K.R.RAMAKRISHNAN (RAMKI/Kumar)-Executive Coordinator - AIOS. CHANDAMAMA, DOLTON PUBLICATIONS குரூப்பில் 16 வருட அனுபவம். Written 300+ articles, interviews, shortstories, titbits, jokes etc. Organized National Conferences, Events, Functions, Press meets & active in PR activities. Mem: Kerala Cartoon Academy, Indian Penpals League. M: 9790684708. : wadalaramki@yahoo.co.in. Residing at Porur; working at Coimbatore The Eye Foundation
Saturday, December 12, 2009
"நம்பி”னோர் கைவிடப்படார்
நம்பி”னோர் கைவிடப்படார்
PORUR RAMKI
மும்பை ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ். நடராஜன் என்னை மும்பைக்கு வருமாறு அழைத்த முதல் சந்திப்பில் என்னிடம் விடைபெறும் போது சொன்ன வார்த்தை
“நம்பி” வாங்க சார்.......”
பின் ஆறுவருட காலம் டாக்டர் நடராஜன் அவர்களுடன் பணி செய்தபோது அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான “நம்பி” என்று செல்லாமாக அழைக்கப்படும் திரு. நம்பி ராஜன் என்பவரை ஒருமுறை அறிமுகப்படுத்தி வைத்தார். மும்பை மாதுங்கா கிங் சர்க்கிளில் இவரது அரோரா தியேட்டர் உள்ளது. ஒரு முறை நான் சயான் செல்லும் வழியில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. “என்ன சார் தியேட்டர் பக்கமே வரமாட்டேங்கரீங்க..” என்று அன்போடு கேட்டார். பிறகு ஒரு சமயம் அவரது தியேட்டருக்கு சென்றபோது என்னைப்பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் கேட்டறி்ந்தார். இப்படியாக எங்களது நட்பு துளிர்விட்டது.
டாக்டர் நடராஜன் தன் தமிழ் நண்பர்களுக்காக அவ்வப்போது தீபாவளி மற்றும் பொங்கல் சமயங்களில் தமிழ் திரைப்படத்திற்கு 150/200 டிக்கெட் பதிவு செய்து அழைத்துச் செல்வார், அப்படி ஒரு முறை ஒரு படத்திற்கு சென்ற போது அவரது தமிழ் நண்பர்கள் அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் பல ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளும், பெரிய பெரிய நிர்வாகத்தில் இருப்பவர்களும் அடங்கும். படம் முடிந்ததும் இரவு விருந்து அளித்து அனைவரையும் கௌரவிப்பதில் மன்னன் டாக்டர் அவர்கள் என்றால் மிகையாகாது.
அடுத்த முறை ஒரு படத்திற்கு ஏற்பாடு செய்த போது அனைவரையும் போனில் அழைத்து, அவர்களை தியேட்டரில் வரவேற்கும் பொறுப்பினையும் என்னிடம் தந்தார் டாக்டர் நடராஜன் அவர்கள். ஒரு முறை திரு. நம்பி ராஜன் அவர்களின் திரையங்கில் ஏற்பாடு செய்ய டாக்டர் விரும்பினார். அப்போது டிக்கெட் புக் செய்வது முதல், இரவு விருந்து வரை ஏற்பாடு செய்ய திரு.நம்பி ராஜன் அவர்களுடன் தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்தேன். அப்போது எங்களது நட்பு நன்கு வளர்ந்து, ஒரு சகோதரர் போல் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். திரு. நம்பி ராஜன் அவர்களுக்கு கண் செக்கப் செய்ய வேண்டிய சமயத்தில் நான் மருத்துவ மனனையில் இருக்கிறேனா என்று கேட்டு அறிந்தபிறகு தான் வருவார். அப்போது அவருடன் கம்பெனி கொடுத்து அவர் செல்லும் வரை அவருடன் இருக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. பிறகு நான் எப்போது அரோரா தியேட்டருக்கு சென்றாலும் கிரீன் கார்டு தான்..
நானும் டாக்டரும் பல படங்களை அரோரா திரையரங்கில் பார்த்து மகிழ்ந்துள்ளோம். அப்போது டாக்டருக்காக பிளாக் காபி சுடச்சுட ஏற்பாடு செய்வார் திரு நம்பியும், அவரது சகோதரர் ராசுவும்.
