு இவர் எனது நல்ல நண்பர் ஆகிவிட்டார்),
இந்த முதல் பார்ட்டியை மறக்க முடியாது. இதற்கு முன் சக ஊழியர் சஞ்ஜய்யின் திருமண வரவேற்பில் குடும்பததோடு கலந்து கொண்டேன், அன்று இரவு நான் குடும்பத்தோடு முதன் முதலில் தங்களது இல்லத்துக்கு வந்தோம், அன்று இரவு 11 மணிக்கு ஸ்ரீராமை குஷிபடுத்த வேண்டும் என்று ஸ்நோபால் விளையாட அழைத்துச்சென்றீர்கள், பிறகு இரவு 1 மணிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து எங்களை தாங்களே காரை ஓட்டி எங்கள் இருப்பிடத்திற்கு இறக்கிவிட்டீர்கள். அப்போது ஆதித்யாவும் ஸ்ரீராமுக்கு கம்பெனி கொடுக்க வந்திருந்தார். அதை மறக்கமுடியுமா?

அடுத்து தாங்கள் முதன் முறையாக அகில இந்திய கண் மருத்துவர்கள் சொசைடிக்கு விஞ்ஞானக்குழு தலைவராக தேர்ந்த எடுத்து சமயத்தில் ஒரு பெரிய பார்ட்டியினை ஏற்பாடு செய்திருந்தீர்கள். இதற்காக நான் முதன் முதலில் ரூ3000 கொடுத்து பார்ட்டி சுட் வாங்கி அணிந்தேன். பார்த்தவர் அனைவரும் பாராட்டினர் (எனது டிரஸ்ஸை). இதுபோன்று விலை உயர்ந்த ஆடையினை என் திருமணத்திற்கும் எடுத்ததில்லை. இந்த பார்ட்டியில் நிறைய விஐபிக்கள் கலந்துகொண்டார்கள். அவர்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினீர்கள், இந்த பார்டியினையும் மறக்கமுடியாது.

தாங்கள் இரண்டாவது முறையாக அகில இந்திய விஞ்ஞயானக்குழு தலைவராக வெற்றிபெற்றதற்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தீர்கள். அது தான் நான் கலந்து கொண்ட முதல் டான்ஸ் பார்ட்டி.....ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அந்த ஆட்டத்தின் நடுவே “இந்த வெற்றிக்கு ராம்கியும் முக்கிய காரணம் அவரை மேலே தூக்குங்கடா….” என்று ஒருவர் இந்தியில் குரல் கொடுக்க என்னை அப்படியே தங்கள் தோள்கள் மீது உட்கார வைத்து ஒரு கூட்டமாக ரவுட் அடித்தீர்கள்....ஓ என்ற சப்தம் வேறு....இதை மறக்கவே முடியாது.. ஆண் பெண் வித்யாசமின்றி பலபேருடன் இதில் கூத்தடித்தது மறக்கமுடியாது. அடுத்த பார்ட்டி எப்போது என்று ஏங்க வைத்த பார்ட்டி இதுதான்.

ஒரு முறை நான், திரு கருண் அவர்களோடு இணைந்து தங்களுக்கு குஷி விருது கிடைத்ததும் அப்போதய கவர்னர் திரு எஸ். எம். கிருஷ்ணா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தங்களை கௌரவப்படுத்தினோம். அவ்விழாவும் சிறப்பாக நடந்தது. பலரும் தங்களைப்பற்றி வாழ்த்தி பேசினார்கள். கவர்னர் கிளம்பும் போது என்னை அவர் அருகில் அழைத்து, “இந்த விழாவினை இவ்வளவு சிறப்பாக செய்தவர் இவர் தான் ராம்கி..” என்று அவருக்கு அறிமுகப்படுத்தினீர்கள். “எக்ஸ்லண்டு... வாழ்த்துக்கள்” என்று கவர்னரும் என்னுடன் கை குலுக்கினார். அன்று இரவு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தோம். இந்த விழாவினையும மறக்க முடியாது,


வாட்டர் பார்க் பிக்னிக் பார்ட்டி,... சுமார் ஒரு மணி நேரம் பஸ்ஸில் மும்பையிலிருந்து பயணித்தோம். பஸ்ஸில் ஒரே ஆர்ப்பாட்டம்....”தமிழில் ஏதாவது பாடுங்க சார்...”என்ற அழைப்பு விடுத்தீர்கள்....பார்க்கில் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் விளையாட்டு... ஆண்களும் பெண்களும் சேர்ந்து அந்த தண்ணீரில் சொட்ட சொட்ட விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியுமா?

வாழ்வில் என்ஜாய் பண்ண வேண்டும் என்றால் அது மும்பையில் தான் முடியும். என்பதற்கு எடுத்துக்காட்டாக அடுக்கடுக்காக பார்ட்டிகள்...பல பார்ட்டிகள் ஆதித்ய ஜோத் மருத்துவமனையின் மொட்டை மாடியில் நடந்தபோது அனைத்திற்கும் முதல் ஆளாக என்னை அன்போடு அழைப்பீர்கள். “வந்திடுங்க சார் முத்துசாமி தான் சாப்பாடு” என்பீர்கள். இது போன்ற பல பார்ட்டிகளுக்கு என்னையே ஒருங்கினைப்பாளராக இருக்கச்சொல்லி அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச்சொன்னீர்கள்... இது போன்ற பார்ட்டியின் போது பலரை தொலைபேசியில் பலமுறை அழைத்திருந்தால், பார்ட்டிக்கு வந்த பலர், “யாரு இந்த ராம்கி...வந்திருக்காரா...பாக்கமுடியுமா” என உங்களிடம் கேட்கும் போது, “அட, என்னங்க நீங்க இன்னும் ராம்கியை சந்திக்கவில்லையா....உங்க பக்கத்திலேயே அமைதியா நின்றுகொண்டு இருக்கிறாரே அவர் தான் ராம்கி..” என்று தாங்கள் சொல்லும் போது ஓ என்றுபலர் ஆச்சரியப்பட்டு என்னை நலம் விசாரிப்பார்கள், பலர் நன்றி சொல்வார்கள்.. அவர்களது வீட்டுக்கும் அழைப்பார்கள்.....அவற்றை மறக்க முடியுமா?


பல முறை பல தியேட்டர்களிலேயே பார்ட்டி ஏற்பாடு செய்யும் முழு பொறுப்பினையும் என் மீது நம்பிக்கை வைத்து செய்யச்சொன்னீர்கள். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் திரைப்படம். பின்பு மதிய சாப்பாடு அல்லது டின்னர் என எல்லோரும் அதிசயப்படும்படி அசத்தினோம்.

பலர் தங்களை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டும்போதும், நன்றி சொல்லும் போதும், “நான் எதுவுமே செய்யலே.... இதோ இந்த ராம்கி தான் முழு ஏற்பாடையும் எனக்காக செய்தவர்..அவருக்குத் தான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும்” என்று முழுமனதுடன் சொல்லி உங்களுக்கு வந்தப் பாராட்டை என்பக்கம் திருப்புவீர்கள். என்னே உயர்ந்த உள்ளம் தங்களுக்கு

ஒரு பார்ட்டியில் ஒரு பெரியர் கிளம்பும் போது, “சார் இந்த ராம்கியையும் அவரது எற்பாடுகளையும் உங்களிடம் சொல்லாமல் போக எனக்கு மனசு வரலே... இவரை எப்பவும் விடாதேங்க சார்....இவர் என்னை நன்றாக கவனித்துக்கொண்டதாலே இதை சொல்லலே..,, அவரை புகழ்ந்து பேசி எனக்கு என்ன ஆகப்போவுது? நான் பல பார்ட்டிகளில் கலந்து கொள்பவன்,. ராம்கியின் ஏற்பாட்டில் அவர் சின்ன சின்ன விஷயத்தி்லும் கவனம் செலுத்தி சிறப்பா ஏற்பாடு செய்துவருகிறார்” என்று மனநிறைவோடு பாராட்டும் போது, தங்களுக்கு அருகில் இருக்கும் நான் நெளிந்ததுண்டு....”யார் இவரை விடப்போறாங்க.....வாழ்த்துக்கள் சார்..கீப் இட் சார்” என்று கைகுலுக்குவீர்கள். இந்த பெருந்தன்மை சிலருக்குத்தான் வரும்.


தங்களது அப்பா அம்மாவின் 51 ஆண்டு திருமண நாள் விருந்தும் சிறப்பாக நடந்தது. மிக குறிப்பிட்ட நபர்கள் தான் கலந்துகொண்டனர். இதற்கு அம்மாவை வீல்சேர்ரில் தூக்கிவந்து கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்திற்கும் அதன் மாடியில் உள்ள மண்டபத்திலும் அமர வைத்து சிறப்பாக விருந்தளித்தோம். இதையும் மறக்கமுடியாது?

எந்த பொறுப்பினை ஓப்படைத்தாலும் அதை இவர் “சரியாக” செய்வார் என்பதை விட “சிறப்பாக” செய்வார் என்ற நம்பிக்கையில் பல வாய்ப்பினை எனக்கு அளித்து கௌரவப்படுத்தினீர்கள். இதனால் பல உயர்தவர்களின் நட்பும், அன்பும் கிடைத்தது. அவர்களும் தங்களை மறுமுறை சந்திக்கும் போது “ராம்கி எப்படி இருக்கிறார்” என்று உங்கள் குடும்ப உறவினர் ஒருவரை விசாரிப்பது போல் விசாரிப்பார்கள். அதையும் என்னிடம் பகிர்ந்து கொள்வீர்கள். போனில் பேசும் போதும் கூட யாராவது என்னைப்பற்றி தங்களிடம் விசாரித்தால் உடனே, “இதோ பக்கத்தில் தான் ராம்கி இருக்கிறார்,. அவரோடு பேசுங்கள்” என்று சட்டென தங்கள் போனை என்னிடம் கொடுத்து பேசச்சொல்வீர்கள்...

தங்களது பிறந்த நாள் பார்ட்டிகளிளும், திருமண நாள் பார்ட்டிகளிலும், ஆதித்ய ஜோத் மருத்துவ மனையின் ஆண்டு விழா, மற்றும் திறப்பு விழா பார்டிகளிலும் கலந்து கொண்டு மகிழ்ந்த நாட்களை
அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாமா என்ன?

மற்ற பார்ட்டிகளுக்கு தாங்கள் செல்லும் போது நான் சொல்லும் ஐடியாக்களை பாராட்டி அதை உடனே செய்யும் படியும் சொல்வீர்கள். வாழ்த்து அட்டையில் புகைப்படங்களை ஒட்டுவது, தமிழில் சின்ன கவிதை அல்லது டயலாக் எழுதுவது போன்றவற்றையும் ரசிப்பீர்கள். தாங்கள் மகிழ்தது மட்டுமின்றி அதனை பெற்றவர் சொன்ன வார்த்தைகளையும் அவர்களது சந்தோஷத்தையும் என்னிடம் மறவாமல் அடுத்த நாள் சொல்லி மகிழ்வீர்கள். “சார் இன்னாருக்கு பிறந்த நாள்....இன்னாருக்கு திருமணநாள்....என்ன பரிசு கொடுக்கலாம்...நீ்ங்களே செலக்ட் செய்து வாங்கிகொண்டு வந்துவிடுங்கள்” என்பீர்கள். பல முறை பட்டுபடவைகள் கூட நான் தேர்வுசெய்து கொண்டு வந்தபோதும் ‘ரொம்ப நல்லா இருக்கு சார்..” என்பீர்கள்.

தங்களது பாராட்டும் மகிழ்ச்சியும் சும்மா ஒரு வாய்பேச்சாக இல்லாமல், உங்கள் உள்ளத்திலிருந்து வெளிவரும் உணர்வுகளாக இருப்பதை நான் அறிவேன். தங்கள் எனக்கு அளித்த ஊக்கமும், பாராட்டுக்களும் தான் என்னை உங்களோடு மீண்டும் சேர்ந்து கைகோர்த்து இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே நல்ல எதிர்காலம் என்று மனதில் பாடவைத்தது.

ஒரு நாள் காலை நாம் அனைவரும் ஒரு சின்ன அருவிக்கு சென்றோம். நம்முடன் திரு சிவா ஐபிஎஸ் மற்றும் திரு நம்பிராஜன் போன்றவர்களும் நம்முடன் வந்தனர். மலைமேலே சில மணி நேரங்கள் நடந்து சென்று வந்தோம். அப்போது அந்த மலை உச்சியில் சுடச்சுட காபி, டீ, காலை சிற்றுண்டி என ஏற்பாடு செய்து அசத்தினீர்கள். அப்போது அந்த அருவியில் குளித்தும்.. சிறிய ஆற்றைக் கயிறு கட்டி கடந்தும் பசுமையையும் இயற்கை காட்சிகளையும் மனம் குளிர கண்டு ரசித்தோமே அதை மறக்க முடியுமா?

மகாராஷ்ட்ரா முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் ஷிந்தே, நடிகை ஷபினா ஆஸ்மி, ஐஸ்வர்யா ராய், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், எல் அண்டு டி சேர்மன் அனில் நாயக் போன்ற பல மிகப்பெரிய விஐபிக்கள் தங்களை சந்திக்க வரும் போது எல்லாம் என்னை அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தினீர்கள்.,

ஒரு நாள் இரவு நாங்கள் வீட்டிற்கு புறப்படும் நேரம் தாங்கள் குடும்பத்தோடு திருப்பதி சென்றிருந்தீர்கள், அப்போது திடீரென டெல்லியிலிருந்து பிரதமர் அப்துல் கலாம் அடுத்த நாள் மாலை வரப்போகிறார் என்று தங்களுக்கு போன் வர தாங்கள் எனக்கு போன் செய்து அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டீர்கள்...நீங்கள் போனை வைப்பதற்குள் பல போலீஸ் உயர் அதிகாரிகள் படைதிரண்டு அதிரடியாக மருத்துவமனைக்கு நுழைந்து அந்த தெருவையே தங்கள் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக் கொண்டார்கள்...ஆ..அந்த நிகழ்ச்சியை மறக்க முடியுமா..அவ்வளவு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தாலும் நான் சோகமாகவே இருந்தேன். காரணம் அன்று இரவே நாங்கள் அகில இந்திய மாநாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தாலும் ஒரு முறை உள்ளே வந்துவிட்டால் பின் திரு. கலாம் அவர்கள் வெளியே செல்லும் வரை நாங்கள் வெளியே வரமுடியாது, அப்படியானல் நாங்கள் செல்லவேண்டிய ரயிலை பிடிக்க முடியாது என்ற காரணத்தால் திரு, கலாம் அவர்களை சந்திக்க முடியாமேலே போய்விட்டது. இந்த வருத்தத்தை தாங்கள் தான் போக்க வேண்டும் என்பது என் ஆசை.

அந்த நாள் ஞாபகம் செஞ்சிலே வந்ததே அண்ணே...அண்ணே.............

ராம்கி.

No comments:

Post a Comment