நாள்பட நாள்பட எங்களது நட்பு ஒரு சகோதர நட்பாக மாறியது. அவரது 25வது திருமணநாள் பார்ட்டிக்கு என்னை அழைத்தார். வெறும் விருந்தாளியாக செல்லாமல் விருந்தினர்களை வரவேற்பது, வந்த பெரிய விருந்தாளிகளை கவனித்துக்கொள்வது என ஆர்வமாக ஈடுபட்டேன். நிகழ்ச்சியின் கடைசி வரை அவருடன் இருந்து சின்ன சின்ன உதவிகளை செய்தேன். பிறகு அனைவரும் கிளம்பிய பிறகு நான் கடைசியில் தனியே இரவு 12 மணிக்கு நடப்பதை பார்த்த திரு நம்பிராஜன் தன் காரை நிறுத்தினார், நான் நடந்து செல்கிறேன் என்று பலமுறை சொல்லியும் விடாமல், என்னையும் அவர்காரில் வரச்சொல்லி வீட்டில் இறக்கி விட்டு நான் செய்த சிறிய உதவிகளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார். காரில் இருந்த அவரது திருமதியிடம் என்னைப்பற்றிய விவரங்களை சொல்லி மீண்டும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார். அந்த பார்ட்டியின் போது அவரது மகன் கணேஷ் மற்றும் இதர குடும்பத்தாரோடு பழகும் அறிய வாய்ப்பு கிடைத்து. அந்த விருந்தை என்னால் மறக்கமுடியாது.
பிறகு அவரது மகளுக்கு திருமணம் ஏற்பாடு ஆனதும் எனக்கும் முதலில் தெரிவித்தார். கட்டாயம் திருமண வரவேற்புக்கு வந்துவிடவேண்டும் என்றார். நான் இதுவரை அவ்வளவு பெரிய திருமண விருந்தினை மும்பையில் கண்டதில்லை.. அவ்வளவு உணவு வகைகள்...சுமார் 400ம் மேற்பட்ட சாப்பாட்டு வகைகள். ஒரு பெரிய மைதானம் முழுவதும் சாப்பாடு ஐடங்கள்தான். அவை அனைத்தும் சவுத் இந்தியன். நார்த் இந்தியன் என பலவகைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விருந்திலும் அவரது விருந்தினர்களை அவரது சகோரதருடன் இருந்து கொண்ட வரவேற்றேன். பாதி பாம்பே மக்கள் வந்தது போன்று கூட்டம். நடிகர் விஜயகாந்தும் கலந்து கொண்டதால் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். நான் கடைசியல் விடைபெறும் போது நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.
.“நான் ஊருக்கு செல்லலாம் என இருக்கேன்” என்று எப்போதாவது அவரிடம் சொல்லும் போது, எப்போதும் அவர் சொல்லும் வார்த்தை, “ராம்கி, டாக்டர் உங்களை நிச்சயம் விடவே மாட்டார். உங்களை ரொம்ப அவருக்கு பிடிச்சுப்போச்சு, உங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆயிடுச்சு” என்று தோல்களை குலுக்கியவாரு கிண்டல் அடிப்பார், “இங்கேயே இருந்திடங்க சார்” என்பார். கம்யூட்டரில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்பார். தாமிரபரணி தயாரிப்பாளர் எனக்கு தெரிந்தவர்தான் என்றதும். அப்படத்தை மும்பையில் திரையிட என் பெயரில் படத்தை எடுத்ததாகச் சொன்னார். நன்றாக ஓடிய போது செக்கும் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால் கொடுக்கவில்லை.....(இப்போதாவது அனுப்புங்க சார்....) சினிமா வியாபாரத்தில் நம்பியை மிஞ்சமுடியாது என்பார்கள். அந்த அளவுக்கு ஒரு படத்தை எடைபோடுவதில் வல்லவர் திரு நம்பி அவர்கள். வியாபாரம் பேசி படத்தை எடுப்பவதி்ல் இவர் வல்லவர் என்றால் அவரது சகோதரர்கள் பட விநியோகம் மற்றும் தியேட்டரை நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள். நம்பி அவர்கள் எப்போதும் காட்டன் வெள்ளை சட்டையைத்தான் அணிவார். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து சட்டைகளை மாற்றுவாராம். அவரது மனம் போல் அவர் அணியும் சட்டைகளும் துய்மையாக இருக்கும். இவரது ஒரே கவலை இவருக்கு தலைக்கு மேலேதான்......சார் உங்க தலை இப்படி இருந்தாதான் அழுகு என்பேன் நான். இவ்வாறு மாறிமாறி கிண்டல் செய்து கொண்டாலும் இருவருமே கோபித்துக்கொள்ளமாட்டோம்.
மும்பை அருகே சிவாஜி படபிடிப்பு நடந்த போது என்னையும் ரஜினியை சந்திக்க அழைத்தார். பிறகு அவர் ரஜினியை சந்தித்த விவரத்தை சொல்லச் சொல்ல அதை அப்படியே மனதில் பதிவு செய்து குங்குமம் இதழுக்கு அனுப்பினேன். அந்த கட்டுரை அப்போது மிகவும் பிரபலம் அடைந்தது.
மும்பையில் சிவாஜி வெளியாவதற்கு முதல் நாள் திரு. நம்பிராஜன் அவர்கள் எனக்கும் போன் செய்து “இன்று இரவு சிவாஜி ஸ்பெஷல் ஷோ இருக்கு சார்..கட்டாயம் வந்திடுங்க” என்றார். அங்கே சென்றால் மொத்தமே அவரது குடும்பத்தார் மட்டும் தான் இருந்தனர், அந்த அளவுக்கு நெருக்கமாக எங்களது நட்பு வளர்ந்தது.
பிறகு இவர் ரஜினி, அமிதாப் சந்திப்பினையும் மும்பையில் எற்பாடு செய்திருந்தார், அந்த செய்தியினை நான் தினமலர் முதல் பல பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எனது எழுதும் திறனை பாராட்டினார். இவர் கிண்டல் செய்வதில் வல்லவர்... கிண்டலி்லும் உண்மையை சொல்லுவார் நான் எப்போது சென்றாலும் ஏதாவது ஜோக் அடித்து மற்றவர்களை சிரிக்கவைப்பார். பழைய பாடல்கள் என்றால் திரு நம்பிக்கும், எனக்கும் உயிர். அவரவது கம்யூட்டரில் அடிக்கடி பழைய பாடல்களை போட்டு இருவருமே மெய்மறந்து ரசிப்போம். திரு். நம்பிராஜனுக்கு அரசியலில் நுழையும் விருப்பமும் இருந்தது.
டாக்டர் நடராஜன் ஒரு மலை அறுவியில் காலை பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். நான், டாக்டர், திரு. நம்பி ராஜன், திரு. சிவானந்தன் ஐபிஎஸ் மற்றும் பலர் ஒரே காரில் பயணம் செய்து பல மைல்கள் மலைமீது நடந்து சென்றோம். ஒரே ஜாலியாக இருந்தது. இச்சம்பவத்தில் எங்கள் நட்பும் மலையென உயர துவங்கியது எனலாம்.
இவரது இளய சகோதரர் ராசு. இவர் என்னை எப்போதுபார்த்தாலும் கேட்டும் ஒரு கேள்வி.... “என்ன சார் ஆளையே காணோம்” என்பது தான். காலையில் பார்த்திருப்போம். இரவு சந்தித்தால் அப்போதும் அதையே தான் கேட்பார். இவருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர் சற்று யூத் டைப்... எனக்கு டிக்கெட் வேண்டும் என்றால் நான் இவரிடம் தான் போன் செய்து சொல்வேன். “கேக்காதீங்க சார்….. வாங்க கிளம்பி மொதல்ல” என்பார். இருவருமே உபசரிப்பதில் வல்லவர்கள். பல முறை இவருடன் இரவு சாப்பிட்டு இருக்கிறேன், பிறகு பார்க்கில் நேரம்தெரியாமல் இவரது நண்பர்களுடன் அரட்டை. நான் அவருடன் பலமுறை சித்திவிநாயகர் ஆலயத்திற்கு இரவு 9மணிக்கு மேல் சயானிலிருந்து நடந்துசென்று தரிசனம் செய்து வருவோம். பிறகு ஓட்டலில் சாப்பிடுவோம். இரவு வீட்டிற்கு வர 12 ஆகிவிடும். மாலை நேரங்களில் சாப்பிட்டுவிட்டு இருவரும் வாக்கிங் செல்வோம். சில சமயம் ராசு அவர்களுடன் அரோரா தியேட்டரில் இரவுக் காட்சியின் இடைவேளையின் போது நான் ஐஸ்கிரீம், சமோசா விற்றதும் உண்டு,
திரு நம்பிராஜனின் குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் அன்போடு பழகினார்கள். இவரது மகளும் மகனும் அன்போடும் கனிவாகவும் பேசுவார்கள். என் குடும்பத்தைப் பற்றி அவ்வப்போது விசாரிப்பார்கள். “என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காம கேளுங்க சார்….” என்பார் திரு. நம்பி. பல இந்தி மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் இவர்களது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். இவரது இல்லத்திற்கு சிவாஜி குடும்பத்தினர் பலமுறை வந்து செல்வதை கண்டேன்.
இந்த மாலை நேர நம்பி மற்றும் ராசு சகோதர நண்பர்களை நான் வாழ்நாளில் மறக்கமுடியாது. அத்தனை அன்பு, அத்தனை பாசம். ஒரு பந்தா இல்லாத திரைக்குடும்பத்தினர்கள். இவர்களை அறிமுகப்படுத்திய டாக்டர் நடராஜன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல மறப்பதா? நோ நெவர்............
ராம்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment